சிறகடிக்க ஆசை: செய்த தப்பால் மீனாவை புரிந்து கொள்ளும் விஜயா.. முத்து பற்றி ரவி சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 17ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் குழம்பு பாத்திரத்தை விஜயா மூடி வைக்காததால் அதில் பல்லி விழுந்ததற்கு மீனாதான் காரணம் என்று விஜயா சொல்ல அதைக் கேட்டு முத்து மீனாவை திட்டுகிறார்.

பிறகு மீனா தப்பு செய்யவில்லை தான் செய்தது தான் தப்பு என்று விஜயாவிற்க்கு தெரிய வருகிறது. அதே நேரத்தில் மீண்டும் வீட்டிற்கு வருவது குறித்து ரவி முக்கிய முடிவு எடுக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயா ரவியை சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மீண்டும் ரவி மற்றும் ஸ்ருதி வீட்டிற்கு வர வேண்டும் என்று விஜயா சொல்ல அதற்கு எனக்கு அப்பாவை நினைச்சு கூட பயமில்லம்மா ஆனா முத்துவை நினைச்சா தான் பயமா இருக்கு. முத்து என்னை அடிச்சாலும், திட்டுனாலும் நான் ஏத்துக்குவேன் என்று சொல்ல அதற்கு விஜயா அதெல்லாம் இருக்கட்டும் உன்ன நம்பி ஒரு பொண்ணு வந்து இருக்கு அவா ஸ்டேஷனில் உன்னை விட்டுக் கொடுக்காமல் பேசுறா.

நல்ல பொண்ணா தான் இருக்கா அதனால அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வா என்று சொல்ல ரவி சந்தோஷப்படுகிறார். மறுபக்கத்தில் மீனா பைனான்சியரை சந்திப்பதற்காக ரொம்ப நேரமா காத்திருக்க அதே நேரத்தில் வீட்டில் அண்ணாமலை தூக்கத்திலிருந்து எழுந்து கிச்சனுக்கு சென்று அங்கு திறந்திருந்த சாம்பார் பாத்திரத்தை மூடி வைத்துவிட்டு, வாசனையெல்லாம் நல்லாத்தான் வருகிறது.
ஆனால் இன்னும் பசி இல்லை யாராவது வராங்களா பார்ப்போம் என்று சோபாவில் உட்கார்ந்து இருக்கிறார். அப்போது மீனா அண்ணாமலைக்கு போன் செய்து மாமா நான் வர லேட் ஆகும் நீங்க சாப்பிட்டுட்டு மாத்திரை போடுங்க என்று சொல்கிறார். அப்போது பைனான்சியர் மீனாவிடம் நான் எதுவும் பேச முடியாது என்று கோபமாக பேசி அனுப்பி வைக்கிறார்.

அடுத்ததாக அண்ணாமலை சாப்பாடு போட்டு கொண்டு டைனிங் டேபிளில் வந்து உட்கார அந்த நேரத்தில் முத்து வீட்டு காலிங் பெல் அடிக்க, அண்ணாமலை கதவை திறந்து விட்டு சாப்பாட்டில் மீண்டும் உட்காருகிறார். அப்போது முத்து போய் தனக்கு சாப்பாடு போடுகிறார். அப்போது சாம்பாரில் பல்லி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த முத்து உடனே ஓடி வந்து அண்ணாமலை சாப்பிடும் சாப்பாட்டை தட்டி விட்டு சாம்பாரில் பல்லி விழுந்த விஷயத்தை சொல்லி நீ சாப்பிடல தானப்பா என்று பதறுகிறார்.
அந்த நேரத்தில் விஜயா மற்றும் பார்வதி இருவரும் வீட்டிற்கு வர முத்து அப்பாவை விட்டுட்டு எங்க ஊர் சுத்த போனீங்க என்று கோபப்பட, அதற்கு விஜயா இப்ப என்ன ஆயிடுச்சு என்று கேட்கிறார். அப்போது முத்து சாம்பாரில் பல்லி விழுந்து கிடக்குது என்று சொல்ல அதை கேட்டு அதிர்ச்சடையும் விஜயா அதை என்கிட்ட ஏன் கேக்குற உன் பொண்டாட்டி கிட்ட கேளு என்று சொல்கிறார்.
அப்போது மீனாவும் வீட்டுக்கு வந்து விட முத்து மீனாவை திட்டி சாம்பாரில் பல்லி இருப்பதை காட்ட அவர் நான் பாத்திரம் எல்லாம் மூடி வச்சிட்டு தான் போயிருந்தேன். ஏதோ தப்பு நடந்து இருக்கு என்று சொல்கிறார். அதற்கு விஜயா எங்க எல்லாரையும் ஒரேடியா கொன்னுடலாம்னு பாக்குறியா என்று மீனா விடம் கோபப்படுகிறார்.
அதோடு மனோஜ்க்கும் இந்த சாப்பாடு தான் கொடுத்து அனுப்பினேன். அவனுக்கு ஏதாவது ஆகிட போகுது என்று பதறி போனை எடுத்துக் கொண்டு ரூமுக்குள் சென்று மனோஜ்க்கு போன் செய்யும் போது அங்கு வரும் பார்வதி அவனுக்கு ஒன்னும் ஆகாது காலைல நாமளும் தான் இதே சாம்பார் தான சாப்பிட்டோம்.
அப்ப எதுவும் ஆகல. பாத்திரத்தை திறந்து வச்சது நீதான் அதுக்கப்புறம் பல்லா தான் பல்லி விழுந்திருக்கும் என்று சொல்ல விஜய ஆமா நானும் தான் தப்பு பண்ணி இருக்கேன் என்று சொல்கிறார். அதற்கு பார்வதி இதனால் அதுதான் நான் வெளியில் எல்லாரும் பேசும்போது எதுவும் சொல்லல. நீ மீனாவ அந்த திட்டு திட்டுற இது மட்டும் அவங்களுக்கு தெரிஞ்சிருந்தா கத்தி உன் பக்கம் திரும்பி இருக்கும்.
என்று சொல்லி நான் வீட்டுக்கு கிளம்புகிறேன் என்று கிளம்பி விடுகிறார். அதை தொடர்ந்து வீட்டிற்கு வந்து ரவி ஸ்ருதியிடம் விஜயா தன்னை வந்து பார்த்து பேசிட்டு போன விஷயத்தை பற்றி சொல்லி சந்தோஷப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!












Click it and Unblock the Notifications