Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: முத்துவுக்கு தெரிய வந்த ரகசியம்! அசிங்கப்பட்ட விஜயா.. நறுக்குன்னு ஸ்ருதி கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அக்டோபர் எட்டாம் தேதிக்கான எபிசோடில் சத்யாவை எக்ஸாம் எழுத வைக்க வேண்டும் என்பதற்காக முத்துவும், மீனாவும் முயற்சி செய்திருக்கும் நிலையில் அவர்களுக்கு சில உண்மைகள் தெரிய வந்திருக்கிறது.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மீனா சத்யாவுக்காக சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கொரியர் பாய் ஒருவர் வந்து ஸ்ருதிக்கு பார்சல் வந்திருப்பதாக சொல்ல, மீனா கையெழுத்து போட்டு வாங்க போகிறார். அப்போது வந்த விஜயா என்னுடைய மருமகளுக்கு வந்ததை நான் தான் வாங்குவேன் என்று அந்த பார்சலை வாங்கிக் கொள்கிறார். மீனா தடுத்தும் கேட்காமல் அந்த பார்சலை பிரித்து அதில் இருக்கும் ஹெட்போனை எடுத்து காதில் வைத்து இது என்னது என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

siragadikka aasai serial vijay tv

அப்போது மீனா இது செல்போனில் கனெக்ட் பண்ணி பாட்டு கேட்க வேண்டியது என்று சொல்ல, எனக்கு எல்லாம் தெரியும் நீ போ என்று திட்டி அனுப்பி விட்டு அந்த ஹெட்போனை காதில் வைத்த படி கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஸ்ருதியும் ரவியும் வீட்டிற்கு வருகின்றனர். ஸ்ருதி என்ன ஆன்ட்டி புதுசா ஹெட்போன் வாங்கி இருக்கீங்களா? என்று கேட்க, விஜயா இது உன் பேருக்கு வந்தது தான் என்று சொன்னதும் கோபமான ஸ்ருதி உங்களுக்கு மேனஸ் கிடையாதா? அடுத்தவங்களுக்கு வந்த பொருளை நீங்க எப்படி பிரித்து பார்க்கலாம் என்று கோபப்பட்டு திட்டுகிறார்.

பிறகு ரவி சமாதானம் செய்து ஸ்ருதியை ரூமிற்கு கூப்பிட்டு சென்று விடுகிறார். வழக்கம் போல விஜயா, மீனாவிடம் உனக்கு இப்போ சந்தோஷமா என்று திட்டுகிறார். அடுத்ததாக சத்யாவின் காலேஜுக்கு முத்துவும் மீனாவும் போகின்றனர். அங்கு காலேஜை பார்த்ததும் முத்துவும், மீனாவும் தாங்கள் படிக்காதது குறித்து ஃபீல் பண்ணி பேசுகின்றனர். பிறகு காலேஜில் பிரின்ஸ்பல் கோபமாக வெளியே செல்வதை பார்த்து அவருடன் பேச வேண்டும் என்று போகும்போது அங்கிருக்கும் பியூன் தடுத்து நிறுத்துகிறார்.

siragadikka aasai serial vijay tv

பிறகு பியூனிடம் பிரின்ஸ்பலிடம் பேச வேண்டும் என்று முத்து சொல்ல அவர் பெர்மிஷன் வாங்கிட்டு வரேன் என்று போகிறார். ஆனாலும் பிரின்சிபல் இப்போ முடியாது சனிக்கிழமை வர சொல்லுங்க என்று சொல்லிவிடுகிறார். அதற்கு பிறகு பியூனை கூட்டிக்கொண்டு டீக்கடைக்கு சென்று முத்துவும் மீனாவும் பிரின்ஸ்பல் பற்றி விசாரிக்கின்றனர். அப்போது ஆரம்பத்தில் பிரின்ஸ்பல் நல்லாதான் இருந்தார் ஆனால் அவருடைய ஒரே மகளை கல்யாணம் செய்து கொடுத்த பிறகு அவருடைய மருமகன் குடிச்சிட்டு அந்த பொண்ணை அடிச்சு கொடுமைப்படுத்தியதால் அந்த பொண்ணு இவங்க வீட்டில் இருக்கிறது.

பொண்ணோட நிலைமையை பார்த்து தான் இவர் இப்படி கோபமா மாறிட்டாரு என்று சொல்கிறார். பிறகு அந்த பிரின்ஸ்பல் வீட்டு முகவரி பற்றியும் பியூன் சொல்ல அதைக் கேட்டு முத்து பீல் பண்ணுகிறார். நாம ஒரு பிரச்சனை என்று வந்தால் இவருக்கு வேற பிரச்சனை இருக்கிறதே என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

siragadikka aasai serial vijay tv

மறுபக்கத்தில் மனோஜ் ஷோரூமில் எந்த பொருள்களும் விற்பனையாகாமல் இருப்பதால் சோகமாக இருக்கிறார். அப்போது அங்கு வேலை பார்க்கும் ஒருவர் வந்து எங்க அக்கா பொண்ணு வயசுக்கு வந்துடுச்சு நான் தான் தாய்மாமன் சீர் செய்யணும் கொஞ்சம் அட்வான்ஸ் கொடுங்க நான் வீட்டுக்கு போகணும் என்று சொல்ல, அதற்கு மனோஜ் அதெல்லாம் முடியாது என்று சொல்லி அனுப்பி விடுகிறார்.

அந்த நேரத்தில் சில வாரங்களுக்கு முன்பு ஒரு நபர் எனக்கு லாட்டரியில் பணம் கிடைக்கும் என்று சொல்லிப் பொருள் பார்க்க வந்தாரே அவர் இன்று வந்து இருக்கிறார். அவரைப் பார்த்ததும் நீ மறுபடியும் வந்துட்டியா என்று மனோஜ் கோபப்பட, அதற்கு அவர் நான் இப்போது கோடீஸ்வரர் எனக்கு நான் சொன்னது போலவே லாட்டரியில் பரிசு கிடைத்து விட்டது என்று சொல்ல, அதைக்கேட்டு மனோஜ் அதிர்ச்சியாகி நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+