சிறகடிக்க ஆசை: விஜயாவை மிரட்டிய முத்து.. அண்ணாமலைக்கு வந்த சந்தேகம்! ஏமாந்த ரோகிணி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 14ஆம் தேதிக்கான எபிசோடில் மீண்டும் விஜயா வீட்டிற்கே வருகிறார். அதே நேரத்தில் விஜயாவின் நடவடிக்கையை வைத்து அண்ணாமலை மற்றும் ரவி எல்லோரும் சந்தேகப்படுகின்றனர்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனா தன்னுடைய குடும்பத்தோடு பார்வதி வீட்டிற்கு வருகிறார். அப்போது கையில் இருந்த பண பேக்கை வீட்டிற்குள் வைத்து விட்டு எதுவும் தெரியாதது போல கோபமாக இருப்பது போன்று நடிக்கிறார். அப்போது சத்யாவின் அம்மா சத்யா செய்த தப்புக்காக மன்னிப்பு கேட்கிறார். அதுபோல சத்யாவும் விஜயாவிடம் மன்னிப்பு கேட்கிறார்.

ஆனால் விஜயா மன்னிப்பு கொடுக்காமல் பிகு செய்து கொண்டிருக்கிறார். பிறகு முத்து எல்லாரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு விஜயாவை நீங்களும் வீட்டுக்கு வாங்க என்று சொல்ல, அதற்கு விஜயா நான் வர முடியாது என்று திமிராக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது முத்து அப்பா ஊருக்கு கிளம்பிட்டாரு.. அவரோட ஃப்ரெண்டு மனைவி இப்படித்தான் அவரை விட்டுட்டு கோபப்பட்டு தனியாக இருந்தாங்க.
அவர் எவ்வளவோ சமாதானம் செஞ்சும் அவங்க மீண்டும் வீட்டிற்கு வரல அதனால கடைசில அவர் டைவர்ஸ் பண்ணிட்டாரு. அப்பாவுக்கு அந்த எண்ணம் வந்துருமோன்னு பயமா இருக்கு என்று சொல்லிவிட்டு போகிறார். இதனால் விஜயா முத்து போனதும் பார்வதியிடம் தன்னுடைய வாழ்க்கையை நினைத்து புலம்பி கொண்டிருக்கிறார்.

என் புருஷனும் என்னை விட்டுட்டு இன்னொரு பெண்ணை கல்யாணம் பண்ணிப்பாரா? என்று கேட்டுக் கொண்டே சரி நான் வீட்டுக்கு போறேன் என்று கிளம்பி செல்கிறார். அடுத்ததாக விஜயா வீட்டிற்கு வந்ததும் வாசலில் நிற்குமாறு முத்து சொல்கிறார். பிறகு மீனா ஆரத்தி எடுத்து விஜயாவை வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறார். (இதை பார்க்கும் ரசிகர்களுக்கு இன்று கடுப்பாகதான் இருக்கும். காரணம் மீனா எவ்வளவு அவமானப்பட்டாலும் திருந்தாமல் இப்படி நடந்து கொள்கிறாரே என்பது பலருடைய மனதில் உதிக்கும் கேள்வியாக இருக்கும்).

அடுத்ததாக அண்ணாமலை நான் சொல்லி கேட்காத நீ சத்யாவின் கேசை எப்படி வாபஸ் வாங்குன என்று கேட்க, மீனாவின் மொத்த குடும்பமும் வந்து மன்னிப்பு கேட்டதால் மனம் மாறினேன் என்று சொல்கிறார். அதற்கு ரவி நீங்க அதற்கு முன்பே கேஸை வாபஸ் வாங்கிட்டீங்களே என்று கேட்கிறார்.

அதற்கு அப்பா சொன்னதை யோசித்துப் பார்த்தேன் என்று பிளேட்டை மாற்றி விடுகிறார். இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ரோகிணி மீண்டும் இப்படி வந்துட்டாங்களே என்று யோசித்து கொண்டு இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications