சிறகடிக்க ஆசை: வீட்டிற்கு வந்த சத்யாவுக்கு முத்து போட்ட போடு! விஜயாவால் ரோகிணிக்கு வந்த பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மே 21 ஆம் தேதிக்கான எபிசொடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் மீனா மற்றும் முத்துவின் திருமண நாள் விழாவிற்கு வீட்டிற்கு வந்த சத்யாவிற்கு முத்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அதுபோல ரோகிணியின் அம்மா பற்றி விஜயா பேசியதால் புது பிரச்சனை தொடங்குகிறது.
இந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் சத்யா புது துணிமணிகளை வாங்கிக் கொண்டு வந்து நிற்பதை பார்த்து முத்து கோபப் பட மீனா முத்துவின் கையை பிடித்து நிலைமையை சமாளிக்கிறார். பிறகு அண்ணாமலை சத்யாவை நீ ஏதோ காலேஜ் போயிருக்கிறதா சொன்னாங்க என்று கேட்க அதற்கு சக்தியா ஆமா நான் காலேஜுக்கு தான் போயிருந்தேன்.

இன்னைக்கு அக்கா மாமாவுக்கு கல்யாணம் நாளில்லையா.. அதனாலதான் நானே சுயமா சம்பாதித்த பணத்தில் எல்லாத்தையும் வாங்கிட்டு வந்திருக்கிறேன் என்று வீட்டிற்குள் வர முத்து மீனாவின் கையை உதறி கொண்டு முன்னாடி வந்து சத்யா கொடுத்த பாக்ஸை பிரித்து சட்டையை எடுத்து போட்டு என் மச்சான் வாங்கி கொடுத்த சட்டையை போடாம இருக்க முடியுமா? எனக்கு புடிச்ச கலர்ல எனக்கு ஏத்த மாதிரி கரெக்டா இருக்குடா என்று சிரித்துக் கொண்டே சொல்ல சத்தியாவின் முகம் மாறுகிறது.
ஏதாவது பிரச்சனை நடக்கும் என்று எதிர்பார்த்த சத்யாவிற்கு முத்துவின் நடவடிக்கை ஏமாற்றமாக இருக்கிறது. பிறகு சத்யா வாங்கிட்டு வந்த மாலையை மீனாவும் முத்துவும் கழுத்தில் போட்டுக் கொண்டு உங்களை யாருக்காவது மாலை வாங்கணும்னு தோணுச்சா என் மச்சான் வாங்கிட்டு வந்திருக்கிறான் என்று பெருமையாக பேசுவது போல பேச அதை பார்த்த விஜயா மற்றும் ரோகினி இருவரும் இங்கு என்ன நடக்கிறது...?
சத்யா கையை முத்து உடைச்சிருக்கான் ஆனாலும் இவங்க ரெண்டு பேரும் இப்போ இயல்பா பேசுகிற மாதிரி பேசுறாங்க என்று சொல்ல அதற்கு விஜயா இதுல ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு என்று சொல்கிறார். பிறகு மீனாவின் வீட்டில் இருந்து எல்லோரும் வெளியே போக அவர்களை வழி அனுப்ப வந்த முத்து சத்யாவை நிற்க வைத்து இதெல்லாம் நீ உன் அக்கா மேல இருக்குற பாசத்துல வாங்கிட்டு வரல என்னை வெறுப்பேத்தி பிரச்சனை பண்ண தான் வாங்கிட்டு வந்திருக்கிறேனு எனக்கு நல்லா தெரியும்.
எனக்கு உன்ன பார்த்ததும் கோவம் வந்தது அப்படியே செவுள் மேலே ஒன்னு வைக்கணும் போல தோணுச்சு. அப்படி பண்ணா உன் அக்கா கஷ்டப்படுவா என் பொண்டாட்டி கஷ்டப்படுறத என்னால பார்க்க முடியாது. இன்னொரு முறை என்னை வெறுப்பேத்த இந்த மாதிரி பண்ணுனா கைய மட்டும் இல்ல காலையும் உடைத்து போட்டுருவேன் போடா என்று அனுப்பி வைக்க இதை எல்லாம் மீனா பார்த்து விடுகிறார்.
அடுத்த கட்டத்தில் ரோகினி கிச்சனில் இருக்கும் போது விஜயா இவங்க எல்லாரும் சந்தோஷமா ஃபேமிலியா சிரிச்சு பேசிட்டு இருக்காங்க. உனக்கும் உங்க அம்மா இருந்திருந்தால் இப்படி அடிக்கடி வந்து போய் இருந்திருப்பாங்க என்று சொல்ல விஜயா வெளியே போனதும் ரோகிணி அம்மாவுக்கு போன் போட்டு நலம் விசாரித்து நான் உன்னையும் கிருஷையும் பார்க்க இந்த வாரத்தில் வருகிறேன் என்று சொல்கிறார்.
அடுத்த கட்டத்தில் மீனாவும் முத்துவும் மாடியில் படுக்கப் போகிறோம் என்று கிளம்ப பாட்டி வேண்டாம் கீழே நீங்க ரூமில் படுத்துக்கோங்க என்று சொல்ல, அதற்கு விஜயா இல்ல வேண்டாம் அவங்க மொட்டைமாடி தான் நல்லா இருக்குன்னு சொல்றாங்களே அங்கேயே தூங்கட்டும். இங்க இருக்கிற ரெண்டு மருமகள்களும் நாளைக்கு காலையில் வேலைக்கு போகணும் அவங்களுக்கு மாடி சரியா இருக்காது என்று சொல்ல,
ஸ்ருதி நாங்க வேணும்னா மாடிக்கு போய் தூங்கிக்கிறோம் என்று சொல்ல முத்து மீனாவும் வேண்டாம் என்று மாடிக்கு கிளம்ப போகும்போது ஸ்ருதி தான் வாங்கி வைத்த டெண்டை கொடுத்து அனுப்புகிறார். மாடியில் முத்துவும் மீனாவும் ரொமான்ஸ் செய்து பாட்டு பாடிக்கொண்டு திருமண நாளை கொண்டாடுகின்றனர்.
அதை தொடர்ந்து பாட்டி அண்ணாமலை இடம் ரூம் பிரச்சனை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது அண்ணாமலை நானே மொட்டைமாடியில் ஒரு ரூம் கட்டனும்னு இருக்கிறேன் என்று சொல்ல அதற்கு விஜயா ஸ்ருதியோட அம்மாவை ரூம் கட்டி தாராங்கன்னு சொன்னாங்களே என்று சொல்ல அதற்கு பாட்டி நம்ம வீட்ல அவங்க எதுக்கு ரூம் கட்டி கொடுக்கணும என்று கோபப்படுகிறார். பிறகு அண்ணாமலையிடம் மாடியில் ரூம் கட்டு அதற்கு பணம் வேணும்னா என்கிட்ட கேளு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications