சிறகடிக்க ஆசை: முத்துவிடம் சிக்கிய ரோகிணி.. கடைசியில் இப்படி பேசிட்டாங்க? பாவம் விஜயா.. செம டுவிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மே 23ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ஷோரூம் திறப்பு விழா குறித்து விவாதம் வீட்டில் நடக்கிறது. ஏற்கனவே முத்து மனோஜ் மற்றும் முத்து பேசியதை ரெக்கார்ட் செய்து வைத்திருந்த நிலையில் அதை வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் ரூமுக்குள் முத்துவும் மீனாவும் தூங்க போனதும் ஹாலுக்கு வந்த மனோஜ் தூக்கம் இல்லாமல் உட்கார்ந்திருக்கிறார். அப்போது ரோகிணி ஒரு வாரம் தான் விடு அமைதியாக இரு என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும் போது திடீரென்று மனோஜ் எழுந்து சென்று தன்னுடைய ரூம் கதவை தட்டி என்னுடைய சார்ஜர் வேண்டும் என்று எடுத்து வருகிறார்.

Siragadikka aasai serial May 23th promo and episode full update

பிறகு கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் கதவைத் தட்டி பில்லோ வேண்டும் என்று எடுத்துட்டு வருகிறார். பிறகு கொஞ்சம் நேரம் கழித்து மீண்டும் கதவைத் தட்ட முத்து கடுப்பாகி மனோஜ் சம்பந்தப்பட்ட பொருட்கள் எல்லாவற்றையும் மூட்டை கட்டி கொடுத்து அனுப்புகிறார். பிறகு மீனா தரையில் பாய் விரிக்க அதற்கு முத்து அதான் பெட் இருக்கு அப்புறம் எதுக்கு பாய் போடுற என்று கேட்க,

அது ஒன்னும் நம்ம பெட் கிடையாது இது பஸ்ஸில் கிடைக்கிற ஜன்னல் சீட்டு போல தான் அடுத்த வாரம் நமக்கு கிடைக்கும் என்று சொல்ல முத்து மீனா பக்கத்தில் படுத்துக்குவேன் உன் மேல ஒரு பூ வாசம் வந்துகிட்டே இருக்கும் அது நல்லா இருக்கும் என்று சொல்ல அதற்கு மீனா அப்படின்னா ஃப்ரிட்ஜில் இருந்து பூவை எடுத்துக்கொண்டு வந்து தரேன் சுத்திக்கிட்டு படுத்து தூங்குங்க என்று சொல்கிறார்.

அதுதான் நீ இருக்கியே என்று கட்டிப்பிடித்து கொள்கிறார். மறுபக்கத்தில் மனோஜ் தூங்காமல் உட்கார்ந்து இருக்க ரோகிணி அடுத்த வாரம் இதற்கு ஒரு முடிவு ஒரு ஸ்ருதி பணக்கார வீட்டு பொண்ணு அவளால் கண்டிப்பா வெளியே படுத்து தூங்க முடியாது... நிச்சயமா ஏதாவது பிரச்சனை பண்ணுவா ஒரு வழி பிறக்கும் என்று சொல்கிறார்.

அப்போது விஜயா வெளியே வர நீ ஏண்டா இன்னும் முழிச்சிட்டு இருக்குற போய் படுத்து தூங்கு என்று ரூமுக்கு போய் விடுகிறார். மனோஜ்க்கு ஏசி இல்லாமல் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருக்கிறார். பிறகு காலையில் விஜயா வெளியே வந்ததும் எனக்கு தூக்கமே வரல எப்படியாவது ரூமை வாங்கி கொடுங்க, பிரஷா இருந்தால் தான் நல்லபடியா யோசிச்சு பிசினஸ் பார்க்க முடியும்.

நிறைய கிரியேட்டிவா யோசிக்கணும் என்று சொல்ல விஜயா ஒரு வாரம் பொறுத்துக்க என்று சொல்கிறார். பிறகு எல்லோரும் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது மனோஜ் உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டிருக்க முத்து அதை பார்த்து கிண்டல் செய்ததும் ரோகிணி மனோஜை எழுப்பி விட தூக்கத்தில் என்ன சார் வேண்டும் என்று மனோஜ் புலம்ப எல்லோரும் சிரிக்கிறார்கள்.

பிறகு கடை திறப்பு விழா பற்றி பேசுகிறார்கள். அப்போது மனோஜ் கடை திறந்து வைப்பதற்கு இரண்டு மூன்று ஆர்டிஸ்ட் கிட்ட பேசிகிட்டு இருக்கிறோம் என்று சொல்ல விஜயாவின் முகம் சுருங்கி விடுகிறது. இதை பார்த்த முத்து எதுக்கு காசு எல்லாம் கொடுத்து நடிகைகளை வைத்து திறக்கணும் என்று கேட்க அவரோடு சேர்ந்து மீனா ரவி எல்லாருமே ஆமா அவங்களுக்கு ரெண்டு மூணு லட்சம் ரூபாய் பணம் கொடுக்கணும் என்று சொல்ல,

ரோகிணி இதெல்லாம் பிசினஸ் ஸ்டேட்டர்ஜி இதை பத்தி எல்லாம் உங்களுக்கு தெரியாது என்று சொல்கிறார். அதோடு இந்த மாதிரி பெரிய நடிகைகளை வச்சி கடை திறந்தால் தான் பிரபலம் கிடைக்கும் என்று சொல்ல, அண்ணாமலை தரமான பொருளை கொடுத்தாலே நம்பி வருவாங்க என்று சொல்ல அதற்கு ரவி நீங்க சொல்றதுதாம்பா சரி என்று சொல்கிறார்.

பிறகு முத்து ஏன் நம்ம வீட்ல உனக்கு எத்தனை பிரச்சனை வந்தாலும் சப்போர்ட் பண்றது அம்மா தான் அவங்கள வச்சு கடையை திறக்கணும்னு உனக்கு தோணலையா என்று கேட்க விஜயா தன்னுடைய பெயரை சொன்னதும் முத்துவை ஆச்சரியமாக பார்க்கிறார். ஆனால் அப்போதும் மனோஜ் நடிகைகளை வைத்து கடையை திறப்பதில் உறுதியாக இருக்கிறார்.

அப்போது முத்துவின் ரியாக்ஷனை பார்த்து பயந்து போன ரோகிணி அப்படியே அந்தர் பல்டி அடித்து ஆன்ட்டியை வைத்தே கடையை திறக்கட்டும் என்று சொல்ல முத்து இது என்ன திடீர் மனமாற்றம் என்று கலாய்க்கிறார். அதற்கு ரோகிணி நான் ஆன்ட்டியை வைத்து தான் திறக்கலாம் என்று சொன்னேன் என்று சமாளிக்கிறார்.

பிறகு மனோஜும் வேற வழி இல்லாமல் ஓகே சொல்ல விஜயா சந்தோஷப்படுகிறார். அப்போது அண்ணாமலை இப்போ உன் அம்மாவோட முகத்தை பாரு 1000 வாட்ஸ் பல்பு எரியிற மாதிரி இருக்கு என்று கிண்டல் செய்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+