சிறகடிக்க ஆசை: மீனாவால் ரோகினியை அறைந்த முத்து.. அண்ணாமலை கொடுத்த அதிர்ச்சி.. இனி அவ்வளவுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் வரும் அக்டோபர் 28 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் மீனா மீது கோபத்தில் இருந்ததால் முத்து வீட்டில் ரோகினியை கன்னத்தில் அறைந்து விடுகிறார்.

அதை பார்த்து அதிர்ச்சியான அண்ணாமலைக்கு நெஞ்சுவலி வந்திருக்கிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
அந்த வகையில் ரவி ஸ்ருதி திருமணத்திற்கு பிறகு முத்து கடும் கோபத்தில் எல்லோரிடமும் நடந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய அப்பா மனம் வேதனைப்படும் படி ரவி நடந்து கொண்டார் என்று கடும் கோபத்தில் இருக்கும் முத்து அதற்கு இன்றைய எபிசோட்டில் ரவியை ஹோட்டலில் சென்று அடித்து துவைத்து எடுத்து இருந்தார்.

அதோடு மீனா, இப்போ என்கிட்ட நீங்க பேசாம அவமானப்படுத்தி அனுப்புறீங்க ஆனா நீங்க தேடி வரும்போது நான் இருக்க மாட்டேன் என்று மீனா சொன்ன வார்த்தை முத்துவின் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்க அந்த நேரத்தில் அவர் பாரில் குடித்துக் கொண்டிருக்கும் போது, அங்கு ஒருவர் தான் மனைவியை திட்டியதால் மனைவி தற்கொலை செய்து விட்டார் என்று புலம்பி கொண்டிருக்கிறார்.
அதைக் கேட்டு பயந்து போன முத்து தன்னுடைய நண்பன் மூலமாக போன் செய்து மீனா எங்கே இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள முயற்சி எடுக்க அதுவும் கடைசியில் சொதப்பி விடுகிறது. இப்படியாக இன்றைய எபிசோடு போயிருந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் போதையில் வீட்டிற்கு வரும் முத்துவிடம் அண்ணாமலை திட்டுகிறார்.

அப்போது மனோஜ் முத்துவை திட்ட அதற்கு முத்து வழக்கம் போல மனோஜை அவமானப்படுத்தி பேசுகிறார். அப்போது கோபமான ரோகிணி நீங்க எப்பவும் என் புருஷனை அவமானப்படுத்திட்டே இருக்கீங்க என்று கேட்க, அதற்கு முத்து இவனை அப்படித்தான் பேசுவேன் அதைக் கேட்க நீ யாரு என்று முத்து கேட்க அதற்கு நான் அவரோட பொண்டாட்டி என் முன்னாடியே நீங்க அவரை அவமானப்படுத்துறீங்க என்று பேசிக் கொண்டிருக்கும் போது இவர்களுக்குள் வாக்குவாதத்தை பார்த்து அண்ணாமலை நிறுத்துங்க சண்டை போடாதீங்க என்று கத்திக் கொண்டே இருக்கிறார்
அப்போது அதை எல்லாம் கேட்காத முத்து கோபத்தில் மனோஜை அடிக்க போக அப்போது மனோஜ் விலகிவிட அந்த அடி ரோகினி கன்னத்தில் விழுந்து விடுகிறது. அதை பார்த்து விஜயா ஒரு பக்கத்தில் பதறி கத்த அப்போது இதை எல்லாம் பார்த்த அண்ணாமலைக்கு நெஞ்சு வலி வந்து விடுகிறது. இப்படியாக பிரமோ வந்திருக்கும் நிலையில் இனி அண்ணாமலையின் இந்த நிலைமைக்கு காரணம் முத்து தான் என்று மொத்த குடும்பமும் அவரைத் திட்டுவார்கள்.

அப்போது மீனா அண்ணாமலை நிலைமையை பற்றி தெரிந்து அவரை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்து மீண்டும் வீட்டில் சேர்ந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த சீரியலில் நடிகர்கள் சிலர் வெளியிட்ட புகைப்படங்களில் மீண்டும் மீனா தன்னுடைய வீட்டில் இருப்பது போன்று தான் இருக்கிறது. இதனால் அடுத்த வாரத்தில் மீனா வீட்டிற்குள் வந்து வடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications