சிறகடிக்க ஆசை: பாரில் சிட்டி வீடியோ எடுத்ததை கண்டுபிடித்த மீனா.. அண்ணாமலை இப்படி பேசிட்டாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மே எட்டாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் முத்துவின் குடியை நிறுத்துவதற்காக மீனா பொடி கலந்து வைத்த ஜுஸை விஜயா குடித்ததால் படாத பாடு படுகிறார். மறுபக்கத்தில் முத்துவை மேலும் அண்ணாமலை அவமானப்படுத்துகிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பார்வதி வீட்டிற்கு வந்திருக்கும் போது விஜயா அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது முத்து இப்படி செய்வான் என்று நினைக்கல என்று பார்வதி சொல்லிக் கொண்டிருக்கும்போது விஜயாவிற்கு வயிறு சரியில்லாமல் போய்விட பாத்ரூமுக்கு ஓடிக்கொண்டே இருக்கிறார். அந்த நேரத்தில் மனோஜ் எதையோ சமைக்க சொல்லி கேட்க, நீ வேற போடா என்று விஜயா திட்டி விட்டு பாத்ரூமுக்குள் ஓட மனோஜும் ரோகிணியும் என்ன ஆச்சு என்று குழப்பத்தில் இருக்கின்றனர்.

Siragadikka aasai serial May 8th promo and episode full update

பிறகு விஜயா முடியாமல் துவண்டு போய் பெட்டில் படுத்திருக்க அண்ணாமலை உங்க அம்மாவுக்கு என்னடா ஆச்சு என்று கேட்க மீண்டும் விஜயா பாத்ரூமுக்கு ஓடுகிறார். பிறகு நடக்க முடியாத நிலையில் விஜயா பெட்டில் மயங்கி விழுந்து விடுகிறார். எல்லாரும் என்னன்னு தெரியாமல் இருக்கும்போது முத்து ஓடி வந்து தொட்டு பார்த்து காய்ச்சல் அடிக்குது நான் போய் டாக்டரை கூட்டிட்டு வரேன் என்று சொல்கிறார்.

மறுபக்கத்தில் மீனா மருந்து வாங்கி கொடுத்த அக்காவை பார்த்து நடந்த விஷயத்தை சொல்ல அவர் அதெல்லாம் ஒன்னும் ஆகாது வயிற்றை கலக்கும். வாந்தி வரும் ஒரு ரெண்டு நாளைக்கு காரமில்லாமல் லேசான உணவை சாப்பிட்டால் சரியா போய்விடும் என்று சொல்கிறார். அடுத்ததாக விஜயாவை செக் பண்ணிய டாக்டர் விஜயா சாப்பிட்டது ஏதோ ஒத்துக்காம போய்ருக்கு ரெண்டு நாளைக்கு கஞ்சி குடிங்க சரியா போயிடும் என்று சொல்கிறார்.

அப்போது மீனா வீட்டிற்கு வர, முத்து எங்க போயிருந்த அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்ல, மீனா அத்தைக்கு என்ன ஆச்சு என்று ஓடி வருகிறார். அப்போது பார்வதி என்ன சாப்பிட்டா என்று விஜயாவிடம் கேட்க ஜூஸ் தான் குடித்தேன் என்று சொல்ல, எல்லாரும் ஜூஸ் குடிச்சா எப்படி ஃபுட் பாய்சன் ஆகும் என்று யோசித்து கொண்டு இருக்கும் போது மீனா அந்த ஆரஞ்சு பழ ஜூஸில் நான் இவரு குடிக்க கூடாதுன்னு சொல்லி அதுல மருந்து கலந்து வச்சிருந்தேன் என்று சொல்ல விஜயா மருந்தா என்று அதிர்ச்சி அடைகிறார்.

அதோடு என்னை கொல்லுறதுக்காக தான் கோபப்படுகிறார். அதற்கு மீனா நான் இவர் குடியை விடனும் என்று ஒரு அக்கா கிட்ட மறந்து வாங்கிட்டு வந்து கலந்து வெச்சேன் அது அத்தை குடிச்சிட்டாங்க என்று சொல்ல அதற்கு மனோஜ் இவன் அந்த பொடியை கூட சரக்கில் கலந்து குடிப்பான் என்று திட்ட முத்து எதுவும் சொல்ல முடியாமல் கலங்கி நிற்கிறார். எல்லாரும் ஆளாளுக்கு மீனாவை திட்டிக் கொண்டிருக்கும் போது அண்ணாமலை அவ புருஷனை சரி செய்ய வேண்டும் என்று முயற்சி பண்ணி இருக்கா அவ மேல தப்பு கிடையாது.

