சிறகடிக்க ஆசை: முத்து போட்ட திருட்டு பழி.. மீனாவின் விபரீத முடிவு! விஜயாவுக்கு செக் வைத்த அண்ணாமலை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 22ஆம் தேதிக்கான எபிசோடில் மீனா மீது முத்து திருட்டுப்பழி போடுகிறார். அதோடு விஜயா பற்றிய உண்மைகளையும் கண்டுபிடித்து விடுகிறார் இதனால் அண்ணாமலை முக்கிய முடிவு எடுத்திருக்கிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பார்வதி வீட்டில் சோகமாக உட்கார்ந்து இருக்கும் போது முத்து அங்கு வருகிறார். முத்துவை உட்கார வைத்து பார்வதி என்ன முத்து வந்திருக்க என்று கேட்டதும், மீனா மேல இப்படி ஒரு பழி போட்டு இருக்கீங்களே? அவ அழுதுட்டே இருக்கா. எங்க அம்மா சொன்னது கூட அவளுக்கு பெருசா தெரியல. ஆனா நீங்க ஒரு வார்த்தை சொன்னதால அவ ரொம்ப அழுதுட்டு இருக்கா.

தனியாக விட்டுட்டு வர கூட பயமா இருக்கு என்ன நடந்ததுன்னு சொல்லுங்க என்று சொன்னதும் பார்வதி முதலில் சொல்ல தயங்குகிறார். பிறகு முத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்றேன் நீங்க கம்ப்ளைன்ட் கொடுங்க உண்மையான திருடனை கண்டுபிடிக்கலாம் என்று சொன்னதும் பார்வதி வேண்டாம்பா என்று தடுத்து விடுகிறார்.
அதோடு அந்த பணம் என்னுடைய பணமும் கிடையாது. விஜயாவோட பணம் என்று சொன்னதும் அம்மாவுக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது என்று முத்து கேக்க வக்கீல் சத்யா கேஸை வாபஸ் வாங்குவதற்காக 2 லட்சம் கொடுத்த விஷயத்தை சொன்னதும் முத்து அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு அங்கிருந்து வீட்டிற்கு வந்த முத்து எல்லாரையும் கூப்பிட்டு வைத்து பணம் யார் எடுத்தாங்க என்று கண்டுபிடித்துவிட்டேன். என்று சொல்ல, ரோகிணி திருட்டு முழி முழிக்கிறார். அப்போது மீனாதான் பணத்தை எடுத்தார் என்று சொன்னதும் மீனா நீங்களா இப்படி பேசுறீங்க என்று அழுது கொண்டிருக்கிறார். அதோடு எல்லாரையும் நம்பி ஏமாந்து போறது என்னுடைய வேலையா இருக்கு என்று சொல்ல அண்ணாமலை மீனா அப்படியெல்லாம் பண்ணி இருக்க மாட்ட என்று சொல்கிறார்.
அதற்கு மனோஜும் விஜயாவும் சேர்ந்து அவனே அவன் பொண்டாட்டி தான் எடுத்திருப்பானு சொல்லுறானே நீங்க நம்ப மாட்டீங்களா என்று கேட்கின்றனர். அதோடு அவ தம்பி திருட மாதிரி இவளும் திருடிருப்பா.. அவங்க குடும்பமே திருட்டு குடும்பம் என்று விஜயா திட்ட, அதற்கு மீனா முத்துவிடம் யாருக்காகவும் என்னோடு தன்மானத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன் நான் பணத்தை திருடல என்று கத்தி சொல்கிறார்.

அதற்கு விஜயா என்னடி குரலை ஒசத்தி பேசுற என்று திட்டுகிறார். உடனே அண்ணாமலை விஜயாவை திட்டுகிறார். அப்போது ரோகிணி இவன் என்ன புது கதை சொல்லிட்டு இருக்கான் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். முத்து சொன்னதை நம்பாமல் அண்ணாமலை இருக்கவும் நான் இப்போதான் பார்வதி அத்தை வீட்டுக்கு போயிட்டு வந்தேன் அப்பா.
அம்மா மீனா மேல கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறாங்களாம். கொடுக்க வேண்டாம் என்று சொல்லுப்பா என்று சொல்ல, விஜயா நம்ம எப்போ அப்படி சொன்னோம் என்று முழிகிறார். நான் கூட காசு கொடுக்கிறேன் நீ மீனா மேல கேஸ் கொடுக்க வேண்டாம்னு சொல்லுப்பா என்று சொன்னதும் அண்ணாமலை மீனா மேல கேஸ் கொடுக்காம இருக்குறதுக்கு நான் பணம் வாங்கணுமா? அந்த கேவலமான வேலையை நான் செய்ய மாட்டேன் என்று கோபமாக கிளம்ப உடனே முத்து அண்ணாமலை தடுத்து நிறுத்துகிறார்.
என்னப்பா சொன்ன..? கேவலமான வேலை தானே? அந்த வேலையை நம்ம வீட்ல இருக்குற ஒருத்தர் செஞ்சுருக்காங்க என்று சொன்னதும் விஜயா அதிர்ச்சியில் இருக்கிறார். இவ்வளவு நேரம் என் பொண்டாட்டிய பத்தி சொன்னது எல்லாமே பொய். அவ உயிரே போனாலும் அந்த மாதிரி செய்ய மாட்டா. ஆனா அம்மா சத்யா மேல இருக்கிற கேசை வாபஸ் வாங்க ரெண்டு லட்சம் ரூபா பணம் வக்கீல் கிட்ட வாங்கி இருக்காங்க என்று சொன்னதும் எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அது பற்றி விஜயாவிடம் அண்ணாமலை கேட்டதும் விஜயா ஆமா அவனுக்கு நீதிமன்றத்தில் தண்டனை கிடைச்சிருந்தா இரண்டு லட்சம் பைன் போட்டு இருப்பாங்க தானே அதைத்தான் நான் வாங்குனேன் என்று சொன்னதும் முத்து அப்பா அம்மா இப்போ நீதிபதி வேலையும் பார்க்கத் தொடங்கிட்டாங்க என்று சொல்கிறார்.
அதோடு அம்மாவுக்கு என்ன தண்டனை கொடுக்கணும் என்று முத்து கேட்ட, அண்ணாமலை நீயும் உன் பொண்டாட்டியும் தான் சொல்லணும் என்று சொல்லிவிடுகிறார். உடனே முத்து அம்மா மீனாவிடம் மன்னிப்பு கேட்கணும் என்று சொல்ல, ஸ்ருதியும் ஆமா அத்தை செஞ்சது தான் தப்பு. அதனால மீனாவிடம் மன்னிப்பு கேட்கணும் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications