சிறகடிக்க ஆசையில் அடுத்த வாரம்.. முத்து உயிருக்கு ஆபத்து! மீனா எடுத்த முடிவு.. அதிரடி சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடைபெறப்போகிறது. அதாவது மீனா தேர்தலில் நிற்கக்கூடாது என்பதற்காக அவரை கொலை செய்ய சிந்தாமணி ஆட்களை செட் பண்ணி வைத்திருக்கிறார். ஆனால் கடைசியில் முத்துவிற்கு பெரிய ஆபத்து வருகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

சீரியலிலும் தேர்தல் களம்
தமிழக அரசியலிலும் தேர்தல் களம் சூடு பிடித்திருப்பதை தொடர்ந்து இப்போது சிறகடிக்க ஆசையை சீரியலிலும் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. இந்த சீரியலில் இந்த மீனாவும் அவருடைய தொழில் எதிரியான சிந்தாமணி இருவருமே பூக்கட்டும் வியாபாரிகளுக்கான தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதில் சிந்தாமணி பலமுறை தேர்தலில் வெற்றி பெற்று இருந்தாலும் இந்த முறை நான் எலக்ஷனில் நிற்கவில்லை என்று முதலில் சிந்தாமணி சொல்லி இருந்தார்.
சிறகடிக்க ஆசையில் அடுத்து நடக்கும் சம்பவம்
ஆனால் சிந்தாமணி ஆதரவாளர்கள் கட்டாயப்படுத்தி நீங்க எலக்ஷனில் நிற்க வேண்டும் என்று சொன்னதால் எலெக்ஷனில் நிற்க முடிவெடுத்திருந்தார். மறுபக்கத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே சில பூக்காரர்கள் வந்து, நீதான் எங்க குறைகளை எல்லாம் தெரிஞ்சவ அதனால ஒரு நேர்மையான ஒருத்தங்க தேர்தலில் நிற்க வேண்டும் என்று மீனாவின் தலையை கழுவ, அதை கேட்டு முத்துவும் நீ இந்த தேர்தலில் கண்டிப்பாக நிற்க வேண்டும், உனக்கு எல்லா சப்போர்ட்டும் நான் பண்றேன் என்று சொல்லி இருந்தார்.
முத்து சொன்னது போலவே பல வாக்குறுதிகளையும் மீனாவிற்கு எடுத்துக் கொடுக்க விஜயாவின் எதிர்ப்பையும் மீறி தேர்தலில் நிற்பதற்காக மீனா முடிவு செய்து இருக்கிறார். ஆனால் சிந்தாமணி இடம் இருக்கும் பண பலத்தால் மீனாவை தோற்கடிக்க முயற்சி செய்து இருக்கிறார். ஆரம்பத்தில் சிந்தாமணிக்கு ஆதரவாக பேசியவர்கள் இப்போது மீனா சொன்ன வாக்குறுதிகளை கேட்டு மீனாவிற்கு சப்போர்ட் செய்வதாக அறிவித்திருக்கிறார்கள்.
சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ
இந்த நிலையில் அடுத்த வாரத்திற்கு அண்ணா ப்ரோமோவில், சிந்தாமணி மீனா இந்த எலக்ஷனில் நாமினேஷனே செய்யக்கூடாது என்று ஒரு ரவுடிக்கு பணம் கொடுத்து மீனாவை கொலை செய்வதற்காக அனுப்பி வைத்திருக்கிறார். அந்த நபரும் மீனா நாமினேஷன் செய்யும் இடத்திற்கு வருகிறார். அப்போது முத்து ஆட்டம் போட்டு மீனை அழைத்துக்கொண்டு வருகிறார்.
மீனாவை கொலை செய்ய வந்த நபர் முத்துவை கத்தியால் குத்த போகிறார். இதை மீனா கவனித்து விடுகிறார் இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதை பார்க்கும்போது அடுத்த வாரம் பெரிய சம்பவம் இருக்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே மீனாவால் தான் எங்க வீட்டு நிம்மதியே போய்விட்டது என்று விஜயா ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது முத்துவிற்கு ஏதாவது ஆகி ஹாஸ்பிடலுக்கு போனால் அந்த முழு பழியையும் மீனா மீது தான் போடுவார்.
மீனா எடுக்கும் முடிவு
வழக்கம் போல மீனாவும் எதுவும் பேசாமல் அழுது கொண்டு என்னால தான் இப்படி எல்லாம் ஆகிடுச்சு, நான் இந்த எலக்சன்லயே நிக்கல நான் இந்த வீட்டை விட்டுப் போறேன் என்று முடிவு எடுப்பார்... பிறகு முத்துவும் அண்ணாமலையும் சமாதானம் செய்து மீனாவை கூட்டிக்கொண்டு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. பல முறை இதே போல நடப்பதால் அதே தான் இப்போதும் ரிப்பீட்டாகப் போகிறதா? அல்லது கொலை செய்ய வந்த நபரை மீனா கண்டுபிடித்து முத்துவிடம் சொல்ல அவரை போட்டு வெளுத்து வாங்கி தேர்தலில் போட்டியிடப் போகிறாரா என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது.
ஆனால் இப்போதைக்கு முத்துக்கோ அல்லது மீனாக்கோ எதுவும் பிரச்சனை வராது.. தேர்தலில் சிந்தாமணியை கடைசி நேரத்தில் மீனா ஜெயிப்பார் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications