சிறகடிக்க ஆசை: வாக்கு கொடுத்து சிக்கும் அண்ணாமலை.. அண்ணன், தம்பியால் பிரச்சனையில் மாட்டும் முத்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அக்டோபர் 13ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
இதில் அண்ணாமலை இடம் ஸ்ருதியின் அப்பா இனி உங்க பையன் என் பொண்ணு கிட்ட பேசக்கூடாது என்று வாக்குவாதம் செய்ய, அதற்கு அண்ணாமலை அவரிடம் என் பையன் என் பேச்சை தட்ட மாட்டான் என்று வாக்கு கொடுக்கிறார்.

அதுபோல வேலைக்கே போகாமல் வீட்டில் சம்பளத்தை கொடுக்க வேண்டுமே என்று மனோஜ் புதியதாக பிரச்சனை ஒன்றில் மாட்டுகிறார். இந்த வழியில் இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில் மனோஜ் முத்துவிடமிருந்து தப்பிப்பதற்காக பிச்சைக்காரன் போல வேஷம் போட்டு அமர்ந்திருக்க, அதை நிஜ பிச்சைக்காரன் என்று நினைத்த முத்து அவருக்கு ஐந்து ரூபாயை போட்டுவிட்டு கிளம்ப பிறகு மனோஜ் இன்னைக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமே என்று யோசித்து கொண்டிருக்கும்போது பார்க்கில் தன்னோடு அறிமுகமான நண்பரிடம் கடன் கேட்கிறார்.
அதற்கு அந்த நபர் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு மனோஜை போட்டோ எடுத்துக்கொண்டு அவருடைய ஆதார் கார்டையும் வாங்கி வைத்துக்கொண்டு அவருக்கு இருபதாயிரம் ரூபாய் கொடுக்கிறார். பிறகு ஸ்ருதி வீட்டிற்கு வந்ததும் தான் பிஜூவை திருமணம் செய்ய சம்மதம் என்று சொல்லி டிராமா போட்டு ரூமிற்கு சென்று ரவியோடு போனில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் அவருடைய அம்மா ஸ்ருதி பிஜூ கூட தான் பேசிக் கொண்டிருக்கிறார் என்று ஸ்ருதி சொன்னதை நம்பி விடுகிறார்.
அதைத்தொடர்ந்து கொஞ்ச நேரத்திற்குள் வீட்டிற்குள் பிஜு வர, ஸ்ருதி போனில் பேசிக் கொண்டிருப்பதை பிஜூவுடன் இல்லை என்பதை ஸ்ருதியின் அம்மா புரிந்து கொண்டு ஸ்ருதியை அறைக்குள் அடைத்து வைத்து விடுகிறார். ஆனாலும் அசராத ஸ்ருதி தன்னிடம் இருக்கும் இன்னொரு ஃபோனில் ரவிக்கு போன் பண்ணி தன்னை வீட்டிற்குள் அடைத்து வைத்திருப்பதைப் பற்றி சொல்லி, சீக்கிரமாக நாம் கல்யாணம் பண்ண வேண்டும். அதற்கான ஏற்பாடு பண்ணு என்று சொல்ல ரவியும் அதற்கு சம்மதம் தெரிவிக்கிறார்.
அதைத்தொடர்ந்து ஸ்ருதி அப்பா பார்கில் அண்ணாமலையை சந்தித்து பேசுகிறார். அப்போது ரவியை என் மகளுடன் பேச வேண்டாம் என்று சொல்லுங்க. உங்க பையனை கண்டிச்சு வைங்க என்று அவர் சொல்ல, அதற்கு அண்ணாமலை அதை உங்க பொண்ணு கிட்ட சொல்லுங்க என்று பதிலடி கொடுக்கிறார்.
அதற்கு என் பொண்ணு என் பேச்சைக் கேட்க மாட்டா என்று அவர் சொல்ல, அதற்கு அண்ணாமலை நான் என் பையனை அப்படி வளர்க்கல என்று வீராப்பாக பேசிவிட்டு என் பேச்சை என் பையன் கண்டிப்பாக கேட்பான் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications