சிறகடிக்க ஆசை: கல்யாணத்தில் மாட்ட போவது கறிக்கடைக்காரர் இல்ல! முத்து பார்த்த விஷயம், அதிர்ச்சியில் அண்ணாமலை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் மார்ச் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பரசுவின் மகள் திருமணத்தில் கறிக்கடைக்காரரை முத்து பார்ப்பது போல காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் அதில் நடக்கும் சம்பவமே வேறு. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை ரசிகர்கள் எப்போதுமே கேட்கும் ஒரே கேள்வி ரோகிணி எப்போது மாட்டுவார் என்று தான். ஆனால் ரோகிணி மாட்டிவிட்டால் இந்த சீரியலே முடிவுக்கு வந்துவிடும் என்பது பலருக்கும் தெரியவில்லை போல. ரோகிணி பற்றிய உண்மைதான் இந்த சீரியலுக்கு முக்கிய கதையாக இருக்கிறது. அதேபோல முத்துவின் பிளாஷ்பேக் கதையை அப்போ அப்போ சொல்லி அதையும் ஹைப் ஏற்றி வைத்திருக்கிறார்கள்.

அது என்ன தப்பு பாஸ்
அதனால் முத்து சின்ன வயதில் அப்படி என்னதான் தப்பு செய்தார்? எதற்காகத்தான் ஜெயிலுக்கு போனார்? எதற்காகத்தான் விஜயா முத்துவை வெறுத்தார்? என்று பல்வேறு கேள்விகள் முத்துவை சுற்றியும் வருகிறது. ஆனால் இந்த இரண்டுக்குமே இப்போது விடை கிடைக்காது மக்களே. நீங்கள் ஒவ்வொரு வார ப்ரோமோவையும் பார்த்து ஏமாற வேண்டியதுதான் என்பது போலத்தான் ஒவ்வொரு வார சனிக்கிழமை எபிசோடிலும் அடுத்த வாரத்திற்காக ப்ரோமோவிலும் ரோகிணி மாட்டுவது போன்றே காட்டப்பட்டு வருகிறது.
ஹைலைட்டான ப்ரோமோ
அதிலும் ஹைலைட்டாக இப்போது வந்த ப்ரோமோ இருக்கிறது. அதாவது அண்ணாமலையின் நண்பர் பரசுவின் மகள் திருமணம் செய்யப்போவது ரோகிணியின் மாமாவாக நடிக்க வந்த கறிக்கடைக்காரரின் மருமகனை தான். இந்த பக்கம் முத்து குடும்பத்தினர் முன்னின்று திருமணத்தை நடத்துகிறார்கள். மாப்பிள்ளை வீட்டு சைடில் கறிக்கடைக்காரர் திருமணத்தை முன் நின்று நடத்துகிறார்.
பரபரப்பான வேலை
இதனால் இந்த திருமணத்தில் கறிக்கடைக்காரர் முத்து அல்லது அண்ணாமலை குடும்பத்தினர் யாருடைய கண்ணிலாவது சிக்கினால் ரோகிணி பற்றிய உண்மைகள் தெரியவரும் என்று எதிர்பார்ப்பில் இருக்கும் நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் அண்ணாமலை குடும்பத்தினர் எல்லோரும் மண்டபத்தில் மும்மரமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
முத்து கண்ட காட்சி
அதேபோல கறிக்கடைக்காரர் மணியும் வேலை செய்து கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் முத்து அண்ணாமலையை கூட்டிக்கொண்டு வந்து அப்பா இங்க பாரு என்று காட்டும்போது அங்கு கறிக்கடைக்காரர் மணி பந்தி பரிமாறி கொண்டு இருப்பது போல காட்டப்படுகிறது. ஆனால் முத்து காட்டப்போவது மணியை அல்ல விஜயா தன்னுடைய மூன்று மருமகளோடு ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதை தான்.
பாவம் மீனா
இதை பார்த்து தான் முத்து சந்தோஷத்தில் தன்னுடைய அப்பாவை கூப்பிட்டு வந்து காட்டுகிறார். விஜயா எந்த இடத்திலும் மீனாவை தன்னுடைய மருமகள் என்று சொல்லுவது கிடையாது. அதே நேரத்தில் தன்னுடைய மற்ற மருமகளான ரோகிணி மற்றும் ஸ்ருதி இருவரும் எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும் அவர்களிடம் இருக்கும் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்து கொண்டு போகிறார்.
ஆச்சரியப்படும் முத்து
இதனால் முத்துவிற்கு தன்னுடைய அம்மா மூன்று மருமகள்களையும் சரிசமமாக உட்கார வைத்து சாப்பிடுவது அதிசயமாக இருக்கிறது. இதைத்தான் இப்போது ப்ரோமோவில் ஹைப் ஏத்தி காட்டப்பட்டிருக்கிறது. அதனால் நாளை எபிசோட்டில் என்ன நடக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பில் ஏமாந்து போய்விடாதீர்கள் மக்களே.
மாட்டுவாரா இல்லையா
இந்த முறையும் கறிக்கடைக்காரர் மாட்டுவதற்கு வாய்ப்பு இல்லை. அந்த மண்டபத்தில் பியூட்டிஷியனாக இருக்கும் ரோகிணி க்கு ஜூஸ் கொண்டு போவதற்காக ஒருமுறை மணி போகிறார். அதனால் இது முத்து குடும்பம் என்று தெரிந்து மணி மறைந்து கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அல்லது ரோகிணி அவரை மிரட்டி எங்கேயாவது வெளியே அனுப்பி வைக்கபோகிறார் என்று தெரிகிறது. ஆனாலும் இந்த முறை கறிக்கடைக்காரர் மாட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று நீங்க நினைக்கிறீர்களா? இல்லை வழக்கம் போல இயக்குனர் ஏமாற்றப் போகிறார் என்று நினைக்கிறீர்களா?












Click it and Unblock the Notifications