சிறகடிக்க ஆசை: முத்துவால் குடும்பத்திற்கு வந்த பேரிடி.. மீனா, ரவியின் ரிவஞ்ச் டைம்.. ரோகிணி தான் பாவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் அக்டோபர் 28ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
இதில் குடித்து விட்டு வீட்டில் வந்து முத்து பிரச்சனை செய்திருந்த நிலையில் அண்ணாமலைக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.
அதுபோல மீனாவை காணாமல் முத்து தேடுவதை புரிந்து கொண்ட மீனா சந்தோஷப்படுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்து காரில் செல்வத்தோடு மீனா வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார். அப்போது செல்வத்திடம் இப்போ என்னை விட நீதான் கொஞ்சம் கம்மியா குடித்திருக்கா, நீ மீனா வீட்டிற்கு போய் முத்து இருக்கானான்னு கேளு. முத்து காணாம போயிட்டான்னு சொல்லு. அவா பதறி போய் எனக்கு போன் பண்ணுவா நான் கால் மேல கால் போட்டுட்டு அவ கிட்ட பேசுவேன் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

அது போலவே செல்வமும் மீனா வீட்டின் கதவை தட்டி, செல்வம் குடி இருப்பதை தெரிந்து கொண்ட மீனா என்னவென்று விசாரிக்கிறார். அப்போது முத்துவை காணவில்லை என்று செல்வம் சொல்ல, அப்படியா அவர் இங்கேதான் இருக்கிறார். சாப்பிட்டு தூங்குறாரு, அதோடு அந்த வெட்டி பையன் செல்வம் வருவான். அவன் வந்தா என்னை குடிக்க கூட்டிட்டு போற போயிருவான்.
அவன் வந்தா நான் தூங்கிட்டு இருக்கேன்னு சொல்லி அனுப்பிவிடு என்று சொன்னாரு என்று சொல்ல அதைக் கேட்டு அதிர்ச்சியான செல்வம் கீழே வந்து முத்துவிடம் நடந்த விஷயத்தை சொல்ல ஓ அந்த அளவுக்கு பேசினாலே... அப்போ சரி எல்லாரும் நல்லா இருக்காங்களா அது போதும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி போகிறார்.
இதை மீனா மொட்டை மாடியில் நின்று பார்த்து சந்தோஷப்படுகிறார். அதைத்தொடர்ந்து அண்ணாமலை வீட்டில் விஜயாவிடம் முத்துவை காணவில்லையே என்று கேட்க, அவன் வருவான் என்று விஜயா அலட்சியமாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அண்ணாமலை முத்துவுக்கு போன் பண்ணி எங்கிருக்கிறாய் என்று விசாரிக்க, அப்போது வீட்டுக்குள்ளேயே போன் பேசிக் கொண்டே முத்து நுழைகிறார்.

முத்து குடித்து இருப்பதை பார்த்து அண்ணாமலை நீ திருந்தவே மாட்டியா? என்று திட்ட எனக்கு மனசு வலிக்குது என்று சொல்ல, அப்போது மனோஜ் முத்துவிடம் நீ அன்னைக்கு ஊருக்கு போகாமல் இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சனை இல்லை என்று திட்ட, இருவருக்கும் வாக்குவாதம் அதிகமாகின்றது. அப்போது அண்ணாமலை இருவரையும் தடுத்து பார்க்கிறார்.
ஒரு கட்டத்தில் முத்து மனோஜை போட்டு அடிக்கிறார். அந்த அதில் ஒரு அடி ரோகிணிக்கும் விழுகிறது. இதையெல்லாம் பார்த்து அண்ணாமலை நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே சாய்கிறார். மறுபக்கத்தில் மீனாவுக்கு ஏதோ தப்பாக இருப்பதாக கனவு வந்து தூக்கத்தில் பயந்து எழுந்து கொள்கிறார். அதைத்தொடர்ந்து அண்ணாமலையை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் சேர்க்கின்றனர்.

அங்கு அவருக்கு மைல்ட் அட்டாக் ஆனால் இன்னும் கண்ணு முழிக்கல என்று டாக்டர் சொல்லி கூடவே ஹார்ட்பீட் ரொம்ப கம்மியா இருக்கு. கொஞ்சம் சீரியஸான கண்டிஷன் தான் என்று சொல்கின்றார். அதை கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. இத்தனை நாட்களும் அப்பாவை அவமானப்படுத்தியது ரவியும் மீனாவும் என்று கோபத்தில் இருந்து முத்து அவர்கள் இரண்டு பேரிடமும் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.
இன்று முத்து குடித்துவிட்டு பிரச்சனை செய்ததால் தான் அண்ணாமலைக்கு நெஞ்சுவலி வந்திருக்கிறது. இதை வைத்து இனி ரவியும் மீனாவும் ரிவேஞ் எடுத்தால் செமையாக இருக்கும். ஆனால் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications