சிறகடிக்க ஆசை: போலீஸ் ஸ்டேஷனில் ஸ்ருதி கேட்ட வார்த்தை.. ஆடி போன விஜயா.. மிரட்டிய மீனா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் அக்டோபர் 23ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் மீனா மிரட்டியதால் ரவி ஸ்ருதியை கூட்டிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் வந்து இருந்த நிலையில் ஸ்ருதி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

அந்த அதை தொடர்ந்து மீனாவை குடும்பத்தினர் அனைவரும் அவமானப்படுத்தி விரட்டி விடுகின்றனர்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் அண்ணாமலை ஒரு பக்கம் ஜெயிலில் இருக்க அவருக்கு முத்து சாப்பாடு வாங்கிட்டு வந்து கொடுக்க அதை சாப்பிடாமல் அண்ணாமலை அடம்பிடித்து மறுத்து விடுகிறார். மறுபக்கத்தில் ஸ்ருதி ரவிக்கு டீ போட்டுக் கொடுத்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது ரவி ஸ்ருதியிடம் முகம் கொடுத்து சரியாக பேசாமல் வீடு பற்றிய சிந்தனையில் இருக்க, அதற்கு ஸ்ருதி நம்ம இப்போ இருக்கிற சந்தோஷத்தை மட்டும் பார்ப்போம். இரண்டு நாள் நம்மல தேடுவாங்க அப்புறம் அவங்களா விட்டுடுவாங்க என்று ரவியை சமாதானப்படுத்த பார்க்கிறார். அந்த நேரத்தில் மீனா ரவிக்கு மெசேஜ் அனுப்பி கொண்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து ஸ்ருதி தூங்கிய பிறகு ரவி போனை எடுத்து பார்க்க மீனாவின் மெசேஜை பார்த்து உடனே போன் செய்ய மீனா நடந்த விஷயங்களை சொல்லி உடனே ஸ்டேஷனுக்கு வரணும் என்று சொல்ல அதற்கு ரவி இப்ப வர முடியாது என்று சொல்ல, அதற்கு உங்களை எப்படி வர வைக்கணும் என்று எனக்கு தெரியும். நான் செத்து போன பிறகு கடைசியா என்னை பார்க்க வருவீங்க தானே என்று போனை கட் பண்ணி விடுகிறார்.
அதைத் தொடர்ந்து போலீஸ் ஆபீசர்ஸ் வந்து முத்து உள்ளே அமர்ந்திருப்பதற்கு திட்ட அப்போது மீனா எங்க மாமா எந்த தப்பும் பண்ணல. அதை ரவியே வந்து சொல்லுவாரு. ரவி மட்டும் இல்ல ஸ்ருதியும் சேர்ந்து வரா என்று போலீஸிடம் சொல்ல அவங்க வரட்டும் என்று போலீஸ் வாசுதேவனை வர சொல்லுங்கள் என்று கூறுகிறார். அப்போது ரவி ஸ்ருதியை கூட்டிக்கொண்டு ஸ்டேஷனுக்கு வர முத்து ரவியை போட்டு அடிக்கிறார்.
அதோடு விஜயாவும் ரவியை போட்டு அடிக்க வாசுதேவன் ஸ்டேஷனுக்கு வருகிறார். வந்ததும் ரவியை பார்த்ததும் இவனையும் தூக்கி ஜெயில்ல போடுங்க என் பொண்ணை எங்களோட அனுப்புங்க இவன்தான் மிரட்டி என் பொண்ணை கல்யாணம் பண்ணி இருக்கான் என்று சொல்ல, அதற்கு ஸ்ருதி கோவப்பட்டு நாங்க விருப்பப்பட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இரண்டு பேரும் லவ் பண்ணுனோம்.

எங்க வீட்டுல எனக்கு பிடிக்காத கட்டாய கல்யாணம் பண்ண பார்த்தாங்க. அதனால தான் வீட்டை விட்டு வெளியே வந்தேன். நாங்க மேஜர் என்று சொல்லி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறார். ஸ்ருதி பேசுவதை பார்த்து விஜயா அதிர்ச்சியில் இருக்கிறார். அதை தொடர்ந்து ஸ்ருதி மனதை மாற்றி கூட்டி போய்விடலாம் என்று அவருடைய அம்மாவும் அப்பாவும் முயற்சி செய்ய அது பயன் அளிக்காமல் நான் ரவியோட தான் இருப்பேன் என்று ஸ்ருதி ரவியை பிடித்துக் கொள்கிறார். இதை பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சியில் அப்படியே நிற்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications