தமிழ் குடும்பத்தோடு சேர்ந்த அர்ஜுன்.. குழந்தை பிறந்ததும் ராகினி கேட்ட கேள்வி.. எதிர்பாராத முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலின் அக்டோபர் 20ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் ராகினிக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கும் நிலையில் தமிழ் குடும்பத்தோடு அர்ஜுன் சேர்ந்து விடுகிறார்.

tamilum saraswathiyum serial 20th October promo and episode full update

இதனால் அர்ஜுனின் குடும்பத்தினர் கோபத்தில் இருக்கும் நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வார்த்தையை ராகினி சொல்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் அர்ஜுன் தன்னிடம் வேலை பார்க்கும் நபரிடம் தமிழ் அடுத்ததாக என்ன பிளான் வச்சிருக்கான் என்று விசாரித்துக் கொண்டிருக்க, அவர் தமிழ் பெங்களூரில் இருக்கும் ஒரு நபரை சந்தித்து பேசி அவருடைய கம்பெனியில் வேலையை துவங்க இருப்பதாக சொல்ல, அதுவெல்லாம் முடியாது என்று அலட்சியமாக அர்ஜுன் பேசிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் தமிழ் அர்ஜுனுக்கு போன் செய்ய, கடைசியில் எனக்குதான் நீங்கள் கூப்பிடுவீங்கன்னு தெரியும். நான் தான் உங்களுக்கு உதவி செய்யணும் என்று வீம்பாக அர்ஜுன் பேசிக் கொண்டிருக்க, தமிழ் அறிவு இருக்கா உனக்கு கொஞ்சமாவது நான் அந்த நிலைமைக்கு என்னைக்கும் வரமாட்டேன். எங்க வீட்டு சொத்தை தான் நீங்க ஏமாத்தி எழுதி வாங்கிட்டீங்க. ராகினியையாவது நல்லா பார்த்து இருக்கீங்க என்று நினைத்தால் கடைசியில இப்படி பண்ணி இருக்க.

ராகினிக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா உன்ன சும்மா விடமாட்டேன். என் கையாலேயே உன்னை கொன்னு போட்டு விடுவேன் என்று திட்ட அதனால அதிர்ச்சியான அர்ஜுன் தமிழ் சார் என்னை ஆச்சு சொல்லுங்க என்று கேட்க உன் குடிகார மாமாவை நம்பி நீ ராகினியை அனுப்பி வச்சிருக்க, அவன் ஆக்சிடென்ட் பண்ணிட்டான். நான்தான் ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்கேன்.

ஆபத்தான நிலைமையில இருக்கா சீக்கிரமா ஹாஸ்பிடலுக்கு வா என்று சொல்ல, அர்ஜுன் உடனே வருகிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக கிளம்பி போகிறார். அதைத் தொடர்ந்து கோதை குடும்பமும் ஹாஸ்பிடலுக்கு வந்து சேர்கிறது. கோதை வழக்கம்போல எல்லா பிரச்சினையும் என் குடும்பத்துக்கு தான் வரணுமா? எதுக்காக இப்படி எல்லாம் நடக்குது. ஜோசியர் சொன்ன மாதிரியே நடந்துடுச்சு இனி என்ன நடக்குமோ என்று புலம்பிக் கொண்டிருக்க மொத்த குடும்பமும் கோதைக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த நேரத்தில் ரோகினிக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் சொல்லி விடுகின்றனர். இதனால கோதையும், நடேசனும் பயப்பட அதற்கு வசு முதலான எல்லாரும் ஆறுதல் கூறிக் கொண்டிருக்கின்றனர். அப்போது டாக்டர் ஆபரேஷன் முடிந்து விட்டது. பெண் குழந்தை பிறந்து இருக்கிறது ராகினியும் நன்றாகவே இருக்கிறார் என்று சொல்ல எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.

பிறகு குழந்தையை கொண்டு வந்து தமிழிடம் கொடுக்க, குழந்தையை பார்த்து கொஞ்சி குழந்தைக்கு அப்பா அங்க இருக்காரு அவர்கிட்ட கொடுங்க என்று சொல்ல குழந்தையை அர்ஜுனிடம் கொடுக்கின்றனர். அர்ஜுன் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்கும் போது அவருடைய அம்மா உன்னை மாதிரியே இருக்குடா என்று சொல்லி கொஞ்சி கொண்டிருக்கின்றனர். பிறகு அர்ஜுன் தமிழிடம் குழந்தையை கொடுத்து ரொம்ப நன்றி சார்.

நீங்க இல்லன்னா இன்னைக்கு என்னோட பாப்பாவும் ராகினியும் இருந்திருக்க மாட்டாங்க என்று சொல்ல, அர்ஜுனின் அம்மா, அக்கா, மாமா என எல்லோரும் அதிர்ச்சியாகின்றனர். இவன் கட்சி மாறிட்டானா? என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் ராகினி கண்விழித்தாச்சு எல்லாரும் பார்க்க வரலாம் என்று சொல்ல மொத்த குடும்பமும் ரூமுக்குள் போகின்றனர்.

tamilum saraswathiyum serial 20th October promo and episode full update

அர்ஜுன் குடும்பத்தினர் தங்களுக்கு அதிகமான பாசம் இருப்பதாக காட்டி ராகினியிடம் பேச அப்போது ராகினி கோதையிடம் அம்மா நீங்க சொன்ன மாதிரியே ஆயிடுச்சு, மன்னிச்சிடுங்க. நான் தான் நீங்க சொன்னது சரியா புரிஞ்சுக்கல என்று சொல்கிறார். அதைத் தொடர்ந்து தமிழிடமும் நன்றி சொல்லி மன்னிப்பு கேட்கிறார்.

அதைத்தொடர்ந்து குழந்தையாக இருக்கும்போது ராகினியை தமிழ் எப்படி எடுத்து வளர்த்தான் என்பதை பற்றி கோதையும் நடேசனும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இதையெல்லாம் பார்த்து அர்ஜுன் குடும்பம் கோபத்தில் இருக்கின்றனர். அதே நேரத்தில் தன்னுடைய குழந்தையை தூக்குமாறு ராகினி சொல்ல குழந்தையை தூக்கி வைத்து தமிழ் கொஞ்சுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+