சிறகடிக்க ஆசை: விஜய் டிவி சீரியலில் நடந்த அதிசயம்.. இனி நடக்கப் போவது இது தானா? இப்படி ஒரு முடிவா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அக்டோபர் 17ஆம் தேதியில் இருந்து 21 ஆம் தேதி வரைக்கும் உள்ள ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இந்த ப்ரோமோவை பார்த்ததும் ரசிகர்கள் இது விஜய் டிவி சீரியல் வரலாற்றிலேயே இல்லாத வகையில் கதை வேகமாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

அதே நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரவி ஸ்ருதி திருமணம் நடைபெற்று இருக்கும் நிலையில் இனி இதுதான் நடக்கப்போகிறது என்பது ப்ரோமோவில் வெட்ட வெளிச்சமாகிறது. அது பற்றி பார்ப்போம்.
அந்த வகையில் விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை சீரியல் யாரும் எதிர்பார்க்காத வகையில் தான் ஆரம்பத்தில் இருந்தே கதை வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. சில சீரியல்களில் ட்விஸ்ட் என்கிற பெயரில் ஒரு உண்மையை தெரிய வைப்பதற்குள் பல மாதங்களை கடத்தி விடுகிறார்கள். ஆனால் இந்த சீரியலில் அடுத்தடுத்து கதை வேகமாக பயணித்து வருவது ரசிகர்களுக்கு இந்த சீரியல் மீதான ஆர்வத்தை கொடுத்திருக்கிறது.

அந்த மாதிரி தான் சில வாரங்களுக்கு முன்பு விஜயா வீட்டு பத்திரத்தை அடகு வைத்திருந்த விஷயம் வீட்டிற்கு தெரிய வந்தது. அப்போது மீனா தனக்கு தெரிந்த உண்மையை உடனே முத்துக்குக்கும் அண்ணாமலைக்கும் சொல்லி இருந்தார். இது பெரிய அளவில் பேசப்பட்டது சில சீரியல்களில் மாமியாரை காப்பாற்றுகிறேன் என்கிற பெயரில் உண்மைகளை மறைத்து அதையே பல மாதங்கள் கொண்டு போய்க் கொண்டிருப்பார்கள்.
ஆனால் இங்கே அப்படியெல்லாம் இல்லை என்பது பலருடைய பாராட்டைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. அது போல் தான் தற்போது கூட ரவி மற்றும் ஸ்ருதியின் திருமணமும் புதிதாக வெளியான ப்ரோமோவில் நடந்திருக்கிறது. ஏற்கனவே ஸ்ருதி மற்றும் ரவி காதலிக்கும் விஷயம் ஸ்ருதி வீட்டுக்கும் ரவி வீட்டிற்கும் தெரியவந்திருக்கும் நிலையில் ரவியின் அண்ணனான முத்து அந்த பொண்ணை கல்யாணம் செய்யக்கூடாது என்று ரவிக்கு வேறு திருமணம் செய்ய வேண்டும் என்று முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் அண்ணாமலையும் அந்த பெண்ணோடு பேசக்கூடாது என்று கூறி இருக்கிறார். ஆனால் ரதியும் ஸ்ருதியும் இரண்டு வீட்டினறையும் ஏமாற்றிவிட்டு திருமணத்தையும் நடத்தி இருக்கின்றனர். அதையெல்லாம் விடவும் இந்த திருமணத்தை நடத்தி வைத்தது மீனாவின் தங்கை சீதா தான். அதே நேரத்தில் ஸ்ருதிக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க என்று மீனாவை ஏமாற்றி ரவி கோவிலுக்கு கூட்டிட்டு வந்து இப்போது தனக்கு சாட்சி கையெழுத்து போட வேண்டும் என்று சொல்கிறார்.
இதனால் தனக்கு செய்த உதவிக்காக மீனா சாட்சி கையெழுத்து போட்டால் இதை தெரிந்து கொண்டதும் முத்து தாண்டவம் ஆட போகிறார். ஆனால் இந்த திருமண டிராக் இன்னும் சில நாட்கள் இழுத்துக் கொண்டு இருக்கும் என்று நினைத்திருந்த நிலையில் ஒரே நாளில் டக்கென்று முடிவுக்கு வந்துவிட்டது பலருடைய பாராட்டை பெற்று வருகிறது. அதுபோல விஜய் டிவி சீரியல்களில் அதிகமான சீரியல்களில் காதலித்த ஜோடி திருமணம் செய்ததாக சரித்திரமே இல்லை. அவர்களுக்கு கடைசியில் கட்டாயமாக ஜோடி மாற்றி தான் திருமணம் நடக்கும்.

அதுபோலத்தான் இந்த சீரியலிலும் நடக்கப் போகிறது என்று ரசிகர்கள் ஆரம்பித்ததில் இருந்தே கூறி வந்தனர். ஸ்ருதி தைரியமான பெண்ணாக இருக்கிறார். ஆனால் கடைசி நேரத்தில் ஏதாவது பிரச்சனையாகி மீனாவின் தங்கை சீதாவை தான் ரவி திருமணம் செய்வது போல வரும். அப்போது ஸ்ருதி மீனாவை பழிவாங்குவதற்காக முயற்சிகள் எடுக்கலாம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது கதை வேற மாதிரி மாறிவிட்டது.
இந்த நிலையில் இப்போதுதான் மீனாவும் முத்துவும் நன்றாக பழகி தங்களுடைய திருமண வாழ்க்கையை தொடங்கி இருக்கும் நிலையில் ரவி ஸ்ருதி திருமணத்தில் மீனா கலந்து கொண்டதால், இனி இவர்கள் இருவரும் பிரியப்போகிறார்கள் என்பது இப்போதே தெரிகிறது. ஆனாலும் அது நடக்கக்கூடாது என்பது பலருடைய ஆசையாக இருக்கிறது என்ன நடக்கப்போகிறது என்று பார்ப்போம்.












Click it and Unblock the Notifications