உங்க அம்மா எதுக்கு மத்தவங்களுக்கு போட்டு வச்ச ஜூஸை எடுத்து குடிக்கணும் என்று திட்டிக்கொண்டு அவன் பண்ணுன வேலையால அதிகமா அவமானப்பட்டு நிற்கிறது மீனா தானே! இப்பவாவது மத்தவங்களுக்கு புத்தி வரட்டும் என்று சொல்கிறார். பிறகு முத்து மொட்டைமாடியில் உட்கார்ந்து கலங்கிக் கொண்டிருக்க அங்கு வந்த மீனாவிடம் நிறைய பேர் ரோட்டில் குடிச்சிட்டு விழுந்து கிடப்பாங்க.

அவங்க பொண்டாட்டிங்க அவங்கள சரி பண்றதுக்காக ஏதாவது பண்ணுவாங்க. நானும் இப்போ அப்படி ஆகிட்டேன் இல்ல என்று வருத்தப்பட உங்களை சரி பண்ண எனக்கு வேற வழி தெரியல என்று மீனா சொன்னதும், முத்து நான் சத்தியமா குடிக்கல மீனா என்று சொல்லி அவர் மடியில் படுத்து அழுதுகொண்டே நீ வாங்கிக் கொடுத்த கார் அதை எப்படி நான் குடிச்சிட்டு ஓட்டுவேன். சத்தியமா நான் குடிக்கல என்று திரும்பத் திரும்ப சொல்கிறார்.

அடுத்த கட்டத்தில் விஜயாவிற்கு மீனா கஞ்சி வைத்து கொடுக்க, அதற்கு விஜயா உன்ன நம்பி அதை நான் குடிக்க மாட்டேன். நீ ஏதாவது கலந்து கொடுத்திருப்பாய் என்று விஜயா வழக்கம் போல திட்டி கொண்டு இருக்க அதற்கு மீனா நான் கிச்சன்ல கஞ்சி வைக்கிறேன். வேணும்னா சாப்பிடுங்க இல்லன்னா இருங்க உங்க இஷ்டம் என்று சொல்லி வெளியே கிளம்பி போய் விடுகிறார்.

அடுத்ததாக ஸ்டேஷனிற்கு வந்த முத்து காரை கேட்க அங்கிருந்து கான்ஸ்டபிள் ஒரே நாளில் உலகமே பேசுற மாதிரி பாப்புலராகிட்ட என்று கலாய்க்கிறார்கள். குடித்துவிட்டு கார் ஓட்டிட்டு இப்போ கார் வேணுமா? என்று கிண்டல் அடிக்க, முத்து நான் குடிக்கல சார் என்று சொல்ல, இப்ப குடிக்கலன்னு தான் நல்லாவே தெரியுது என்று போலீசர்கள் கேட்க நேற்றும் நான் குடிக்கல சார் என்று முத்து சொல்ல பிறகு போலீஸ்காரர்கள் பேப்பர் வாங்கிட்டு வா, டீ வாங்கிட்டு வா, மசால் வடை வாங்கிட்டு வா என்று வேலை செய்ய வைத்து வெளியே காத்திருக்க வைக்கின்றனர்.

இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. நாளைக்கு என்று வெளியான ப்ரோமோவில் மீனா பாரில் இருக்கும் சிசிடிவியை செக் பண்ணி பார்க்க அங்கு முத்து குடிக்காமல் அடுத்தவருக்கு ஊத்தி கொடுப்பதை பார்க்கிறார். பிறகு சிட்டி முத்துவை வீடியோ எடுப்பதை பார்த்து இந்த ஆளுதான் எங்களுக்கு வேண்டாதவன். இவன்தான் வீடியோ எடுத்து தப்பா அதை வெளியிட்டு இருக்கிறான் என்று மீனா சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனால் நாளைக்கான எபிசோடில் முத்து மீது தப்பு இல்லை என்பதை மீனா நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+