சிறகடிக்க ஆசை: மீனாவிடம் கோபத்தை காட்டிய அண்ணாமலை.. விஜயா போடும் ப்ளான்.. முத்து சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் நான்காம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் வீட்டுக்கு வந்த மீனாவிடம் அண்ணாமலை அன்னைக்கு நீ என்கிட்ட பொய் சொல்லிக்கிட்டு தானே கோவிலுக்கு போயிருக்க, ஸ்ருதி கிட்ட பேச போறேன் என்று நீ என்கிட்ட சொல்லலையே என்று கேள்வி கேட்கிறார்.
அதைத் தொடர்ந்து மீனாவையும் முத்துவையும் பிரித்து விட வேண்டும் என்று விஜயா ப்ளான் போடுகிறார். அதே நேரத்தில் முத்து சொன்ன வார்த்தையால் மீனா கவலைப்படுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனா அம்மா வீட்டில் இருக்கிறார். அப்போது எத்தனை நாளைக்கு இந்த வீட்டிலேயே இருப்ப. இப்பவே அக்கம் பக்கத்தினர் எல்லாம் என்ன ஆச்சுன்னு கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க என்று சொல்ல, அதற்கு மீனா அவர் வந்து என் மேல தப்பு இல்லன்னு புரிஞ்சுகிட்டு என்ன கூப்பிட்டா தான் நான் போவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அப்போது முத்துவும் அங்கு ஓடி வருகிறார். முத்துவிடம் இந்திரா மீனா பன்னுனது தப்பு தான். ஏதோ தெரியாம பண்ணிட்டா. அவளுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்ல அதற்கு முத்து சில பேரை நான் நம்புனதற்கு எனக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டாங்க என்று மீனாவை குத்தி காண்பிக்கும் விதமாக குத்தலாக பேசுகிறார். அதோடு எங்க அப்பா அங்க மாத்திரை சாப்பிடாமல் உட்கார்ந்து இருக்கிறார்.
நான் சீக்கிரமாக வீட்டுக்கு போகணும் வா என்று கூப்பிடுகிறார். அதற்கு மீனா நான் வரவில்லை என்று கோபமாக சொல்கிறார். அதனால் இந்திராவும் சீதாவும் சேர்ந்து மீனாவை சமாதானப்படுத்தி முத்துவோடு அனுப்பி வைக்கின்றனர். அண்ணாமலை வீட்டிற்கு மீனா வந்ததும் மாமனாரை பார்த்து கையெடுத்து கும்பிட்ட நான் எந்த தப்பும் பண்ணல, அன்னைக்கு ஸ்ருதி கிட்ட கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க என்று பேசி புரிய வைக்க தான் ரவி என்னை கோயிலுக்கு கூட்டிட்டு போனாரு.
அவங்க கல்யாணம் பண்ணிக்க போறாங்கன்னு எனக்கு முன்னாடியே தெரியாது. என்னை மன்னிச்சிடுங்க மாமா என்று சொல்ல, அதற்கு அண்ணாமலை நான் வளர்த்த பசங்களே சரியில்ல. மனோஜ் அவன் பங்குக்கு பண்ணுனான். ரவி இப்போ இப்படி பண்ணிட்டான். உன் மேல கோபப்பட எனக்கு என்ன இருக்கு. இருந்தாலும் உன் மேல ஒரு சின்ன வருத்தம் எனக்கு இருக்க தான் செய்யுது.
அன்னைக்கு கோவிலுக்கு சாமி கும்பிட போறேன்னு சொன்னியே இந்த மாதிரி ஸ்ருதியை பார்த்து பேச போறேன் என்கிற உண்மையை மறைச்சுட்டல்ல என்கிட்ட? என்று கேட்க, அதற்கு மீனா நான் பண்ணினது தப்பு தான். அதுக்கு எந்த காரணம் சொல்லியும் சமாதானம் செய்ய முடியாது என்று பேசுகிறார். அதை தொடர்ந்து மீனா மாத்திரையை எடுத்து கொடுக்க, அண்ணாமலை மாத்திரையை சாப்பிடுகிறார்.
அடுத்ததாக இரவு தூங்கும் போது முத்து மீனாவிடம் நான் இந்த வீட்டுக்கு உன்னை கூட்டிட்டு வந்தது எங்க அப்பாவுக்காக தான். அதுக்காக உன்னை நான் மன்னிச்சிட்டேன்னு நினைக்காத. மத்தபடி நீ செஞ்ச நம்பிக்கை துரோகத்தை நான் மறக்க மாட்டேன். நமக்குள்ள வேற எதுவும் இல்லை என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
இதையெல்லாம் கேட்ட அண்ணாமலை பிறகு முத்துவிடம் மீனா கிட்ட அதிகமாக சண்டை போடாத. கல்யாணம் பண்ணிக்கிட்டு போன ரவியே அங்க நல்லாதான் இருப்பான். அவனால நீங்க ஏன் சந்தோஷம் இல்லாம இருக்கணும் என்று அட்வைஸ் பண்ணுகிறார். அதற்கு முத்து அதை பத்தி பேச வேண்டாம் விடுங்க என்று சொல்கிறார்.

அடுத்த நாள் காலையில் மீனா அண்ணாமலையை சாப்பிட கூப்பிடுகிறார். அப்போது விஜயாவும் ரோகிணியும் அங்கு வந்து சாப்பாடு என்ன இருக்கிறது என்பதை பார்த்து அங்கு பூரி இருப்பதை பார்த்ததும் எண்ணை பொருள் எல்லாம் மாமா சாப்பிட்டா அவருக்கு கொலஸ்ட்ரால் வந்துரும் என்று ரோகினி சொல்கிறார். அதற்கு மாமாக்கு தனியா கஞ்சி வச்சிருக்கேன் என்று சொல்கிறார்.
பிறகு நாங்க இந்த பூரியை சாப்பிட்டாலும் எங்களுக்கும் கொலஸ்ட்ரால் வந்துரும் என்று ரோகினியும் விஜயாவும் சொல்ல அதற்கு மீனா என் புருஷனுக்கு பிடிக்கும் அதனாலதான் பூரி செஞ்சேன் என சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைந்து இருக்கிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications