சிறகடிக்க ஆசையில் டுவிஸ்ட்.. அருண் பற்றி முத்துக்கு தெரிய வந்த உண்மை.. கதறி அழும் சீதா.. மீனாக்கு தான் பிரச்சனையே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சீதா மற்றும் அருண் கல்யாணம் நடக்கும் கடைசி நேரத்தில் அருண் பற்றி முத்துவிற்கு முக்கியமான விஷயம் தெரிய வருகிறது. இதனால் முத்து கல்யாணத்தை நிறுத்துகிறார். என்ன நடக்கப்போகிறது என்று விரிவாக பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் எதிர்பாராத பெரிய சம்பவங்கள் நடக்கப்போகிறது. சீதா மற்றும் அருண் கல்யாணத்திற்கு ஆரம்பத்தில் இருந்து சம்மதிக்காமல் இருந்ததால் மூன்று வாரங்களுக்கு மேலாக இந்த பிரச்சனை ஜவ்வாக இழுத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் முத்து ஒரு வழியாக சீதா மற்றும் அருண் கல்யாணத்திற்கு சம்மதித்திருந்தார். ஆனால் அதற்கு முன்பு மீனா சீதா மற்றும் அருணுக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து வைத்திருந்தார். இந்த உண்மை குடும்பத்திற்கு தெரியாது.

அதற்குள் முத்து மனம் மாறிவிட்டதால் சீதா மற்றும் அருண் கல்யாணத்தை பிரமாண்டமாக நடத்துகிறார். சீதா கல்யாணத்திற்கு அண்ணாமலை குடும்பத்தில் எல்லோரும் உதவி செய்கின்றனர். இந்த நிலையில் அடுத்த வார்த்தைக்கு என்று வெளியான ப்ரோமோவில் அருணுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது என்ற உண்மை தெரிய வருகிறது. இதனால் கோபமான முத்து மனமேடையில் இருக்கும் அருணை சட்டையை பிடித்து எழுப்பி கீழே இழுத்து வருகிறார்.
இவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சாம். நம்ம கிட்ட ஏமாத்திட்டு இருந்திருக்கிறான் என்று சொல்லவும், அதற்கு அருண் ஆமா எனக்கு ஏற்கனவே கல்யாணம் முடிஞ்சிடுச்சி. இது இரண்டாவது கல்யாணம் தான். ஆனா சீதாவுடன் தான் எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று சொன்னதும் சீதா அழுது கொண்டிருக்கிறார். இதனால் சீதா அருண் கல்யாணத்தை மீனா தான் முத்துக்கு தெரியாமல் நடத்தி வைத்தார் என்ற உண்மை முத்துக்கு வரும்போது முத்து பயங்கரமாக கோபப்படுவார்.
இத்தனை விஷயங்களையும் எனக்கு தெரியாமலே பண்ணியிருக்க என்று கோபப்பட்டு மீனாவை வீட்டை விட்டு துரத்துவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே விஜயா ஓடிப் போய் கல்யாணம் பண்ணி இருக்கலாம் என்று சொன்னதற்கு கூட அண்ணாமலை சீதா அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது, குடும்பமானதை காப்பாத்துற பொண்ணு அதனால அந்த மாதிரி எல்லாம் பண்ண மாட்டா என்று பேசி இருந்தார். இதனால் சீதா செய்த வேலை இப்போது குடும்பத்திற்கு தெரிய வரும்போது எல்லோருமே எதிராகத்தான் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ அடுத்த வாரம் பெரிய பஞ்சாயத்து வரப்போகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications