முத்து அடித்து விரட்டியதால் மீனா எடுத்த முடிவு.. விஜயா கேட்ட வார்த்தை.. அண்ணாமலைக்கு அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அக்டோபர் 21ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

இதில் மீனா தான் திருமணத்தை நடத்தி வைத்தது என்று நினைத்து முத்து உட்பட குடும்பத்தினர் அனைவரும் மீனாவை திட்டுகின்றனர்.
அதே நேரத்தில் அண்ணாமலை வராமல் ஜெயிலை விட்டு கிளம்ப மாட்டேன் என்று முத்து பிரச்சனை செய்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில் மீனாதான் திருமணத்தை நடத்தி வைத்தார் என்று நினைத்து, நீ தான் கல்யாணத்தை நடத்தி வச்சிருக்க என்று விஜயா மீனாவை கண்டமேனிக்கு திட்டுகிறார். இவ குடும்பத்தை அழிக்க வந்தவ என்று பேசிக் கொண்டிருக்க அதற்கு மீனா நான் அவங்களுக்கு கல்யாணத்தை பண்ணி வைக்கல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அப்போது முத்து கடும் கோபத்தில் மீனாவை முறைத்துக் கொண்டு இருக்க ரோகிணி ஏன் இப்படி செஞ்சீங்க? உங்க மேல மாமா எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார். நீங்க இப்படி கெடுத்துட்டீங்களே என்று கேட்க அதற்கு மீனா என்ன நடந்தது என்பதை சொல்ல வர யாருமே சொல்லாமல் அடுத்தடுத்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது விஜயா அண்ணாமலையிடம் பார்த்தீங்களா?
அவ என்ன வேலை பண்ணி இருக்கான்னு பார்த்திங்களா? நம்முடைய பையனுக்கு இவர் ரகசியமா கல்யாணத்தை பண்ணி வச்சிருக்கா, இவளால எல்லாரும் எங்க வந்து நிற்கிறோம் என்று பார்த்தீர்களா? என்று சொல்ல, அதற்கு அண்ணாமலை பதில் எதுவுமே பேசாமல் பார்த்துக் கொண்டே இருக்கிறார். அதைத் தொடர்ந்து முத்து உன்னை நம்பி தானே இந்த குடும்பத்தை விட்டுட்டு போனேன்.

ஆனா நீ இப்படி பண்ணிட்டியே என்று முத்து மீனா கன்னத்தில் அடிக்க அப்போது அங்கு இருக்கும் போலீஸ் என்னய்யா நீ ஸ்டேஷனுக்குள்ள வச்சு பொம்பள புள்ளைய அடிக்கிற என்று திட்டுகிறார். அப்போது சீதா நடந்ததை சொல்ல வர அதை மீனா தடுத்து விடுகிறார். அதற்கு முத்து நீ பேசி அவங்க மனச மாத்துன்னு சொன்னா ஆனா நீ கல்யாணத்தை பண்ணி வச்சிருக்க. பாரு அப்பாவ எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கேன்னு பார்த்தியா? நீ இப்படி நம்பிக்கை துரோகம் பண்ணிட்டாயே என்று திட்டிக் கொண்டிருக்கிறார்.
அப்போது போலீஸ் ஸ்ருதி அப்பாவிடம் என்னவென்று விசாரிக்க அதற்கு ஸ்ருதி அப்பா என் பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு. இவங்க பையன் தான் ஏதாவது சொல்லி மிரட்டி கல்யாணம் பண்ண வைத்திருப்பான் இந்த கல்யாணம் செல்லாது என்று சண்டை போடுகின்றனர். அதோடு அண்ணாமலை இடமும் இதுதான் நீங்க புள்ள வளர்த்து இருக்க அழகா? நீங்க ரொம்ப நல்லா பையன வளர்த்து இருக்கீங்கன்னு அன்னைக்கு அவ்வளவு பேசினீங்க என்று சொல்லி விட்டு கிளம்பி போகின்றனர்.
அதைத்தொடர்ந்து முத்து போலீஸ் ஆபிஸரிடம் ரவியை புடிச்சு என்ன வேணாலும் பண்ணுங்க. ஆனா எங்க அப்பாவ விட்டுருங்க என கெஞ்ச அவர்கள் முடியாது என்று சொல்லிவிடுகின்றனர். அதைத் தொடர்ந்து மீனா ரவிக்கு போன் பண்ணி கொண்டே இருக்க போன் சுவிட்ச் ஆப் என்று வருகிறது. அப்போது சீதாவை மீனா திட்டிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் சந்தோஷமாக திருமணத்தை பற்றி பேசிக் கொண்டிருக்க ரவி சோகமாக நம்ம திருமணத்தால் அண்ணிக்கு ஏதாவது பிரச்சனை நடந்து இருக்குமோனு எனக்கு பயமா இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வைத்து மொத்த குடும்பமும் மீனாவை திட்டுகின்றனர். அப்போதும் மீனா உண்மையை சொல்ல வர அதைக் கேட்க கூட இல்லாமல் முத்தும் போயிரு என்று திட்டி விட்டு உள்ளே சென்று ஜெயிலில் அண்ணாமலை அமர்ந்திருக்கும் போது வெளியே முத்து அழுது கொண்டே இருக்கிறார்.
அப்போது இவரு காலையிலேயே சாப்பிட்டவரு. இன்னும் சாப்பிடல ராத்திரி நேரம் ஆகிவிட்டது என்று விஜயா அழுது கொண்டு இருக்க, உடனே முத்து எழுந்து மனோஜிடம் நீ பார்த்துக்க நான் சாப்பாடு வாங்கிட்டு வரேன் என்று கிளம்பி போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைந்து இருக்கும் நிலையில் அடுத்த வாரத்திற்கான என்று வெளியான வீடியோவில் ஸ்ருதியும் ரவியும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகின்றனர். அப்போது முத்து ரவியை போட்டு அடிக்கிறார். இப்படியாக வீடியோ வெளியாக இருக்கும் நிலையில் இதற்கு ஸ்ருதி என்ன பதில் சொல்லப் போகிறார் என்று அடுத்த வாரம் பார்ப்போம்.












Click it and Unblock the Notifications