சிறகடிக்க ஆசை: முத்து செய்த நல்லது அவருக்கே பிரச்சனை ஆனது.. அடுத்த பிளாஷ்பேக்! கதை இப்படி போயிடுச்சே!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளை என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் சீதா ஹாஸ்பிடலில் இருக்கிறார். அப்போது அங்கு முத்து மீனா உட்பட மொத்த குடும்பமும் இருக்கும் நிலையில் அருண் சீதாவை பார்ப்பதற்காக வருகிறார். அருணை பார்த்ததும் முத்து அவரை அடிக்கப் போகிறார். இதனால் இனி என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் சில மாதங்களுக்கு முன்பு வரைக்கும் ரோகிணியை பற்றிய உண்மைகள் எப்போது குடும்பத்திற்கு தெரியவரும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ரசிகர்கள் பல மாதங்களாக எதிர்பார்த்து இருந்த சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு எளிமையாக நடைபெற்றது. அதாவது ரோகிணி பெரிய பணக்கார வீட்டு பொண்ணு இல்லை என்று உண்மை மட்டும் இப்போதைக்கு தெரிய வருகிறது. இந்த பஞ்சாயத்துக்கு இடையில் ரோகிணி பற்றி ஒரு உண்மை தெரிந்ததற்கே விஜயா ரோகிணியை மனோஜ் வாழ்க்கையில் இருந்து விலகி விட வேண்டும் என்று பிளான் போட்டு இருக்கிறார்.

ரோகிணிக்கு பிரச்சனை
ரோகிணியை விவாகரத்து செய்து அனுப்பி வைத்துவிட்டு மனோஜ்க்கு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஏற்பாடுகளையும் விஜயா தொடங்கி இருக்கிறார். அதுபோல மனோஜ் மனதை மாற்றுவதற்காக ரோகிணியும் புது நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் முத்துவின் கோபத்தால் இப்போது புதிய பிரச்சனையும் தொடங்கி இருக்கிறது. சீதா காதலிக்கும் டிராபிக் போலீஸ் அருணுக்கும் முத்துவுக்கும் ஏற்கனவே வாய்க்கால் வரப்பு பிரச்சனை போல, ஒவ்வொரு பிரச்சனையாக வந்து கொண்டே இருக்கிறது.
இன்றைய எபிசோடு
இவர்கள் இருவரும் அடிக்கடி முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது இவர்களுக்குள் இருக்கும் ஈகோவால் சீதாவின் காதல் சின்னாபின்னமாகி இருக்கிறது. சீதாவுக்கு சப்போர்ட் செய்து மீனாவும் முத்துவிடம் பேச இதனால் முத்து குடித்து விட்டு வந்து பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். இதற்கிடையில் இன்றைய எபிசோடில் தன்னுடைய அம்மா விஜயா மீது தனக்கு இருக்கும் அன்பை முத்து வெளிகாட்ட அதை பார்த்து விஜயா ஒரு நிமிடம் மனம் வருந்தி இருந்தார். ஆனாலும் பிறகு வழக்கம் போல முத்துவை திட்ட தொடங்கி விட்டார்.
முத்துவால் பிரச்சனை
அதே நேரத்தில் நாளைக்கான எபிசோடின் ப்ரோமா வெளியாகி இருக்கிறது. அதில் சீதா ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருக்கிறார். ஏற்கனவே வீட்டில் இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை என்று சத்யா சொல்லி இருந்தார். இதனால் சீதா மயக்கம் போட்டு விழுந்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முத்து மீனா உட்பட குடும்பத்தினர் எல்லோரும் அங்கு தான் இருக்கிறார்கள். அப்போது அருணின் அம்மாவும் இருக்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ
அந்த நேரத்தில் அருண் அங்கு பழங்களை வாங்கிக்கொண்டு வருகிறார். அருணை பார்த்தது நீ எதுக்குடா இப்ப எங்க வந்தாய்? என்று முத்து சண்டையிட அதற்கு அருண் சீதா நான் கட்டிக்க போற பொண்ணு, அவளை பாக்குற உரிமை எனக்கு இருக்கு என்று பிரச்சனை செய்ய, அதற்கு முத்து அவரை அடிக்கப் போகிறார். அப்போது என் மீது இருக்கும் கோபத்தால் நீ என்னை பழி வாங்குவதற்காக இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க என்று அருண் சொன்னதும் முத்து கோபப்பட்டு நிற்கிறார். இப்படியாக ப்ரோமோ இருக்கும் நிலையில் நாளை இதை வைத்து பெரிய பஞ்சாயத்து நடக்கும் என்று தெரிகிறது.
அடுத்து வருவது
ஏற்கனவே முத்து நான் பார்க்கும் மாப்பிள்ளையை தான் சீதா கல்யாணம் பண்ண வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் கடைசி நேரத்தில் சீதா மற்றும் அவருடைய குடும்பத்தினர் சேர்ந்து அருணுக்கு சீதாவை கல்யாணம் பண்ணி வைப்பார்கள் என்று தெரிகிறது. இதனால் முத்து மற்றும் மீனாவிற்கு இடையே புது பிரச்சனை வரப்போகிறது. அதே நேரத்தில் முத்துவின் பிளாஷ்பேக் கதையும் இனி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications