சிறகடிக்க ஆசை: ஸ்ருதியால் மாட்டிக்கொண்ட மீனா.. சிக்னலும் சதி செய்யுதே.. முத்துவின் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் அக்டோபர் 20ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகியிருக்கிறது.

அதில் அண்ணாமலையை போலீஸ் நிலையத்தில் அவமானப்படுத்தி ஜெயிலுக்குள் அடைக்கின்றனர்.

siragadikka aasai serial October 20th promo and Episode Highlights

அப்போது அங்கு வரும் முத்து குடும்பத்தினருக்கு போலீஸ்காரர்கள் அதிர்ச்சியான தகவலை சொல்கின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி பார்க்கலாம்.

இந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் போலீஸ் அண்ணாமலை ஸ்டேஷனுக்கு வந்து எழுதி கொடுத்துட்டு கிளம்புங்க என்று ஜீப்பில் உட்கார சொல்ல, அதற்கு மனோஜ் நாங்க பின்னாடியே அவரை கூட்டிட்டு வருகிறோம் என்று சொல்ல அதற்கு போலீஸ் நாங்களே கூட்டிட்டு வந்து விடுகிறோம் என்று ஏமாற்றி அழைத்து செல்கின்றனர். ஸ்டேஷனுக்கு சென்றதும் அண்ணாமலையிடம் போலீஸ் மரியாதை இல்லாமல் பேசுகின்றனர்.

சிறகடிக்க ஆசை: விஜய் டிவி சீரியலில் நடந்த அதிசயம்.. இனி நடக்கப் போவது இது தானா? இப்படி ஒரு முடிவா?
அதற்கு அண்ணாமலை நிச்சயமா என் பையன் தப்பு பண்ணி இருக்க மாட்டான் அவன் வீட்டுக்கு வந்ததும் நானே கூட்டிட்டு வரேன் என்று சொல்லி அங்கிருந்து கிளம்ப அதற்கு போலீஸ் உங்களை கைது பண்ணி கூட்டிட்டு வந்திருக்கோம். அப்படி எல்லாம் போக முடியாது என்று அதிர்ச்சி கொடுக்கிறார். அதோட உங்க பையன் இங்க வந்ததும் நீங்க போகலாம் என்று சொல்லி அவரை ஓரமாக உட்கார வைத்து திரும்பத் திரும்ப ரவி பற்றி விசாரிக்க அதற்கு அண்ணாமலை எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

siragadikka aasai serial October 20th promo and Episode Highlights

இதனால் கோபமான போலீஸ் அவரை ஜெயிலுக்குள் தள்ளுகின்றனர். இன்னொரு பக்கத்தில் மீனா வீட்டிற்கு வரும்போது அண்ணாமலையே போலீஸ் கூப்பிட்டு போவதை பார்த்ததும் மீனா முத்துக்கு போன் பண்ணி எல்லா விஷயத்தை சொல்லலாம் என்று நினைக்கிறார். அப்போது பேசிக் கொண்டிருக்கும் போது ரவி கல்யாணம் ஆகிவிட்டது என்ற விஷயத்தை சொல்லும் போது சிக்னல் இல்லாமல் ஃபோன் கட் ஆகி விடுகிறது.

ஆனாலும் அண்ணாமலை ஸ்டேஷனுக்கு போயிருக்கிறார் என்பதை கேள்விப்பட்டதும் முத்து பதறி அடித்து விட்டு ஸ்டேஷனுக்கு ஓடி வருகிறார். அதை தொடர்ந்து ஸ்டேஷனுக்கு வந்த மீனா போலீஸிடமும் எங்க மாமா ரொம்ப நல்லவரு அவரு விட்டுவிடுங்கள் என்று கெஞ்சி கொண்டிருக்கிறார் அதோடு ரவி ஸ்ருதிக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று சொல்ல முயற்சி செய்ய அப்போது மீனாவை பேச விடாமல் தடுத்து விடுகிறார்கள்.

தமிழ் குடும்பத்தோடு சேர்ந்த அர்ஜுன்.. குழந்தை பிறந்ததும் ராகினி கேட்ட கேள்வி.. எதிர்பாராத முடிவு
அப்போது முத்துவும் ஸ்டேஷனுக்கு வந்து எங்க அப்பாவ விட்டுருங்க என்று கெஞ்சி கேட்க, அதற்கும் போலீஸ் முடியாது என்று பேசி கொண்டு இருக்கின்றனர். அந்த நேரத்தில் கோவிலில் இருந்து எடுத்து வந்த நோட்டை பார்த்து அவங்களுக்கு காலையிலேயே கல்யாணம் ஆயிடுச்சு. இங்க மீனா என்பது யார்? என்று கேட்க அதற்கு முத்து என்னுடைய பொண்டாட்டி தான் என்று சொல்ல அவங்க தான் சாட்சி கையெழுத்து போட்டு இருக்காங்க என்று சொன்னதும் மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர்.

siragadikka aasai serial October 20th promo and Episode Highlights

இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து நாளைக்கு என்று வெளியான வீடியோவில் நீ தான் ரவிக்கு கல்யாணம் பண்ணி வச்சியா? இப்போ அவங்க எங்க இருக்காங்க என்று கேட்டு முத்து மீனாவை கன்னத்தில் அறைகிறார். அதைத்தொடர்ந்து ஸ்ருதியின் அப்பா அண்ணாமலையிடம் இது தான் பிள்ளைய நல்லா வளர்த்திருக்கிற லட்சணமா என்று கேட்டு அவமானப்படுத்துகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+