சிறகடிக்க ஆசை: அதிகாரமா பேசிய மனோஜ்.. கையில் பெல்ட்டை எடுத்த மீனா.. விஜயா நிலைமை அவ்வளவுதான்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அக்டோபர் 14ஆம் தேதிக்கான எபிசோடில், விஜயா வீட்டிற்கு வந்த மீனாவின் உறவினர்களை அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார். அதே நேரத்தில் மனோஜ் மீனாவை தனக்காக வேலை செய்யும்படி அதிகாரம் செய்யும்போது மீனா பெல்ட்டை எடுத்து மனோஜை அடிக்கப் போகிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ரவிக்கும் ஸ்ருதிக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் ஸ்ருதி வீட்டை விட்டு போனதால் இந்த பிரச்சனையை சாதகமாக பயன்படுத்தி அவள் வீட்டை விட்டு போனா போகட்டும் அவளே வராமல் நீ அவளை போய் கூப்பிட போகாதே என்று ரவியை மிரட்டுகிறார். ரவியும் சரி என்று ரெஸ்டாரண்டுக்கு போய்விடுகிறார். இதனால் மீனா ரவிக்கு போன் பண்ணி ரவியை திட்டுகிறார்.

பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லை என்றால் நீங்க தானே கூட இருந்து பார்க்கணும். உங்க அண்ணன் எனக்கு உடம்பு சரியில்லாத நேரத்தில் எப்படி பார்த்துக்கொண்டார். ஆனால் நீங்கள் ஏன் இப்படி பொறுப்பில்லாமல் இருக்கீங்க. இதேபோல உங்களுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்திருந்தால் ஸ்ருதி இப்படி வேலைக்கு கிளம்பி போயிருக்க மாட்டாங்க என்று திட்ட அதற்கு ரவி நான் சீக்கிரமா வந்துடுறேன் என்று சொன்னேன் ஆனா அதுக்குள்ள ஸ்ருதி இப்படி வீட்டை விட்டு போயிட்டா என்று சமாளிக்கிறார்.
ஆனாலும் மீனா ஸ்ருதியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு கூட்டிட்டு வரணும் என்று சொல்கிறார். அடுத்ததாக மீனா வீட்டிற்கு அவருடைய சித்தி குடும்பத்தினர் கல்யாணத்திற்கு பத்திரிக்கை வைக்க வருகின்றனர். அப்போது அவர்களிடம் மீனா சாப்பிட்டு விட்டு தான் போகணும் என்று கட்டாயப்படுத்த அவர்களும் சரி என்று இருக்கின்றனர். பிறகு வீட்டில் யாரும் இல்லாததால் மீனா முத்துவுக்கு போன் போட்டு எங்க சித்தி வீட்டில் இருந்து வந்திருக்காங்க என்று சொல்ல முத்து நான் இப்போ சவாரிக்கு போயிருக்கிறேன் உடனே வர முடியாது என்று சொல்லி அவர்களை சாப்பிட்டு விட்டு அனுப்பி வை என்று சொல்கிறார்.

அதைத்தொடர்ந்து மீனா அவர்களுக்கு சாப்பாடு பரிமாறிக் கொண்டிருக்கும்போது விஜயா வீட்டிற்கு வருகிறார். அவர்களை பார்த்ததும் யார் என்று விஜயா விசாரிக்க, மீனா தன்னுடைய சொந்தக்காரங்க என்று அறிமுகம் செய்கிறார். ஆனாலும் மீனாவை ரூமிற்குள் கூப்பிட்டு பத்திரிக்கை கொடுக்க வந்தால் உடனே போக வேண்டியது தானே இருந்து சாப்பிட்டு தான் போகணும் என்று இருக்காங்களா?
நாங்க வீட்டை விட்டு வெளியே போன பிறகு இப்படித்தான் வர்றவங்க போறவங்களுக்கு எல்லாம் சமைச்சு போட்டு எல்லா காய்கறி மளிகை சாமான்களை காலி பண்ணுறியா என்று திட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் வந்தவர்கள் கோபப்பட்டு கிளம்பி போய் விடுகிறார்கள். அதைத் தொடர்ந்து மீனா பூ கட்ட போயிருக்கிறார். அங்கு அவர் சோகமாக இருப்பதை பார்த்து அவருடைய தோழிகள் என்னாச்சு என்று விசாரிக்க, வீட்டில் நடந்த பிரச்சனையை பற்றி அவர் சொல்கின்றனர்.

அப்போது அவர்கள் நீ இப்படியே இருந்தால் உன்னுடைய மாமியார் ஆட்டம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும் உன்னுடைய மாமியாருக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்றால் நீ அவங்களை ஒருநாள் பென்டன் எடுத்து அடிச்சா தான் முடியும் என்று சொல்ல, அதற்கு மீனா நான் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன் என்று சொல்லி விடுகிறார். பிறகு மீனா வீட்டிற்கு வரும்போது விஜயா என்ன இவ்வளவு நேரம் எங்க போயிருந்த என்று திட்ட, நான் பூ கட்ட போயிருந்தேன் கொஞ்சம் நேரம் ஆகிடுச்சு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அப்போது மனோஜ் தும்மி கொண்டே வீட்டிற்குள் வருகிறார். என்ன ஆச்சுடா என்று விஜயா விசாரிக்க நான் பானி பூரி சாப்பிட்டேன் என்று சொன்னதும் உனக்கு தான் பானிபூரி பிடிக்காதே நீ எதற்காக சாப்பிட்ட என்று விஜயா திட்டிக்கொண்டு மீனாவை கூப்பிட்டு மனோஜ்க்கு ஜலதோஷம் பிடிச்சிருக்கு நீ போய் நண்டு வாங்கிட்டு வந்து சூப் வை என்று சொல்ல நான் வைக்க மாட்டேன். நான் இவருக்காக தனியா எதுவும் செய்ய மாட்டேன் என்று சொல்கிறார்.

அதற்கு விஜயா நான் உன் சொந்தக்காரங்களை அவமானப்படுத்தினேன்னு நீ என்னை எதிர்த்து பேசுறியா என்று திட்டுகிறார். அப்போது மனோஜ் எங்க அம்மாவை நீ எதிர்த்து பேசுவியா? என்று திட்ட அதற்கு மீனா நான் உங்களுக்கு எதுவும் செஞ்சு தரமாட்டேன். உங்களுக்கு வேணும்னா உங்க பொண்டாட்டிய செய்ய சொல்லுங்க என்று சொல்ல, அதற்கு மனோஜ் ரோகிணியை வேலை செய்ய சொல்லி நீ சொல்லுவியா?
ரோகிணி ஸ்டேட்டஸ் எங்க? நீ எங்க? நீ எல்லாம் ரோகிணியை வேலை செய்ய சொல்லுவியா? அம்மா சொன்னா நீ செஞ்சுதான் ஆகணும். நீ போய் நண்டு வாங்கிட்டு வந்து சூப் வை என்று மிரட்டி பேச, கோபமான மீனா ரூமிற்கு நேராக சென்று கையில் பெல்ட் எடுக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications