சிறகடிக்க ஆசை: விஜயாவிடம் பேசிய பிஏ.. முத்து கேட்ட கேள்வி.. ரோகிணியை மிரட்டிய சிட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அக்டோபர் 19ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணியின் பழைய பிஏ விஷயம் பற்றி வித்யா விஜயாவிடம் உலறிவிடுகிறார். அதனால் ரோகிணி புது பிரச்சனையில் சிக்கி இருக்கிறார்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மீனாவின் தங்கை சீதாவை பொண்ணு பார்க்க வந்திருந்த மாப்பிள்ளை வீட்டினருக்கு சீதாவை பிடித்து போய்விடுகிறது. அவர்கள் எங்க வீட்டிற்கு வந்து நீங்களும் மாப்பிள்ளையை பார்த்து விட்டுப் போங்க என்று சொல்ல சீதா வெக்கப்படுகிறார். அப்போது முத்து சீதாவை கிண்டல் செய்ய, இப்போ குடும்பம் இருக்கிற சூழ்நிலையில் கல்யாணம் தேவையா? என்று சீதா மீண்டும் கேட்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

அதற்கு முத்து நீ எந்த மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என்று நினைத்த அதை சொல்லு என்று கேட்க, சீதா தன்னுடைய மனதில் இருக்கும் ஆசையை சொல்கிறார். அடுத்த கட்டத்தில் ரோகிணி பிரண்ட் வித்யா வீட்டிற்கு பழைய பிஏ வந்திருக்கிறார். அவர் ரோகிணியிடம் பேச வேண்டும் போன் பண்ணு என்று மிரட்ட, வித்யா ரோகிணிக்கு போன் பண்ணுகிறார்.

அந்த நேரத்தில் விஜயா வந்து போனை எடுக்கிறார். அப்போது வித்யா யார் பேசுறாங்க என்றே தெரியாமல் நீ எங்கடி இருக்கிற அந்த பிஏ வீட்டுக்கே வந்து இருக்கிறான் என்று உளறி விடுகிறார். அப்போது ரோகிணி வந்ததும் உன் பிரண்டு வித்யா என்று வந்ததால் நான் போனை எடுத்தேன் என்று போனை கொடுத்துவிடுகிறார். ரோகிணிடம் பிஎ போனில் மிரட்டுகிறார். நான் கேட்ட பணம் என்ன ஆச்சு என்று அவர் கேட்டது தெரியக்கூடாது என்று சமாளிக்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

பிறகு போனை வைத்ததும் விஜயா யார் அந்த பிஏ என்று கேட்க, அதற்கு எங்க அப்பாவின் பிஏ நான் அவரிடம் லோன் எடுக்கணும் என்று சொல்லி இருந்தேன் என்று சொல்ல, உங்க அப்பாவுக்கு ஒரு மூணு கோடி சொத்து இருக்குமா என்று கேட்க, இல்ல 300 கோடி என்று சொல்லி விடுகிறார். இதைக் கேட்டு சந்தோஷமான விஜயா அதிர்ச்சியாகி ரூமை விட்டு வெளியே வந்து அண்ணாமலையிடம் ரோகிணியின் அப்பா அக்கவுண்டில் 300 கோடி இருக்காம்.

television siragadikka aasai serial vijay tv

எல்லாமே மனோஜ்க்கு தானே என்று சொல்ல அதற்கு அண்ணாமலை என்னதான் பணம் இருந்தாலும் அளவுக்கு மீறி சாப்பிட முடியாது. அதனால நீ அடுத்தவங்க பணத்துக்கு ஆசைப்படாத என்று சொல்கிறார். மறுபக்கத்தில் முத்துவும் மீனாவும் காரில் வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது முத்து நான் ஒன்னு கேட்பேன் நீ கோபப்படக்கூடாது என்று சொல்லிவிட்டு நீ உனக்கு என்ன மாதிரி புருஷன் வரணும் என்று ஆசைப்பட்ட என்று கேட்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

இறுதியாக ரோகிணி சிட்டியை பார்க்க போகிறார். அப்போது சிட்டி சத்யாவின் வீடியோ எடுத்தாச்சா என்று கேட்க, இல்லை என்று ரோகிணி சொல்கிறார். ஆனால் அந்த பிஏவால் எனக்கு நிறைய பிரச்சனை வந்துட்டே இருக்கு என்று ரோகிணி சொல்ல, நீங்க அந்த வீடியோ தந்தால்தான் நான் நீங்க கேட்டதை செஞ்சு தருவேன் என்று சிட்டி சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+