சிறகடிக்க ஆசை: மீனா அம்மாவிடம் சம்பந்தம் பேச போன முத்துக்கு கிடைத்த அதிர்ச்சி.. ரவிக்கு விழுந்த அடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் அக்டோபர் ஏழாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் ரவிக்கு, மீனாவின் தங்கையை சம்பந்தம் பேச போன முத்துவிற்கு அதிர்ச்சி கிடைத்திருக்கிறது.
அதே நேரத்தில் ரவியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த முத்துவுக்கு மீனா எதிர்ப்பு தெரிவிக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மீனா, ரவியும் ஸ்ருதியும் காதலிக்கும் விஷயத்தை பற்றி முத்துவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு முத்து கோபப்பட்டு கத்த அதற்கு மீனா பொறுமையா பேசுங்க வெளியே மாமா இருக்காரு. அவருக்கு தெரிஞ்சா வருத்தப்படுவாரு என்று சொல்கிறார்.
அதற்கு மேலும் கோபமாகும் முத்து பொறுமையா பேசுறதுக்கு என்ன இருக்கு. நான் அவ்வளவு தூரம் அவன் கிட்ட சொல்லியும் அவன் இதெல்லாம் பண்ணிக்கிட்டு திரிகிறான் என்று கோபப்பட அதற்கு மீனா ஸ்ருதி நல்ல பொண்ணு என்று முத்து மனதை மாற்ற முயற்சி செய்ய, அதற்கு யாராகவும் இருக்கட்டும்.

ஆனால் இது செட் ஆகாது. அந்த பொண்ணு கூட ரவி பேசுறான்னு தெரிஞ்சதற்கே அவங்க அப்பன் ரவியை அடிக்க ஆள் செட் பண்ணுனான். அதுல அந்த பொண்ண கல்யாணம் பண்ண ஆசைப்படுறான்னு சொல்லி நாம அவங்க வீட்டுக்கு போனா நிற்க வச்சு எல்லாரையும் கேவலப்படுத்துவான் என்று சொல்ல மீனா அதிர்ச்சியாகிறார்.
இது எல்லாம் நடந்திருக்கா எனக்கு தெரியாது என்று சொல்கிறார். இதை தொடர்ந்து இதைவிட கூடாது. இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என்று மீனாவை கூட்டிக்கொண்டு ரவி ரெஸ்டாரண்டுக்கு முத்து போய் ரவியிடம் சத்தம் போடுகிறார். அதற்கு மீனா முத்துவை சமாதானம் செய்ய முயற்சி செய்தும் அவர் அமைதியாகாமல் ரவியை அடிக்க பார்க்கிறார்.
அதற்கு ரவி முத்துவை வெளிய கூட்டிட்டு வந்து என்ன பிரச்சனை என்று கேட்க, அந்த பொண்ணு கிட்ட இன்னும் பேசிட்டு தான் இருக்கியா? என்று கோபமாக கேட்க, அதற்கு ரவி எந்த பொண்ணு என்று கேட்க, அதற்கு வாசுதேவன் பொண்ணு என்று முத்து கோபமாக சொல்ல, அதற்கு ரவி ஸ்ருதி நல்ல பொண்ணு என்று சொல்கிறார். அதற்கு முத்து அந்த பொண்ணு நல்ல பொண்ணாவே இருக்கட்டும். ஆனா நம்ம குடும்பத்துக்கு செட்டாகாது.
அப்பாவை அந்த வாசுதேவன் எவ்வளவு அவமானப்படுத்தி இருக்கிறான். அது உனக்கே தெரியும். அப்பா எல்லாத்தையும் நமக்காக பொறுத்துக்கிட்டு தான வேலை செஞ்சாரு. திரும்பவும் சொல்கிறேன் அந்த பொண்ணு கிட்ட பேசுறது இதோட நிறுத்திக்க, உன் மனசுக்குள்ள ஏதாவது ஆசை இருந்தா அது அப்படியே அழிச்சுடு என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
அடுத்ததாக மீனா தூங்கிக் கொண்டிருக்கும்போது முத்து மீனாவை எழுப்பி ரவி இனி அந்த பொண்ணு கிட்ட பேச மாட்டான் தானே? நீ அவன்கிட்ட பேசினியா? என்று கேட்க, அதற்கு அதை நீங்களே அவங்க கிட்ட கேளுங்க என்று மீனா தூங்க பார்க்க இவனுக்கு உடனடியாக ஒரு கல்யாணத்தை பண்ணி விடணும் நாளைக்கு ஒரு இடத்திற்கு போகணும் நீ ரெடியா இரு என்று சொல்லிவிட்டு முத்து படுத்து விடுகிறார்.
மறுநாள் காலையில் மீனாவை கூட்டிக்கொண்டு முத்து மீனாவின் வீட்டிற்கு பூ, பழம் எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு போக அவருடைய அம்மா என்னவென்று புரியாமல் அதிர்ச்சி செய்கிறார். பிறகு ரவி பற்றி உங்களுக்கு தெரியும். சீதா ரொம்ப நல்ல பொண்ணு அதனால சீதாவை ரவிக்கு பேசி முடிச்சிடலாம் என்று நான் நினைக்கிறேன் என்று முத்து சொல்கிறார். அதைக் கேட்டு மீனாவும் மீனாவின் அம்மாவும் அதிர்ச்சியாகி நிற்கின்றனர்.
அதோடு மீனாவின் அம்மா வேண்டாம் மாப்பிள்ளை ஏற்கனவே மீனா அந்த வீட்டில் படுகிற கஷ்டம் போதும். இனி சீதாவையும் அந்த வீட்டில் கட்டி கொடுத்துட்டு என்னால அவமானப்பட முடியாது. உங்க அம்மாவை நினைச்சா எனக்கு பயமா இருக்கு. வேண்டாம் இது எல்லாம் சரிப்பட்டு வராது என்று சொல்ல, அதைக் கேட்டு முத்து அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications