சிறகடிக்க ஆசையில் டுவிஸ்ட்! வீட்டுக்கு வந்த முத்து சொன்ன வார்த்தை... அதிர்ச்சியில் மனோஜ்
சென்னை: விஜய் டிவியில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முத்து குடித்துவிட்டு தான் வருவார் என்று மனோஜ் சொல்லிக் கொண்டிருந்த நிலையில் மனோஜ் நினைப்பதெல்லாம் இனி நடக்காது என்று முத்து அதிரடியாக சொல்லியப்படியே வீட்டிற்கு வந்திருக்கிறார். இனி என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் நாச்சியார் பாட்டியின் பிறந்தநாள் கொண்டாட்டம்தான் போய்க்கொண்டிருக்கிறது. அதில் யாரு பாட்டிக்கு பிடித்த கிஃப்ட் கொடுக்கிறார்களா அவங்களுக்கு ஸ்பெஷல் கிப்ட் கிடைக்கும் என்று பாட்டி சொன்னதால் விஜயா பார்வதியின் வீட்டில் இருந்த பழைய டிவியை பார்சல் பண்ணி எடுத்துட்டு வர சொல்லி இருக்கிறார்.

அதுபோல ரோகினி புடவை வாங்கி வைத்திருந்தாலும் அதை வேண்டாம் என்று ரிட்டன் செய்து விட்டு மனோஜ் பாட்டியின் பழைய நவரத்தின மாலை தொலைந்து போய் இருந்த நிலையில் அதுபோலவே ஒரு நவரத்தின மாலையை வாங்கிக் கொண்டு வந்து இருக்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் முத்து வீட்டிற்கு இன்னும் வரவில்லை என்பதால் விஜயாவும் மனோஜும் அவன் குடிக்க போய் இருப்பான் இப்போதைக்கு வீட்டிற்கு வரமாட்டான் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் பாட்டி என் பேரனை பற்றி எனக்கு தெரியும் அவன் எல்லா பிறந்த நாளிலும் என் கூடவே இருப்பான். என்ன விட்டு போக மாட்டான். ஆனால் இன்னைக்கு அவசரமா வெளியே போய் இருக்கானா ஏதாவது முக்கியமான விஷயமாகத்தான் இருக்கும். அதனால அவன் வரட்டும் என்று ஆவலோடு காத்திருக்கிறார். ஆனால் மீனா கவரிங் நகை பற்றிய உண்மை தெரிந்ததால் சோகத்தில் முத்து குடிக்க போய்விட்டாரா என்று பயத்திலேயே இருக்கிறார்.
இந்த நிலையில் ஸ்ருதியின் அம்மா பிறந்தநாள் பங்க்ஷன்க்கு வந்திருந்த நிலையில் மீனா போட்டு இருந்த நகைகளை பார்த்து எனக்கு தங்க நகையே வேண்டாம் என்று கழட்டி கொடுத்த மீனா இப்போ கவரிங் நகை போட்டு இருக்கா? எதற்கு அந்த தங்க நகையை கழட்டி கொடுக்கணும் என்று சொன்னதால் வீட்டில் எல்லோரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். மனோஜ் மற்றும் விஜயா நம்மளுடைய பித்தலாட்டங்கள் தெரியவந்து விடுமோ என்று திருதிருவென. முழித்துக் கொண்டு இருக்கின்றனர்.
அதே நேரத்தில் பாட்டி ஸ்ருதியின் அம்மாவை லெப்ட் ரைட் வாங்கி இருக்கிறார். இது தங்க நகை தான்... இது நான் தான் வாங்கி கொடுத்தேன். உங்ககிட்ட பில்லை காட்டுனா தான் நீ நம்புவியா? மீனா தங்க நகை போட்டானு சொன்னா நீங்க நம்ப மாட்டீங்களோ என்று திட்டி இருக்கிறார். இப்படியான நிலையில் முத்து வருவதற்கு நேரமாக விஜயாவும் மனோஜும் கிப்டை பாட்டியிடம் எல்லோரும் கொடுத்து விடுவோம் என்று சொல்லி இருக்கின்றனர்.
அதுபோல விஜயாவை தொடர்ந்து மனோஜ் தான் வாங்கிய நவரத்தின மாலையை கொடுத்திருக்கிறார். கடைசியில் மனோஜ் பாட்டியிடம் எல்லோரும் கிப்ட் தந்தாச்சி நீங்க யாருக்கு ஸ்பெஷல் கிப்ட் கொடுக்க போறீங்க என்று கேட்க, அதற்கு பாட்டி என்னுடைய பேரன் முத்து வரட்டும் என்று சொல்ல, அதற்கு மனோஜ் எப்படியும் அவன் கிப்ட் வாங்கிட்டு வரப் போறது கிடையாது. குடிச்சிட்டு நாளைக்கு காலையில் தான் வருவான்.
அவனுக்காக காத்திருக்க வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது முத்து வாசலில் வந்து நின்று டேய் தொழிலதிபர் நீ நினைச்சது நடக்காது என்று சொல்ல, எல்லோரும் அதிர்ச்சியடைகின்றனர். இப்படியாக ப்ரோமோ இருக்கும் நிலையில் முத்து பாட்டியின் பிறந்தநாள் பங்க்ஷனுக்காக நடிகை கேஆர் விஜயா மற்றும் வடிவுக்கரசியை கூட்டிட்டு வரப் போகிறாரா? (ஏற்கனவே கே ஆர் விஜயா மற்றும் வடிவுக்கரசி சிறகடிக்க ஆசை சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது)
அல்லது மனோஜ் கவரிங் நகையை மாற்றி வைத்தது பற்றிய உண்மையை உடைக்க போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் பாட்டியின் பிறந்தநாள் முடிகிற வரைக்கும் கவரிங் நகை பற்றி எந்த விஷயத்தையும் வீட்டில் சொல்லக்கூடாது என்று மீனா சத்தியம் வாங்கி இருக்கிறார். இதனால் முத்து என்ன சொல்லப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications