சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்.. புது வில்லன் மிரட்டல்.. அருமையான முயற்சி.. இனி கதை இதுதானா?
சென்னை: விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியலில் இதுவரைக்கும் டம்மி பீஸ் ஆக இருந்து பிஜூ இனி வில்லன் அவதாரம் எடுத்திருக்கிறார்.
ஸ்ருதி ரவியை திருமணம் செய்து கொண்டதால் கோபத்தில் இனி நான் ஸ்ருதியை பழிவாங்காமல் விடமாட்டேன் என்று கொந்தளிக்கிறார்.

அதே நேரத்தில் இன்றைய எபிசோட்டில் மீனாவின் அம்மா சொன்ன அட்வைஸ் பலருடைய நிஜ வாழ்க்கையிலும் தேவையானதாக தான் இருக்கிறது. அது பற்றி பார்ப்போம்.
அந்த வகையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் மற்ற சீரியல்களைப் போல ஆமை வேகத்தில் கதை நகராமல் அடுத்தடுத்து திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியல் டிஆர்பியில் விஜய் டிவியில் முதல் இடத்தை பிடித்துக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் சீரியலில் சில வாரங்களாகவே கதை நகர்ந்து கொண்டு வந்த நிலையை பார்த்து ரசிகர்கள் இனி இப்படித்தான் நடக்கும் என்று எதிர்பார்த்தபடி இப்போது வீட்டை விட்டு மீனாவை வெளியே துரத்தி விட்டு இருக்கின்றனர். அதே நேரத்தில் முத்து தான் வீட்டை விட்டு வெளியே போக சொல்லிவிட்டார் என்று அம்மா வீட்டுக்கு போன நிலையில் அங்கு மீனாவின் அம்மாவும் மீனாவிற்கு புத்திமதி சொல்லி நீ இங்கே இருந்தால் சரிப்பட்டு வராது.
எதுவாக இருந்தாலும் உன் புருஷன் வீட்டில் இருந்து தான் போராட வேண்டும் என்று அங்கே அனுப்பி வைத்திருக்கிறார். ஏற்கனவே உன்னுடைய புருஷனை பற்றி உனக்கு தெரியும். அவர் அவருடைய அப்பாவின் மீது அளவுகடந்த மரியாதையும் பாசமும் வைத்திருக்கிறார். அப்பா சொன்ன ஒரே வார்த்தைக்காகத்தான் உன் கழுத்தில் தாலியே கட்டினார்.
இந்த நிலையில் இன்று அந்த அப்பாவையே போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருக்கும் போது அவருடைய நிலைமை என்னவாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டாயா? என்று மீனாவிற்கு அவருடைய அம்மா அட்வைஸ் செய்த விதம் இன்று இணையத்தில் அதிகமானவரால் பாராட்டப்பட்டு வருகிறது. காரணம் சமுதாயத்தில் கணவன் மனைவிக்குள் சிறு பிரச்சனை என்றாலும் சிலர் உடனே அம்மா வீட்டில் செட்டில் ஆகி விடுகின்றனர்.
சின்ன பிரச்சனை என்றாலும் உடனே விவாகரத்து வரைக்கும் போய் விடுகின்றனர். ஆனால் இன்று இந்த சீரியலில் மீனாவின் அம்மா தன்னுடைய மனதில் எவ்வளவோ கஷ்டங்கள் இருந்தாலும் ஆனால் இந்த மாதிரி நேரத்தில் நீ இங்கே வந்து இருக்க கூடாது என்று மீனாவை அனுப்பி வைத்திருக்கிறார்.
அப்படியாக இருக்கும் நிலையில் நாளைக்கு என்று வெளியான வீடியோவில் மீனா முத்துவின் கார் முன்பு தைரியமாக போய் நிற்க, முத்து கோபத்தில் மீனா மீது காரை ஏற்றி விடுவதாக வருகிறார். இது பார்ப்பதற்கு கொஞ்சம் மிரட்டலாக இருக்கிறது. முத்து கோபத்தில் எதுவும் செய்யக் கூடிய ஆள் தான். ஆனால் மீனா தன் பக்கத்தில் இருக்கும் நியாயத்தை முத்து கேட்கவில்லையே என்ற கோபத்தில் முத்துவிடம் திமிராக நடந்து கொள்கிறார்.
அதே நேரத்தில் புதியதாக கல்யாணம் முடித்த ரவி ஸ்ருதி இடையே பெற்றோர் காரணமாக சண்டை வருகிறது. உங்க அப்பா அம்மா மட்டும் சரியா என்று ஸ்ருதி ரவியிடம் சண்டை போடுகிறார். இப்படியாக இருக்கும் நிலையில் நாளைக்கான எபிசோடு எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரம் டிஆர்பியில் கண்டிப்பாக இந்த சீரியல் மாஸ் காட்டும்.
காரணம் இந்த வாரம் முழுக்கவே அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பில் தான் சீரியல் அணியினர் அனைவரையும் வைத்திருக்கின்றனர். இந்த நிலையில் இனி புது வில்லன் உருவாகி இருக்கும் நிலையில் முத்துவின் குடும்பத்திற்கு பிரச்சனை வருகிறதா? அல்லது ஸ்ருதிக்கு பிரச்சனை வருகிறதா என்றும் எதிர்பார்க்க வைக்கிறது.

அதுபோல ஒருவேளை மீனா இனி கர்ப்பமாக இருப்பது போன்ற காட்சிகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல அண்ணாமலை இவ்வளவு பிரச்சினையிலும் மீனாவை வீட்டுக்கு வாமா என்று கூப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் மீனாவை விஜயா வீட்டை விட்டு அனுப்பி இருப்பதை தெரிந்ததும் அண்ணாமலையே மீனாவை வீட்டிற்கு கூட்டிட்டு வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபோல மீனாவையும் முத்துவையும் சேர்த்து வைப்பதற்காக அவருடைய பாட்டி வந்தாலும் அதிசயப்படுவதற்கு இல்லை. என்ன இருந்தாலும் இனி என்ன நடக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் ஏகபோகமாக இருக்கத்தான் செய்கிறது. என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
-
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications