சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை.. கடும் கோபத்தில் ரவி.. மீனாவின் “சபாஷ்” சபதம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் அக்டோபர் 24ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் முத்து வீட்டிற்கு வரக்கூடாது என்று சொல்லிய பிறகும் மீனா வீட்டிற்கு வந்திருந்த நிலையில் அவமானப்படுத்தி விஜயா கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார்.
அதே நேரத்தில் ரவியை அடிக்க வேண்டும் என்று போன முத்துவுக்கு அதிர்ச்சி கிடைக்கிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

இந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஸ்ருதி நானாகத்தான் விருப்பப்பட்டு போனேன். நாங்கள் மேஜர் என்று தைரியமாக சொன்ன வார்த்தையை கேட்டு போலீஸ் இனி இந்த விஷயத்தில் நாங்க எதுவும் பண்ண முடியாது. இரண்டு குடும்பமும் உட்கார்ந்து பேசுங்க என்று சொல்லி அண்ணாமலையை விடுதலை செய்கின்றனர்.
முத்து அவரை அழைத்துக்கொண்டு வெளியே வரும்போது ரவி இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்கலப்பா என்னை மன்னித்துவிடுங்கள் என்று அண்ணாமலை இடம் பேசப்போக, அதற்கு அண்ணாமலை அவரை தள்ளி விட்டு விட்டு அங்கிருந்து கிளம்புகிறார். அதைத்தொடர்ந்து எல்லோரும் காரில் கிளம்ப போக அவர்களோடு மீனாவும் அங்கு வருகிறார். அப்போது முத்து ரவிக்கு சொன்னது தான் உனக்கும்.

நீ இந்த வீட்டு பக்கம் வந்துராத என்று விரட்டி விட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறார். அப்போது அண்ணாமலை மீனா நீ வீட்டுக்கு வாமா என்று சொல்கிறார். அடுத்து வீட்டுக்கு வந்த அண்ணாமலை வெளியில் இருந்து தண்ணீரை எடுத்து தலை மேல் ஊற்றிக் கொண்டு வீட்டிற்குள் வர விஜயா ஆரத்தி எடுக்கப் போக நான் என்ன சாதனை படைச்சிக்கிட்டா இருக்கேன். மானமே போச்சு நான் இவ்வளவு நாளா பிள்ளைகளை நல்லா வளர்த்திருக்கிறேன் என்று மார்தட்டிக்கிட்டு இருந்தேன்.
ஆனா இன்னைக்கு மொத்தமா பொய்யா போச்சு என்று வேதனையோடு பேசிவிட்டு தூங்க சென்றதும் முத்து நான் இந்த நிலைமைக்கு அப்பாவை கொண்டு வந்த ரவியை சும்மா விட மாட்டேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி வெளியே போகிறார். அப்போது மீனா வீட்டிற்கு வர விஜயா மீனாவை நிறுத்தி வெளியே போ என்று கழுத்தை பிடித்து தள்ள அதற்கு மீனா அதை என் புருஷன் சொல்லட்டும் என்று சொல்ல மனோஜ் முத்துக்கு ஃபோன் போட்டு மீனா வீட்டிற்கு வந்ததை சொல்ல அதற்கு முத்து அவ எதுக்கு வீட்டுக்கு வந்தா? நான் மட்டும் இப்ப வீட்டுக்கு வந்தா அவ்வளவுதான் என்று திட்ட மீனா அதிர்ச்சியாகி இனி அவரா வந்து என்னை கூப்பிடாமல் நானா வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி போகிறார்.

அதைத் தொடர்ந்து முத்து ரெஸ்டாரண்டுக்கு வந்து ரவி எங்க என கேட்டு அங்கு பிரச்சனை பண்ண, அப்போது ரவியின் நண்பர் ரவி இங்கே இல்ல 10 நாள் கல்யாணத்துக்காக லீவு போட்டுட்டு போயிட்டான் என்று சொல்ல அப்போ எல்லாமே பிளான் போட்டு தான் செஞ்சிருக்கானா இந்த ரவி என்று கோபத்தில் அங்கிருந்து பூ சட்டியை எடுத்து உடைத்து அதற்கு பணமும் கொடுத்துவிட்டு, செக்யூரிட்டியிடமும் பணம் கொடுத்து தன்னுடைய போன் நம்பரையும் கொடுத்து ரவி வந்தால் போன் பண்ணுமாறு சொல்லிவிட்டு கிளம்புகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications