கெத்தாக பேசி மொத்தத்தையும் உளறிய ரோகிணி.. முத்து பிடித்த பாயிண்ட்.. அதிர்ச்சியில் மனோஜ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணி தன்னைப் பற்றிய ரகசியங்களை உளறியதால் முத்து மற்றும் மீனா அந்த பாயிண்டை பிடித்து விடுகிறார்கள்.
சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. இந்த சீரியலில் ஒவ்வொரு முறையும் முத்துவும் மீனாவும் மட்டும்தான் பிரச்சினையில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். ரோகிணி மட்டும் இதுவரைக்கும் வீட்டில் மாட்டவில்லையே என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு அடுத்த வாரத்தில் சர்ப்ரைஸ் இருக்கிறது.

இந்த வாரத்தில் ரோகிணியின் மகன் பிறந்தநாள் பங்க்ஷனில் ரோகிணி கலந்து கொண்ட போது அங்கு முத்துவும் மீனாவும் வந்திருந்தனர். இதனால் ரோகிணி மாட்டுவாரா என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் வழக்கம் போல இந்த முறையும் மாட்டாமல் தப்பித்து விட்டார். ஆனால் ரோகிணியின் மகன் கிரிஷ் பற்றிய உண்மைகள் முத்துவிற்கும் மீனாவிற்கும் தெரிய வந்திருக்கிறது.
இதனால் முத்துவும் மீனாவும் க்ரிஷை தத்தெடுத்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து இருக்கின்றனர். இது பற்றி வீட்டில் பேச்சை தொடங்க அது பூகம்பமாக வெடித்திருக்கிறது. வழக்கம் போல விஜயா அந்த பையனை தத்தெடுக்க கூடாது என்று சண்டை போட, அண்ணாமலை அந்த பையனும், பாட்டியும் சம்மதித்தால் நீங்கள் தாராளமாக தத்தெடுக்கலாம் என்று சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

ஆனால் ரோகிணி தன்னுடைய அம்மாவுக்கு போன் போட்டு இனி முத்துவும் மீனாவும் நம்ம வீட்டு பக்கம் வரக்கூடாது, அப்படியே அவங்க வந்தாலும் நீ அவங்க கிட்ட எதுவும் பேசக்கூடாது நீ முகத்தை திருப்பிக்கிட்டு போனா அவங்க நம்ம வீட்டுக்கு மீண்டும் வரமாட்டாங்க. என்னுடைய குழந்தையை மீனா தத்தெடுக்கக் கூடாது என்று சண்டை போட்டு இருக்கிறார்.
அதோடு தன்னுடைய அம்மாவும் மகனும் கிராமத்தில் இருந்தால் முத்துவும் மீனாவும் திரும்ப சென்று தொந்தரவு செய்வார்கள் என்று சென்னையில் அவர்களை தனி வீடு எடுத்து தங்க வைக்க ரோகிணி முடிவு எடுத்திருக்கிறார். இந்த நிலையில் ரவி இப்போது சில டிக்கெட் கொண்டு வந்து கப்பிள்ஸ் ஈவன்ட் ஒன்றில் கலந்து கொள்ள எல்லோரிடமும் சொல்லி இருக்கிறார். அதில் கலந்துகொண்டு வெற்றி பெற்றால் ஒரு லட்சம் ரூபாய் பணம் கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார்.

ஆரம்பத்தில் மீனாவும், முத்துவும் இதில் கலந்து கொள்ளவில்லை என்று சொல்லி இருந்தனர். அப்போது மனோஜ் மற்றும் ரோகிணி முத்துவையும் மீனாவையும் அவமானப்படுத்தி பேசி இருந்தனர். இவர்களால் இந்த நிகழ்ச்சியில் எல்லாம் கலந்து கொண்டு ஜெயிக்க முடியாது, இவர்களுக்கு நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விகள் புரியவே செய்யாது இவர்கள் எப்படி அதில் ஜெயிக்க முடியும் என்றெல்லாம் பேசி இருந்தார்கள். ஆனால் ஒரு லட்சம் பரிசுத்தொகை என்றதும் நாங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்க போகிறோம் என்று முத்து கூறியிருக்கின்றனர்.
இந்த நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணி மற்றும் மனோஜிடம் கேள்வி கேட்கின்றனர். அப்போது ரோகிணி நான் ஐம்பதாயிரம் சம்பாதிக்கிறேன். அதில் 20000 வீட்டிற்கு கொடுக்கிறேன் மீதம் 30,000 எனக்கு செலவுக்கு எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்ல, முப்பதாயிரம் செலவு செய்றீங்களா என்று அங்கு நிகழ்ச்சியில் இருப்பவர்கள் கேள்வி கேட்க, அதற்கு ரோகிணி ஆமாம் எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும், என்னுடைய பிசினஸுக்கு தேவையான பொருள்களும் வாங்கி வைக்க வேண்டும் அதோடு பிளாக் மெயில் செய்தவர்களுக்கும் பணம் கொடுக்கணுமே என்று சொல்ல இதைக்கேட்ட எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கூட என்னது பிளாக் மெயில் செய்தவர்களுக்கு பணம் கொடுக்கணுமா? என்று கேட்க முத்துவின் மீனாவும் இந்த பாயிண்டை பிடித்துக் கொள்கின்றனர். இனி அடுத்த வாரத்தில் ரோகிணி தன்னை பழைய பிஏ பிளாக் மெயில் செய்வது குறித்து வீட்டில் சொல்லப் போகிறாரா? இல்லை இந்த முறையும் ஏதாவது சொல்லி சமாளிக்க போகிறாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications