அண்ணாமலைக்காக மீனா எடுத்த முடிவு.. ரோகினியின் பாடு திண்டாட்டம்.. வீட்டிற்குள் நடக்கும் அடுத்த போர்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 2ஆம் தேதியில் இருந்து நான்காம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் அண்ணாமலை நான் மருந்து சாப்பிட வேண்டும் என்றால் மீனா மீண்டும் இந்த வீட்டிற்கு வர வேண்டும் என்று ஸ்ட்ரைக் பண்ணுகிறார்.

இதனால் முத்து வேறு வழியில்லாமல் மீனாவை வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார். அப்போது மீனா புது கண்டிஷன் போடுகிறார். இந்த நிலையில் இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிலையில் விஜய் டிவியில் டிஆர்பி யில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சில வாரங்களாக எதிர்நீச்சல் சீரியல் அதே 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வருவதால் இந்த சீரியல் மூன்றாவது இடத்திற்கு போயிருந்தது.
இந்த நிலையில் இந்த வாரம் மீண்டும் தன்னுடைய முதல் இடத்திற்கு வந்திருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியலில் எதிர்பாராத பல திருப்பங்களும் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் ரவி ஸ்ருதியின் திடீர் திருமணத்தால் வீட்டில் பல பிரச்சனைகள் போய்க்கொண்டிருக்கிறது. அதுபோல இன்னொரு பக்கத்தில் மனோஜ் வேலைக்கே போகாமல் தான் வேலைக்கு போய்க் கொண்டிருப்பதாக வீட்டில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இனி அந்த உண்மை எப்போது தெரியும் என்று எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது. அதுபோல ரோகினிக்கு ஏற்கனவே கல்யாணம் முடிந்து ஒரு குழந்தை இருக்கிறது என்ற உண்மையையும் அவர் பணக்கார வீட்டு மகள் இல்லை என்பதும் விஜயாவுக்கு தெரிய வரும்போது என்ன மாதிரி நிலைமை மாறும் என்றும், அதுபோல மீனாவின் தம்பி தான் விஜயாவிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாயை பிடுங்கிக் கொண்டு ஓடியது என்ற உண்மையும் தெரிய வரும்போது அடுத்து என்ன பிரச்சனை நடக்கும் என்பது பற்றியும் ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இப்போது ரவியின் திருமணத்திற்கு மீனாதான் காரணம் என்று தவறாக புரிந்து கொண்டிருக்கும் முத்து மீனா இந்த வீட்டிற்கு வரக்கூடாது என்று மீனாவை வீட்டை விட்டு அனுப்பி இருந்தார். அப்போது மீனாவும் இனி நீங்களா கூப்பிடற வரைக்கும் நான் இந்த வீட்டுக்குள் வரமாட்டேன். நான் தேடி வரும்போது நீங்க என்னை அவமானப்படுத்தினீங்க.
இனி நீங்க என்னை தேடி வரும் போது நான் இருக்க மாட்டேன் என்று வசனம் பேசிவிட்டு வீட்டை விட்டு கிளம்பி போயிருந்தார். அதற்கு பிறகு முத்து குடித்துவிட்டு வீட்டில் வந்து செய்த செயலால் அண்ணாமலைக்கு நெஞ்சுவலி வந்து பல போராட்டத்திற்கு பிறகு அவர் ஆபரேஷன் நல்லபடியாக முடிந்திருக்கிறது. இந்த நிலையில் புதியதாக வெளியான ப்ரோமோவில் அண்ணாமலையை வீட்டிற்கு கூட்டிட்டு வருகின்றனர்.
அப்போது வீட்டிற்கு வந்ததுமே மீனாவை எங்கே என்று அண்ணாமலை கேட்க அதற்கு முத்து நீங்க மாத்திரை போடுங்க அவ வருவா என்று சொல்ல, அதற்கு மீனா வராம நான் மாத்திரை போடவும் மாட்டேன், சாப்பிடவும் மாட்டேன் என்று அண்ணாமலை சொல்ல அதனால் முத்து நீங்க மாத்திரை போடுங்க நான் இப்ப கூட்டிட்டு வரேன் என்று சொல்லி மீனா வீட்டிற்கு வருகிறார்.
அங்கு மீனாவிடம் என்ன பாத்துகிட்டு இருக்கே வா போகலாம் என்று கூப்பிடுகிறார். அதற்கு மீனா எங்க என்று கேட்கிறார். இவ வருவாளா மாட்டாளா அங்கே எங்க அப்பா மாத்திரை சாப்பிட மாட்டேன்னு அடம்பிடிக்கிறாரு. எங்க அப்பாவுக்காக தான் நான் இப்போ இங்க வந்து இருக்கேன் என்று சொல்கிறார். அதற்கு மீனா நான் வரேன் ஆனா உங்களுக்காக இல்ல மாமாவுக்காக வரேன் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வருகிறார்.
வீட்டு வாசலில் நின்றபடி அண்ணாமலையை கண்கலங்க பார்க்கிறார் இப்படியாக ப்ரோமோ முடிவு அடைந்து இருக்கிறது. இந்த நிலையில் ஏற்கனவே வீட்டு பத்திரத்தை காணவில்லை என்று முத்து தேடிக் கொண்டிருந்ததால் அதை ஒருவேளை வழக்கம்போல மனோஜ் திருடிக் கொண்டு போய் இருந்தால் இனி அதை வைத்து ஒரு பிரச்சனை நடக்கும். அப்படி மட்டும் நடந்திருந்தால் விஜயா மற்றும் ரோகினியின் பாடு திண்டாட்டம் தான். ஆனாலும் என்ன ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள் என்று வரும் எபிசோடுகளில் பார்ப்போம்.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications