Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Siragadikka Aasai serial : அருண் போட்ட சபதம், சிக்கிய மனோஜ்! முத்துவின் மனமாற்றம்! மீனாவிற்கு இன்ப அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை, ஆகஸ்ட் 19, 2025: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் இன்றைய எபிசோட் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக இருந்தது. அருணின் கோபமும், மனோஜ் மற்றும் ரோகிணியின் தர்மசங்கடமான நிலையும் ரசிகர்களை மேலும் ஆர்வமாக பார்க்க வைத்தது.

Siragadikka aasai serial vijay tv

அருணின் கோபம்

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், மீனா முத்து கொடுத்த பணத்தை சந்திராவிடம் கொடுக்கிறார். இதை பார்த்த அருண் கோபப்பட்டு "நான் என் அம்மாவை கூட்டிட்டு போறேன். அது எப்படி அவங்களுக்கு செலவு பண்ணாம விடுவேன். என்னை அசிங்கப்படுத்துறீங்களா?" என்று கேட்கிறார். முத்து அக்கறையில் தான் கொடுத்து இருக்கிறார் என்று மீனா சொல்ல அதை அருண் கேட்காமல் கோபப்படுகிறார். இதனால் சந்திரா பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறார்.

அருண் போட்ட சபதம்

அப்போது அருண் "எப்படி பணத்தை வேணான்னு திருப்பி கொடுத்தார்களோ அதே மாதிரி இந்த குடும்பத்திலிருந்து வேணான்னு துரத்தி விட வைக்கிறேன்" என்று மனதில் சபதம் போட்டுக் கொள்கிறார். மறுபக்கத்தில் ஷோரூமில் மனோஜ் மற்றும் ரோகிணி இருக்கும்போது ராஜா ராணி வக்கீலுடன் வந்து பேசுகிறார். பணத்தை கொடுங்கள் என்று மனோஜ் கேட்க, வக்கீல் "அவர்கள் ஏன் பணத்தை கொடுக்க வேண்டும். அவங்க திருடவில்லை. நீங்க ராணியிடம் மிஸ் பிஹேவ் பண்ணிட்டு மாட்டிக்கிட்டீங்க. அதை கேட்க வந்த அவரோட புருஷன் கிட்ட பணத்தை திருடுனதா சொல்லி இருக்கீங்க" என்று மனோஜ் மீது பழியை திருப்பி விடுகிறார்.

போலீஸ் மிரட்டல்

மனோஜின் இந்த மோசடிக்கு ரோகிணி ஆதரவாக நிற்க, "எங்ககிட்ட ஆதாரம் இருக்கு. நான் போலீஸுக்கு போன் பண்ணுகிறேன்" என்று வக்கீல் மிரட்டுகிறார். மனோஜும் ரோகிணியும் பயந்து போகிறார்கள். மனோஜ் "போலீஸ் வேண்டாம். நாம் பேசிக்கலாம்" என்று சொல்ல வக்கீல் "அப்படியென்றால் மூன்று லட்சத்தை திருப்பி கொடுங்கள்" என்று சொல்ல இருவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

கடன் வாங்கிய மனோஜ்

தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என மனோஜ் சொல்ல, "அப்படியானால் மாதம் ₹30,000 கொடுங்கள்" என்று வக்கீல் சொல்லுகிறார். அதற்கு ரோகிணி கோபப்பட்டு திட்ட, போலீசுக்கு போன் போட்டால் மாட்டிக் கொள்வோம் என்று நினைத்து ₹25,000 நான்கு முறை தருவதாக ஒத்துக் கொள்கின்றனர்.

ஸ்ருதியின் பிசினஸ் முயற்சி

ஸ்ருதி ரவி வேலை செய்யும் ரெஸ்டாரன்ட்டிற்கு வந்து நீத்துவை சந்திக்கிறார். ரவியிடம் ஒரு இன்விடேஷன் கொடுக்கிறார். நீத்து "உனக்குள்ள இவ்வளவு துணிச்சல் இருக்கிறதா என ஆச்சரியப்பட, ஸ்ருதி "ஏன் என்னால செய்ய முடியாதுன்னு நினைச்சியா?" என்று கேட்கிறார். பின்னர் ரவி ஸ்ருதியிடம் "நீ பொண்ணு மாப்பிள்ளை இல்லாம கல்யாணம் ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்க மாதிரி இருக்கு" என்று சொல்ல ஸ்ருதி "யார் என்ன சொன்னாலும் நான் ரெஸ்டாரன்ட் ஓப்பன் பண்ணி ஆவேன்" என்று சொல்கிறார். ரவியை பார்த்து "நீதான் என்னோட ரெஸ்டாரன்ட்டுக்கு சீஃப் செஃப்பா ஆகணும்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.

ரவியின் முடிவு

ஸ்ருதி பேச்சு ரவிக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. "அவள் ஏதாவது பிரச்சனைல போய் மாட்டிடுவாளோனு பயமா இருக்கு. ஆனா நான் நம்ம ரெஸ்டாரன்ட்டை விட்டு போக மாட்டேன்" என்று ரவி சொல்கிறார். அதைக் கேட்டு நீத்து ரவியை இங்கிருந்து போகவிடாமல் செய்வதற்கு ஏதாவது பிளான் பண்ணனும் என்று யோசிக்கிறார்.

மீனா - முத்து பாசம்

முத்து வீட்டிற்கு வந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது மீனாவை பார்த்து "அம்மாவிடம் கொடுத்த காசை கொடுக்க மறந்துவிட்டாயா?" என்று கேட்கிறார். மீனா நடந்ததை சொல்ல, முத்து "உண்டியலில் போட்டு விடு" என்று சொல்கிறார். முத்து கோபப்படவில்லையா என மீனா ஆச்சரியமாக கேட்க, "கல்யாணத்துக்கு பிறகும் சீதா நல்லா இருக்கணும்" என்று முத்து சொல்ல மீனாவின் கண்கள் கலங்குகிறது. பாசத்துடன் அவருக்கு முத்தம் கொடுக்கிறார்.

கிரிஷ்ஷின் சோகம்

ரோகிணி கிரிஷை அழைத்துக்கொண்டு போர்டிங் ஸ்கூலுக்கு வர அதை பார்த்து கிரிஷ் அதிர்ச்சி அடைகிறார். மகேஸ்வரியை கார்டியனாக சைன் போட சொல்லிவிட்டு அங்கு இருந்து ரோகிணி செல்ல கிரிஷ் அழுதுகொண்டே இருக்கிறார். இப்படியாக இங்கே எபிசோடு முடிவடைகிறது. அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+