சிறகடிக்க ஆசை: மாட்ட போகும் ரோகிணி.. மனோஜ்க்கு வசீகரன் வைத்த ஆப்பு.. சந்தோஷத்தில் மீனா.. செம முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் நவம்பர் 22ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் முத்துவை காரில் கூட்டிட்டு போகும் மீனா ஒரு கோயிலுக்கு போய் பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்லி தன்னை தூக்கும்படி கட்டளையிடுகிறார்.

அதைத் தொடர்ந்து வசீகரன் ரோகினியிடம் பணம் கேட்பதற்காக போன் செய்ய போனை மனோஜ் எடுத்து விடுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கார் மீண்டும் கிடைத்ததால் முத்து மீனாவிற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று எங்கேயாவது போயிட்டு வரலாம் வா என்று கூப்பிட்டு காரில் போய்க்கொண்டிருக்கிறார். அப்போது மீனா தான் சொல்லும் இடத்திற்கு போங்க என்று சொல்கிறார். அதற்கு சரி என்று முத்துவும் சொல்ல எங்கே போகிறோம் என்பதை சொல்லாமலேயே மீனா அந்த பக்கம் போங்க இந்த பக்கம் போங்க என்று வழியை மட்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.
இதனால் முத்து குழப்பத்தில் இருக்கிறார். ஒரு வழியாக கடைசியில் ஒரு பூக்கடையில் இறங்கி பூ வாங்கிக்கொண்டு, திரும்ப ரொம்ப தூரம் போய் கடைசியில் ஒரு கோவிலில் நிறுத்த சொல்கிறார். இங்கு சாமி கும்பிட தான் இவ்வளவு தூரம் வந்தியா சரி கும்பிட்டுட்டு வா என்று முத்து சொல்ல, அது முடியாது நாம ரெண்டு பேரும் தான் சேர்ந்து போகணும் என்று மீனா சொல்கிறார். அதோடு கார் திரும்ப உங்களுக்கு கிடைத்தால் சில பரிகாரம் செய்ய வேண்டும் என்று நினைத்து இருந்தேன் என்றும் தன்னுடைய வேண்டுதல் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது அங்கு படிக்கட்டில் எல்லோரும் மனைவியை தூக்கிக்கொண்டு போகின்றனர். இதை பார்த்து ஏன் எல்லாரும் பொண்டாட்டியை தூக்கிக்கிட்டு போறாங்க என்று முத்து விசாரிக்க அதற்கு இந்த கோவிலோட வேண்டுதலே இப்படித்தான். வாங்க போகலாம் நீங்களும் என்னை தூக்கிட்டு போகணும் என்று சொல்ல முதலில் மறுக்கும் முத்து பிறகு மீனாவை தூக்கிக்கொண்டு கடைசியில் மேலே போய் சாமி கும்பிடுகின்றனர்.
மறுபக்கத்தில் மனோஜ் விஜயாவிடம் வேலை தேடி நாலஞ்சு இடத்துக்கு போகணும் செலவுக்கு காசு கொடுமா என்று கேட்க, விஜயாவும் கொஞ்சம் பணம் கொடுக்கிறார். பிறகு மனோஜ் ரோகிணி கிட்ட சொல்லிட்டு வேலைக்கு போவதற்காக ரோகிணியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ரோகிணி ரெஸ்ட் ரூம் போன நேரத்தில் வசீகரன் ரோகினிக்கு போன் செய்கிறார்.
வக்கிர புத்தியை காட்டிய கோபிக்கு விழுந்த அடி.. ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்தது.. எதிர்பாராத முடிவு
அந்த போனை மனோஜ் அட்டென்ட் பண்ணி யார் என்று விசாரிக்க வசீகரன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து பிறகு போனை கட் பண்ணி விடுகிறார். ரோகிணி வந்ததும் மனோஜ் உனக்கு போன் வந்தது. ஆனால் யாருமே பேசல என்று மனோஜ் போனை கொடுத்துவிட்டு சென்று விடுகிறார். அதை தொடர்ந்து ரோகிணி வசுகரனுக்கு போன் பண்ணி உனக்கு என்னதான் பிரச்சனை? இப்படி ஏன் டார்ச்சர் பண்ற என்று கேட்கிறார்.
அதற்கு வசீகரன் எனக்கு பணம் தேவை போன மாசம் தரவேண்டியதில் 25 பாக்கி இருக்கு இந்த மாசமும் 50,000 பணத்தை கொடுத்துட்டா நான் ஏன் உன்னை டார்ச்சர் பண்றேன் என்று கேட்கிறார். அதற்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறேன் என்று ரோகினி சொல்ல, அதற்கு வசீகரன் நீ தான் பெரிய இடத்தில் கல்யாணம் பண்ணி இருக்கியே, உன் புருஷன் வேலைக்கு போறான். நான் கேட்ட பணத்தை கொடு என்று பேசுகிறார்.
அதற்கு ரோகினி சரி பணம் தரேன் எங்க வரணும் என்று கேட்டு விசாரிக்க அதற்கு வசீகரன் ஒரு பார்க்கிற்கு வர சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. அதே நேரத்தில் வசீகரன் சொன்ன பார்க், மனோஜ் வேலைக்கு போகாமல் இருக்கும் பார்க் தான் என்று தெரிகிறது. இதனால் மனோஜ் முதலில் மாட்ட போகிறாரா? அல்லது ரோகிணி முதலில் மாட்டப் போகிறாரா? என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications