சிறகடிக்க ஆசை: ரோகிணி பற்றி ஆதாரத்துடன் நிரூபித்த ஸ்ருதி! மனோஜ் சொன்ன விஷயம், அதிர்ச்சியில் விஜயா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில், மீனா ஒருபுறம் பாசத்தையும் சமாதானத்தையும் காட்டினாலும், மறுபுறம் ரோகிணியின் பித்தலாட்டங்கள் மற்றும் மனோஜின் பேராசை காரணமாகப் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கதை சற்றுச் சுவாரஸ்யம் இல்லாமல் நகர்ந்து கொண்டிருந்த நிலையில், அக்டோபர் 30 முதல் நவம்பர் 1ஆம் தேதி வரையிலான இந்த வாரப் ப்ரோமோ, பெரிய திருப்பங்களுக்கானத் தொடக்கத்தைக் கொடுத்துள்ளது.

கடன் பிரச்சனை
சீரியலில் ரோகிணியே தான் ஒவ்வொரு வாரமும் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கிறார். முதலில், ஸ்ருதியின் அம்மாவிடம் ரோகிணி 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். தற்போது, ஸ்ருதியின் அம்மா அந்தக் கடனைத் திருப்பிக் கேட்டுக் கொண்டிருப்பதால், ரோகிணி அதிர்ச்சியிலும் கோபத்திலும் இருக்கிறார்.
இந்த நிலையில் ஸ்ருதி தொடங்கி இருக்கும் ரெஸ்டாரன்ட்டிற்கு, விஜயா அவார்டு வாங்க நடித்த கோகிலாவும் அவரதுத் தோழியும் சாப்பிட வந்தனர். அப்போது அங்கே மீனா வர, கோகிலா மீனாவை விசாரித்துக் கொண்டிருக்கும்போது, "உன்னைப் பற்றி ஏற்கெனவே எனக்குத் தெரியும்" என்று சொல்லிப் பேசியிருக்கிறார்.
மீனாவால் கிடைத்த ஆர்டர்
அப்போது மீனாவின் புது பிசினஸுக்கு வாழ்த்து தெரிவித்த கோகிலா, தான் புதியதாகக் கட்டி இருக்கும் அப்பார்ட்மென்ட்டில் அனைவருக்கும் மீனாவேபூ கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். பிறகு தான் புதியதாக கட்டியா அப்பார்ட்மெண்டில் அனைவருக்கும் ஹோம் அப்ளையன்ஸ் வாங்கணும் என்று சொன்னதும் உடனே மீனா, "என்னுடையக் கணவரின் அண்ணன் (முத்து) கம்பெனியிலேயே எல்லாப் பொருளும் வாங்கிக்கலாம்" என்றுச் சொல்ல, கோகிலாவும் 'சரி' என்று ஒத்துக் கொள்கிறார். இதுதான் ரோகிணிக்குக் கிடைத்தப் புதையல்!
ரோகிணியின் பித்தலாட்டம்
இந்த வாரத்திற்கானப் ப்ரோமோவில், ரோகிணியின் குணத்தைக் கிழிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ரோகிணி விஜயாவிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகச் ஸ்வீட்டுடன் வந்து, "தங்களுக்குப் பெரிய ஆர்டர் கிடைத்திருக்கிறது! ஒரு அப்பார்ட்மென்ட்டில் எல்லா வீடுகளுக்கும் ஹோம் அப்ளையன்ஸ் எங்ககிட்ட தான் கேட்டிருக்காங்க" என்று சொல்கிறார். இதைக்கேட்ட விஜயா அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.
மனோஜின் ஆசை
மனோஜ் மேலும் ஒருபடி மேலே சென்று, "நாங்கள் இந்த ஆர்டரைச் செய்து கொடுத்தால், நமக்கு 40 லட்சம் லாபம் கிடைக்கும்" என்றுச் சொன்னதைக் கேட்டு விஜயா மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போகிறார். 40 லட்சம் லாபத்தை வைத்து கனவுக் கோட்டை கட்டும் விஜயாவின் ஆசை எப்படியும் கடைசியில் உடைந்துதான் போகும்!)
ஸ்ருதி கேள்வி
இவையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஸ்ருதி, "இவங்களைப் பாருங்களேன்! ஏதோ இவங்களே அந்த ஆர்டரை எடுத்த மாதிரி ஆன்ட்டி கிட்ட நாடகம் போடுகிறார்கள்" என்று நினைத்துக் கொண்டு, ரோகிணியைத் தனியாகக் கூப்பிடுகிறார். ஸ்ருதி ரோகிணியிடம், "உங்களுக்கு இந்த ஆர்டர் மீனா மூலமாகத்தான் கிடைத்தது. ஆனா, நீங்க ஏதோ நீங்களே அவங்ககிட்டப் பேசி ஆர்டர் வாங்கின மாதிரி ஆன்ட்டி கிட்ட நடிச்சுகிட்டு இருக்கீங்க!" என்று ஆதாரத்துடன் கேள்வி கேட்கிறார்.ஆனால், ரோகிணி வழக்கம்போல அங்கே திமிராக நடந்து கொண்டு அங்கிருந்து நகர்ந்து செல்கிறார். இதனால் ஸ்ருதி அதிர்ச்சியில் இருக்கிறார்.
இந்த மிகப்பெரிய ஆர்டரை, எப்படியாவதுத் திருட்டுத்தனமாகத் தங்கள் பக்கம் இழுத்து, 40 லட்சம் லாபம் பார்க்க வேண்டும் என்ற ரோகிணி மற்றும் மனோஜின் பித்தலாட்டம், இந்த வாரத்தின் பரபரப்பான திருப்பமாக அமைந்துள்ளது. அடுத்ததாக, ஸ்ருதி ரோகிணியின் சதித்திட்டத்தை விஜயாவிடம் உடைப்பாரா அல்லது மீனாவை அலர்ட் செய்வாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications