சிறகடிக்க ஆசை: பணத்திற்கு ஆசைப்பட்டு முத்துவிடம் சிக்கும் விஜயா.. ரோகிணிக்கு வந்த புது பிரச்சனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 11ம் தேதி முதல் 16ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் பணத்தை வாங்கி கொண்டு விஜய சத்யா மீது கொடுத்த கேஸை வாபஸ் வாங்குவதற்கு சம்மதம் தெரிவிக்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியலில் ஒருவழியாக ரசிகர்கள் எதிர்பார்த்த தருணம் வந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இத்தனை நாட்களாக ரோகிணிக்கு மட்டும் எந்த பிரச்சனையும் வராமல் அவர் தப்பித்துக் கொண்டே இருந்தார். முத்து மற்றும் மீனாவிற்கு இடையே தான் பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டே இருந்தது. ஆனால் இனி ரோகிணிக்கு பிரச்சனைகள் வர இருக்கிறது என்று தெரிகிறது.

siragadikka aasai serial vijay tv

அதாவது நேற்று முன்தினம் மனோஜ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் ரோகிணி ஜெயிலில் இருந்து கொண்டு விஜயாவிடம் கெஞ்சுவது போன்ற காட்சிகள் இருந்தது. இது சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து ஜாலியாக எடுத்த வீடியோவா அல்லது சீரியலில் அடுத்து வரும் கதைக்களமா? என்ற கேள்விகள் எழும்பி வருகிறது.

ஏற்கனவே தன்னை மிரட்டும் பிஏவிடமிருந்து தப்பிப்பதற்காகத்தான் முத்துவின் செல்போனில் இருந்த சத்யா திருடிய வீடியோவை எடுத்து சிட்டிக்கு ரோகிணி கொடுத்திருந்தார். அந்த வீடியோவை சிட்டி லீக் செய்தால் இப்போது மீனா குடும்பத்திற்கு பெரிய பிரச்சனை வந்திருக்கிறது.

மீனாவின் தம்பியை போலீஸ் அரெஸ்ட் செய்ய வேண்டும் என்று விஜயா கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறார். அதோடு இனி முத்துவும் மீனாவும் இருக்கும் வீட்டில் நான் இருக்க மாட்டேன் என்று சொல்லி வீட்டை விட்டு வெளியேறி பார்வதி வீட்டில் இருக்கிறார். அண்ணாமலை கேஸை வாபஸ் வாங்க சொல்லி பேசியிருக்கிறார்.

அண்ணாமலை கேஸை வாபஸ் வாங்க சொன்னபோது கூட விஜயா முடியாது என்று சொல்லிவிட்டார். இந்த நிலையில் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக வக்கீல் முத்து மற்றும் மீனாவிடம் 5 லட்சம் பணம் வேண்டும், பணம் தந்தால் கேஸை முடித்து விடலாம் என்று சொல்லி இருக்கிறார்.

siragadikka aasai serial vijay tv

இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் பணத்தை முத்துவும் மீனாவும் ரெடி செய்து கொடுக்கிறார்கள். அதோடு இந்த பணத்தை வைத்து எப்படி கேஸை முடிப்பீர்கள் என்று கேட்டதற்கு அது எங்களுடைய சாமர்த்தியம் என்று சொல்லிவிட்டு விஜயாவை வந்து வக்கீல் பார்க்கிறார். அவர் இந்த கேஸை வாபஸ் வாங்குவதற்கு உங்களுக்கு பணம் தரோம் என்று சொன்னதும் விஜயா எவ்வளவு தருவீங்க என்று டீல் பேசுகிறார்.

அப்போது 50 ஆயிரம் தருகிறேன் என்று சொல்கிறார். அதற்கு முடியாது என்று சொல்கிறார். ஒரு லட்சம் தருகிறேன் என்று வக்கீல் சொல்கிறார் அதற்கும் முடியாது இரண்டு லட்சம் வேண்டும் என்று விஜயா சொல்கிறார். அதே நேரத்தில் சிட்டியும் ரோகிணியின் பழைய பிஏ தினேஷும் பிளான் போட்டு ரோகிணி இடம் இருந்து 2 லட்சம் பணம் வேண்டும் என்று மிரட்டி இருக்கிறார்கள்.

siragadikka aasai serial vijay tv

நான் அடித்ததால் பிஏக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அவனை கேரளாவில் கொண்டு மருத்துவம் பார்க்க வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் என்று மிரட்டி இருக்கிறார். இதோடு இன்னும் இதை சொல்லியே ரோகிணியை மிரட்டலாம் என்று சிட்டியும் பிளான் போட்டு இருக்கிறார்.

இப்படியான நிலையில் சத்யா கேஸ் வாபஸ் வாங்குவதற்காக விஜயா வாங்கும் 2 லட்சம் பணத்தை ரோகிணி எடுத்து விடுவார் என்று தெரிகிறது. இதனால் தான் பணம் காணாமல் போய்விட்டது என்று விஜயா கம்ப்ளைன்ட் கொடுக்கும்போது ரோகிணி போலீசில் சிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+