சிறகடிக்க ஆசை: மீனாவுக்காக விஜயாவை கிழித்த ஸ்ருதி! ஆடி போன ரோகிணி! அண்ணாமலை கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மே 29ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் மனோஜ் ரூமில் உடல்நிலை சரியில்லாமல் தூங்கிய மீனாவை வைத்து விஜயா பிரச்சனை செய்ய அதற்கு யாரும் எதிர்பார்க்காத பதிலை ஸ்ருதி கொடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயா ரோகிணிக்கு தாலி செயின் வாங்கி போடணும் என்று சொல்ல, அதற்கு அண்ணாமலை அதை மனோஜ் வாங்கி போடுவான். நீ கொஞ்சம் அமைதியா இரு. மூணு மருமகளையும் ஒரே மாதிரி பாரு. அப்போ தான் பிரச்சனை வராது என்று சொல்ல மீனாவும் ரோகிணியும் ஒண்ணா என்று விஜயா கேள்வி கேட்க அதற்கு அண்ணாமலை மனோஜ் சம்பாதித்து தாலி செய்து எடுத்து கொடுப்பான் என்று கோபமாக சொல்லிவிட்டு வெளியே வந்து விடுகிறார்.

Television Kollywood Siragadikka aasai serial

அதைத் தொடர்ந்து ரோகிணி வேலைக்கு கிளம்ப அப்போது விஜயா நீ இப்படியேவா மஞ்சள் கயிற்றோடு போவ.. உங்க அப்பா நாளைக்கே ஜெயிலில் இருந்து வெளியே வந்து உன்னை பார்க்க வரும்போது நீ இந்த மாதிரி இருந்தா அவங்க என்ன நினைப்பாங்க? என்று கேட்க, அதற்கு ரோகிணி அப்பா வர மாட்டாங்க என்று உளறி விடுகிறார். அதை கேட்டு விஜயா அதிர்ச்சி அடைய ரோகிணி அதாவது அப்பா இப்போதைக்கு ஜெயில் இருந்து வெளியே வர மாட்டாரு என்று சமாளிக்கிறார்.

அப்போது ரோகிணியிடம் மீனாவை பற்றி தர குறைவாக பேச அதை கேட்ட ஸ்ருதி யாரைப் பற்றி ஆன்ட்டி பேசுறீங்க? என்று கோபப்படுகிறார். அதற்கு விஜயா பொதுவா சொன்னேன் என்று சொல்ல, விடாத ஸ்ருதி நீங்க மீனாவை தான் சொன்னிங்கன்னு எனக்கு தெரியும். ரோகிணி நகை அடகு வச்சதுக்கு மீனா எப்படி பொறுப்பாகுவாங்க..? எங்க அம்மா தான் பணம் வேண்டாம்னு சொன்னாங்களே? இவங்களே வச்சுக்க வேண்டியதுதானே என்று பேசுகிறார்.

அதற்கு ரோகிணி அது எனக்கு மரியாதையா இருக்காது என்று சமாளிக்கிறார். அடுத்ததாக ரோகிணி வித்யாவை சந்தித்து நடந்த விஷயத்தை சொல்லி இப்போதைக்கு என்னை அந்த வீட்டில் காப்பாற்ற போறது இந்த மஞ்ச கயிறு தான். நான் இந்த மஞ்ச கயிரோடு இருக்கும்போது மனோஜ்க்கும், மாமியாருக்கும் ஒரு ஹில்ட் வந்துகிட்டே இருக்கும். அதை வச்சு நான் கொஞ்ச நாளைக்கு சமாளித்து விடுவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

பிறகு மீனா காய்ச்சலோடு பூ கட்டிக்கொண்டு இருப்பதை பார்த்த முத்து ஹாஸ்பிடல் கூப்பிட மீனா வேண்டாம் என்று சொன்னதும், சரி நீ உள்ளே படுத்துக்கோ ரெஸ்ட் எடு நான் மாத்திரை வாங்கிட்டு வரேன் என்று மெடிக்கல் ஷாப்புக்கு போகிறார். அந்த நேரத்தில் மனோஜ் மற்றும் ரோகிணி வீட்டுக்கு வர மனோஜ் டயர்டா இருக்கு நான் போய் படுத்துறேன் என்று ரூமுக்குள் வந்ததும் மீனாவை பார்த்ததும் விஜயாவிடம் சென்று மீனாவை எழுப்பி விட சொல்ல இதை பார்த்த விஜயா மீனாவை திட்ட,

அண்ணாமலை அவளுக்கு உடம்பு முடியல போல, மீனா இந்த நேரத்தில் படுத்து தூங்குற ஆளு கிடையாது. அதனால அவ தூங்கட்டும் எழுப்ப வேண்டாம் என்று சொல்லி தன்னுடைய ரூமுக்கு போக அதையும் கேட்காமல் மீனாவை தட்டி எழுப்பி எவ்வளவு சொல்லியும் கொஞ்சம் கூட வெக்கம் இல்லாம ரூம் புடிச்சுகிட்டு இருக்கியா? இதுக்கு தானே சீக்கிரமா வந்து படுத்து இருக்கிற என்று மீனா மீது கோபப்பட அதற்கு மீனா எனக்கு உடம்பு சரியில்ல என்று சொல்கிறார்.

அதற்கு விஜயா அப்போ நீ ஜெனரல் வாட்டில் தான் படுக்க வேண்டும் என்று ரூமில் இருந்து மீனாவை தரதரவென்று வெளியே இழுத்து வர அப்போது முத்து விஜயா பேசியது எல்லாம் கேட்டு எதிரே வந்து நிற்க விஜயா அதிர்ச்சி அடைகிறார். அப்போது மனோஜ் நான் நாள் முழுக்க கஷ்டப்பட்டு வேலை பார்த்துட்டு வரேன் எனக்கு ரெஸ்ட் எடுக்க ரூம் வேண்டும். எனக்கு ரூம் கொடுத்துடுங்க என்று கேட்க, அதற்கு ரோகிணி நானும் நாளெல்லாம் நின்னுகிட்டே வேலை பார்த்துட்டு வருகிறேன் எனக்கும் ரெஸ்ட் எடுக்க கூட இங்கு இந்த வீட்டில இடம் இல்லை என்று சொல்கிறார்.

அதற்கு முத்து ஹால்ல படுத்து ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே என்று சொல்ல மனோஜ் உன்னை மாதிரி நான் ஒரே இடத்தில் உட்கார்ந்து காரை ஓட்டிட்டு வரல, நடந்து தொண்டை வலிக்க பேசி என்னுடைய ப்ரெயினை யூஸ் பண்ணி வேலை பண்ணிட்டு இருக்கிறேன் என்று சொல்ல, அந்த நேரத்தில் வந்த ஸ்ருதி மீனா உடம்பு முடியல. அதனாலதான் போய் படுத்தாங்க.. இதுல எதுக்கு இவ்வளவு பிரச்சனை என்று கேட்க, ரோகிணி அடுத்த வாரம் உங்க முறை வரும் அப்போதான் உங்களுக்கு தெரியும் என்று நீ சொல்ல,

அதற்கு ஸ்ருதி நான் இப்படி எல்லாம் சண்டை போட்டுட்டு இருக்க மாட்டேன். ஒரு வாரம் எங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு அங்க தங்கிட்டு இருந்துட்டு வருவேன் என்று சொல்ல, மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகின்றனர். அதற்கு மனோஜ் ஸ்ருதி சொல்றதும் சரிதான் நாங்களும் ஒரு வாரம் ஹோட்டல்ல ரூம் எடுத்து தங்கிட்டு வரோம் என்று சொல்ல விஜயா பாத்தீங்களா? இந்த மீனாவால தான் இவ்வளவு பிரச்சனையும்..

இவங்க ரெண்டு பேரும் என்ன சொல்றாங்க என்று அண்ணாமலை இடம் சொல்ல அதற்கு அண்ணாமலை இந்த ரூம் பிரச்சனை பெரிய பிரச்சினையா இருக்கு. மீனாவுக்கு உடம்பு சரியில்ல இன்னைக்கு நைட்டு மீனா விஜயா கூட இந்த ரூம்ல படுத்துக்க, நானும் முத்துவும் இந்த ரூம்ல படுத்துக்கிறோம் என்று சொல்ல மனோஜ் அப்போ நான்? எனக்கு ரூம்? என்று கேட்க நீயும் எங்க கூட படுத்துக்க என்று அண்ணாமலை சொல்கிறார்.

அதற்கு மனோஜ் அப்போ ரோகிணி என்று கேட்க, அதற்கு அண்ணாமலை விஜயா ரூமில் ரோகிணி படுத்துகட்டும் என்று சொல்கிறார். அடுத்ததாக மீனா ரூமுக்கு வந்ததும் தராதரம் இல்லாதவங்க கூட எல்லாம் படுத்து தூங்க வேண்டியது இருக்கு என்று விஜயா சொல்ல மீனா பீல் பண்ணுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+