சிறகடிக்க ஆசை: கதை இப்படி பண்ணி வச்சிருக்காங்க! ரோகிணி மாஸ்டர் பிளான்! விஜயாவுக்கு இது தேவைதான்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial ) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மே 8 ஆம் தேதிக்கான எபிசோடில், ஸ்ருதியின் அம்மா வீட்டிற்கு போன விஜயாவிற்க்கு பிரச்சனை மேல் பிரச்சனை வருகிறது. மறுபக்கத்தில் ரோகிணி மனோஜை தன்னுடன் கூட்டிக்கொண்டு வருவதற்காக, புது ப்ளான் போட்டு இருக்கிறார். இந்த நிலையில் முத்துவும் மீனாவும் பேசிக் கொண்டிருப்பதை பார்க்கும்போது நமக்கு கடுப்பாக இருக்கிறது. என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் வாங்கிய கடனுக்காக பைனான்சியர் வீட்டை ஜப்தி செய்துள்ளதால் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். அதேநேரத்தில் மீனா வீட்டிற்கு போன அண்ணாமலை சந்தோஷமாக இருக்கிறார். ஆனால் ஸ்ருதி வீட்டுக்கு போன விஜயாவிற்கு ஒரு டீ கூட குடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
இந்த நிலையில்(Siragadikka Aasai serial May 8th episode update) இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், மீனா வீட்டில் அண்ணாமலைக்கு விருந்து வைத்து உபசரிப்பதை பார்த்து அண்ணாமலை ரொம்பவும் சந்தோஷப்படுகிறார். நான் வீட்டை விட்டு வெளியே வரும்போது இனி நமக்காக யாருமே இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் இங்கு வந்த பிறகுதான் எனக்காக இத்தனை பேர் இருக்காங்கன்னு எனக்கு புரிகிறது என்று பெருமையாக சொல்லிக் கொண்டு சந்தோஷமாக சாப்பிடுகிறார்.
அதை எல்லாம் பார்த்து முத்து எமோஷனலாகிறார். மறுபக்கத்தில் விஜயா தூக்கம் வராமல் ரூமுக்குள் அங்கே இங்கே நடந்து கொண்டே இருக்கிறார். பிறகு வெளியே வரும் சமயத்தில் ரவியும் வந்து விடுகின்றனர். நல்லபடியா தூங்குனீங்களா என்று ரவி கேட்க, அதற்கு விஜயாவும் ஆமா என்று சொல்கிறார். பிறகு எல்லோரும் சாப்பிட உட்காருகின்றனர்.

விஜயாவுக்கு அவமானம்
அப்போது கேரளாவில் சாப்பிடும் மட்டை அரிசியில் சாதம் வைத்திருப்பதை பார்த்து விஜயா என்ன அரிசி இவ்வளவு பெருசா இருக்கு இதை என்னால் சாப்பிட முடியாது, இதை சாப்பிட்டால் எனக்கு வயித்துக்கு சரியில்லாமல் போயிடும் என்று சொல்ல, அதற்கு ஸ்ருதியின் அம்மாவும் அப்பாவும் விஜயாவை நக்கல் செய்வது போலவே பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது விஜயா பொன்னி அரிசியில் சாதம் வைத்தால் இப்ப மலர்ந்த பூ போல இருக்கும், ஆனா இந்த சாதத்தை பார்க்கும் போது காஞ்சி போன பூபோல இருக்கு என்று சொல்ல அதற்கு ஸ்ருதியின் அப்பா பாத்தீங்களா வீட்ல ஒரு மருமகள் பூ கட்டுறதால் இவங்க எல்லாத்துக்கும் எடுத்துக்காட்டு சொல்றதுக்கு கூட பூவை வைத்து தான் சொல்லுறாங்க என்று கிண்டல் செய்கின்றனர். இதனால் விஜயா முகம் மாறுகிறது.
பிறகு போற இடத்துக்கு தகுந்த மாதிரி சாப்பிட்டுக்கணும். எங்க வீட்ல இதுதான் சாப்பிடுவோம் நீங்களும் சாப்பிடுங்க என்று ஸ்ருதியின் அம்மா சொல்ல அதைக் கேட்டு விஜயா நான் போடுறத சாப்பிட்டு இரு என்று அசிங்கப்படுத்துவதற்காக மனதிற்குள்ளே நினைத்துக் கொண்டு அந்த சாப்பாடை சாப்பிட முடியாமல் மென்று கொண்டிருக்கிறார்.

தவிக்கும் மனோஜ்
அடுத்ததாக இரவு மனோஜ் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவருடைய நண்பர் சந்தோஷ் குறட்டை விட, அதனால் தூக்க முடியாமல் மனோஜ் தவித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் எலி வந்து தொந்தரவு செய்கிறது. மனோஜ் எலி பின்னாடி ஓடிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக அண்ணாமலை நல்லபடியாக தூங்கிக் கொண்டிருக்கிறார்.
அதை பார்த்து முத்து அப்பா இப்போ நல்லபடியா தூங்குறாரு ஆனா அவருடைய மனசுக்குள் பல பிரச்சனை இருக்கிறது. எப்படியும் வீட்டை நாம திரும்ப வாங்கிடுவோமா என்ற பயம் அவருக்குள் இருந்து கொண்டு தான் இருக்கும் என்று ஃபீல் பண்ணி பேசுகிறார்கள். பிறகு விஜயாவை நினைத்து பீல் பண்ணிக் கொண்டிருக்கின்றார்.
தியாகி முத்து மீனா அலப்பறை
உங்க வீட்ல அப்பாவை நல்லபடியா பார்த்துக்கிறீங்க ஆனா அம்மாவை தான் ஸ்ருதி வீட்டில் எப்படி பார்த்துக்கிறாங்கன்னு தெரியல, அவங்க ரொம்ப கஷ்டப்படுத்துவாங்க என்று முத்து பீல் பண்ணி பேசிக் கொண்டிருக்கிறார். இதை பார்க்கும் போது, அம்மா பாசத்துக்கு அளவே இல்லையாப்பா.. உங்களை தெருவுல விட்ட பிறகும் அந்த அம்மாவுக்கே சப்போர்ட் பண்ணுறீங்களே என்று தான் நமக்கு மனசு நினைக்க தோணுகிறது.
சரி என்று விட்டுவிட்டாலும் வழக்கம்போல தியாகி மீனாவும் எனக்கு அத்தை எப்பவும் என் பேரை சொல்லி கூப்பிட்டு என்னை திட்டிக்கிட்டே இருப்பாங்க, இன்னைக்கு அவங்க என்ன கூப்பிடவில்லை என்றதும் எனக்கே வருத்தமா இருக்கு என்று ஃபீல் பண்ணுகிறார். இப்படிப்பட்ட அடிமைகளை என்ன சொல்வது என்று தெரியவில்லை.
சிந்தாமணியின் நாரதர் வேலை
சரி இவங்க கதை இருக்கட்டும் அடுத்ததாக அடுத்த நாள் காலையில் சிந்தாமணி அந்த விஜயா குடும்பத்தில் என்ன நடக்கிறது என்று விசாரிக்க, விஜயா கடைசி மருமகள் வீட்டுக்கும், அண்ணாமலை மீனா வீட்டிற்கு போய் இருக்கும் செய்தியை சொன்னதும் சிந்தாமணி குடும்பம் இப்போ பிரிஞ்சிடுச்சு அதுவே எனக்கு சந்தோஷம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் ரோகிணி வந்ததும் ரோகிணியிடம் இதுதான் உனக்கு சரியான நேரம் இப்போ நீ உன் புருஷனை உன் பக்கமா திருப்பி கூட்டிட்டு போயிரு என்று சொன்னதும் ரோகிணியும் அதுதான் நானும் யோசிக்கிறேன், அப்படியே பண்ணுறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார் இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications