சிறகடிக்க ஆசை: திருமணத்திற்கு சம்மதம் சொன்னதும் முத்துவிடம் திமிரை காட்டிய அருண்.. அண்ணாமலை கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளை என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் சீதா மற்றும் திருமணத்திற்கு முத்து சம்மதம் தெரிவித்திருக்கும் நிலையில் பெண் பார்க்க வந்த அருண் போட்ட கண்டிஷனை பார்த்து முத்து கோபப்படுகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் மூன்று வாரங்களாக இழுவையோ இழுவை என்று இழுத்துக் கொண்டு இருந்த அருண் சீதா காதல் பிரச்சனைக்கு இன்றைய எபிசோடில் முத்து முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். ஏற்கனவே சீதா மற்றும் அருணுக்கு மீனா ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து வைத்திருக்கிறார். இந்த உண்மையை முத்துவிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் இப்போது முத்து மனசு மாறி இருக்கிறார்.

முத்துவின் இந்த மாற்றத்தை பார்த்து மொத்த குடும்பமும் சந்தோஷத்தில் இருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க முத்துக்கு தெரியாமல் மீனா திருமணத்தை நடத்தி வைத்த விஷயம் எப்போது தெரியப் போகிறது என்று தெரியவில்லை. அப்போதுதான் பெரிய பஞ்சாயத்தை வரப்போகிறது. இதுவரைக்கும் அருண்மீது இருந்த கோபத்தால் சீதா கல்யாணத்திற்கு சம்மதிக்காமல் இருந்து முத்து இப்போது சீதாவிடம் அருணை நாளைக்கு பெண் பார்க்க வர சொல்லு அந்த நேரத்தில் நீ நல்ல புடவை கட்டணும் என்று புது புடவை வாங்கிக் கொண்டு கொடுத்திருக்கிறார்.
முத்துவின் மாற்றத்தை பார்த்து அண்ணாமலையும் சந்தோஷத்தில் பாராட்டி இருக்கிறார். இப்படியான நிலையில் நாளைக்கு என்று வெளியான ப்ரோமோவில் அருண் பெண்பார்க்க வந்திருக்கிறார். அவரிடம் அந்த வீட்டின் தலைவராக அண்ணாமலை பேசுகிறார். அப்போது எல்லா விஷயமும் இப்ப ஓகேவா உன்னுடைய எதிர்பார்ப்புகள் எதுவும் இருக்கிறதா? என்று கேட்க, அதற்கு அருண் ஆமாம், சில விஷயங்கள் சொல்ல வேண்டியது இருக்கு.
இந்த திருமண எப்போவோ நடந்து இருக்க வேண்டியது. ஆனால் சில சம்பவங்களால் இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது. ஆனாலும் என்னுடைய கல்யாணத்திற்கு நிறைய போலீஸ் ஆபீஸர்ஸ் வருவாங்க, அவங்க முன்பு அங்கு யாரும் குடிச்சுட்டு வரக்கூடாது என்று முத்துவை பார்த்து அருண் சொல்ல முத்துவின் முகம் மாறுகிறது. அங்கு இருந்த எல்லோரும் முத்து என்ன சொல்லப் போகிறாரோ என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். முத்துவை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்று அருணின் எண்ணம் இப்போதும் மாறவில்லை என்பதுதான் பலருடைய வருத்தமாகவும் இருக்கிறது.
அருண் உண்மையில் சீதாவை காதலித்து தான் கல்யாணம் செல்கிறாரா? அல்லது முத்துவை பழிவாங்குவதற்காக சீதாவை பயன்படுத்த போகிறாரா? என்பது இனி தான் தெரியவரும். ஏற்கனவே அண்ணாமலை குடும்பத்திற்குள் பிரச்சனையை செய்ய வைத்து குடும்பத்தை பிரித்து ஸ்ருதியை வீட்டிற்கு கூட்டிட்டு வரவேண்டும் என்று ஸ்ருதியின் பெற்றோர் பிளான் போட்டிருக்கிறார்கள். இந்த கல்யாணத்தை வைத்து அவர்கள் எதுவும் பிரச்சனை செய்யப் போகிறார்களா? என்ற கேள்விகளும் வருகிறது. ஏற்கனவே ஸ்ருதியின் அம்மாவிடம் 2 லட்சம் பணத்தை ரோகிணி கடன் வங்கி இருக்கிறார். ஆனால் அதை மனோஜிடம் மீண்டும் மறைத்திருக்கிறார். இதனால் இதை வைத்து அடுத்த பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எது எப்படியோ இனி சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்தடுத்து ஒவ்வொரு வாரமும் ஒரு பிரச்சனை வெடிக்க போகிறது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications