சிறகடிக்க ஆசை: மீனாவை திட்டும் ரோகிணி.. அதிர்ச்சி கொடுத்த விஜயா.. ரவியால் வரும் பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அக்டோபர் 11ம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் மீனா ரோகினியின் அம்மாவையும், மகனையும் வீட்டிற்கு கூட்டி வந்து துருவித் துருவி கேள்வி கேட்டது குறித்து ரோகிணி கோபப்படுகிறார்.

அதே நேரத்தில் ரவிக்கு ஸ்ருதி திருமண விஷயத்தில் புது பிரச்சனையை கொடுக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மீனா ரோகிணியின் அம்மா மற்றும் கிரிஷ் இருவரிடமும் கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டிருக்க இதையெல்லாம் மறைந்து இருந்து பார்க்கும் ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். ஆனால் மீனாவின் கேள்விகளுக்கு ரோகினியின் அம்மா சமாளித்து விட்டு கிரிஷ்ஷை கூட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

அதைத்தொடர்ந்து ரூமிற்கு வந்த ரோகினி வித்யாவிடம் இந்த மீனா சும்மாவே இருக்க மாட்டா போல, இவ என்ன அன்னை தெரசாவா இப்படி பண்ணிக்கிட்டு இருக்கா? என்று கோபமாக திட்ட அதற்கு வித்யா ஆமாடி இந்த பொண்ணு மீனா லேசு பட்டவ கிடையாது. உனக்கு அவளால தான் ஆப்பு இருக்குன்னு நினைக்கிறேன். இப்பவும் சொல்றேன் நீ இந்த வாழ்க்கை உனக்கு நிலைக்கனும்னா மனோஜை கூட்டிட்டு தனி குடித்தணும் போயிடு என்று எச்சரிக்கிறார்.
அதைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது அந்த பக்கமாக வரும் விஜயா, நீ எப்ப மா வந்த எனக்கு பார்வதி எப்படி நல்ல தோழியோ, அதுபோல நீ ரோகினிக்கு நல்ல தோழி என்று பேசிவிட்டு, இரு நான் ஜூஸ் எடுத்துட்டு வரேன் என்று கிளம்பி போகிறார். அடுத்ததாக ரெஸ்டாரண்டில் ஸ்ருதி எனக்கு ஒரு முடிவு தெரியாம நான் இங்கிருந்து போக மாட்டேன் என்று உட்கார்ந்து இருக்க ரவி சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்ப முயற்சி செய்கிறார்.
ஆரம்பத்தில் நான் போகமாட்டேன் என்று அடம் பிடித்த ஸ்ருதி பிறகு கடைசியாக இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான் உனக்கு டைம். நீ உன்னுடைய முடிவை சொல்லலன்னா நான் எடுக்க போற முடிவால் நீ லைஃப் லாங் கஷ்டப்படுவ என்று மிரட்டி விட்டு கிளம்பி போகிறார். அதைத் தொடர்ந்து ரவி வீட்டிற்கு வந்து இதைப்பற்றியே சிந்தனையில் இருக்கிறார். அந்த நேரத்தில் ஸ்ருதி போன் போட்டுக் கொண்டே இருக்க ரவி போனை எடுக்காமல் இருக்கிறார். அதனால் வாய்ஸ் மெசேஜ் போடுகிறார்.
இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான் உனக்கு டைம் நீ முடிவை சொல்லலனா அப்புறம் லைப் லாங் கஷ்டப்படுவ என்று வாய்ஸ் மெசேஜிலும் அதையே ஸ்ருதி சொல்ல, ரவி அதைக் கேட்டு எதுவும் பேசாமல் யோசித்துக் கொண்டே இருக்கிறார். பிறகு அடுத்த நாள் காலையில் ஸ்ருதி வீட்டுக்கு வந்த அவருக்கு நிச்சயம் பண்ணி இருக்கும் மாப்பிள்ளை விஜய் ஸ்ருதியை ஷாப்பிங்கிற்கு அழைத்து செல்கிறார் இவர்கள் இருவரும் ஷாப்பிங் போன இடத்தில் வந்து ரவி சர்ப்ரைஸ் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications