Siragadikka Aasai Promo: அடப்பாவமே! விஜயா முத்துவை பிரிந்தது இதற்காகத்தானா? வெளியான ஃபிளாஷ்பேக் கதை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த முத்துவின் பிளாஷ்பேக் கதை இப்போது வர தொடங்கி இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி எப்போது குடும்பத்திடம் மாட்டுவார் என்பது தான் பலருடைய கேள்வி. ஆனால் இப்போ, அப்போ என்று கண்ணாமூச்சி காட்டி ஆட்டம் காட்டிக்கொண்டு வந்த இயக்குநர் இப்போது ரசிகர்களின் இன்னொரு எதிர்பார்ப்பை நிறைவேற்ற தொடங்கி இருக்கிறார். அதாவது முத்து விஜயாவிற்கு பிடிக்காத காரணம் என்ன? அவரை எதற்காக பாட்டி வீட்டில் கொண்டுபோய் விஜயா விட்டார் என்பதுதான் பலருடைய எதிர்பார்ப்பு.
இதை அவ்வப்போது பில்டப் பண்ணி காட்டி எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தனர். இந்த நிலையில் ஒரு வழியாக இப்போது அது பற்றிய திருப்பம் வரப்போகிறது. கடந்த ஒரு மாதமாகவே கிரிஷ் உடைய காட்சிகள் தான் அதிகமாக இருந்தது. முத்துமீனா கிரிஷ் உடைய வாழ்க்கைக்காக பல முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருந்தனர். கடைசியாக கிருஷ் செய்த தவறுக்காக அவரால் பாதிக்கப்பட்ட இன்னொரு மாணவனின் தந்தையின் காலில் கூட முத்து விழுந்திருந்தார்.
ஃப்ளாஷ் பேக்
எல்லா இடத்திலும் தன்மானத்தோடு பேசும் முத்து இப்போது தன்மானத்தை விட்டு கிருஷுக்காக இன்னொருவரின் காலில் விழுந்து அனைவருடைய அனுதாபத்தையும் பெற்றுவிட்டார். இந்த நிலையில் நாளைக்கு என்று வெளியான ப்ரோமோவில் கிரிஷை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று மனோஜ் சொல்ல முடியாது என்று முத்து சொல்கிறார். அதற்கு உன்னை மாதிரி அவனையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தான் சேர்க்கணும்டா என்று மனோஜ் வழக்கம்போல திமிரா பேசியதும், முத்து நான் ரவுடியாடா? நானாடா ரவுடி? என்று மனோஜின் சட்டையை பிடித்து அடிக்க போகிறார். உடனே மனோஜ் அமைதியாக இருக்கிறார்.
வெளிவந்த உண்மை
பிறகு மீனா நீங்க எதுக்காக சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு போனீங்க? என்று கேள்வி கேட்கிறார். இப்படியான நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் விஜயா ஒரு சாமியாரை போய் பார்க்கிறார் அவர் உங்களுடைய இரண்டாவது மகன் உங்க கூட இருந்தா உங்களுடைய உயிருக்கே ஆபத்து என்று சொல்கிறார். உடனே விஜயா அழுது கொண்டே அவருடைய மாமியாரிடம் கொஞ்ச நாளைக்கு உங்களுடன் இருக்கட்டும் என்று சொல்லி விடுகிறார்.

உங்கள் கருத்து
அப்போது முத்து அம்மா போகாதீங்க என்று கெஞ்சி அழுது கொண்டிருக்கிறார். விஜயா இப்பொழுது மட்டுமல்ல அப்பவே சாமியார் பேச்சை கேட்டு தான் ஆடி இருக்கிறார். ஆனால் மனோஜ் செய் தவறுக்கு தான் முத்து பழியை ஏற்றுக்கொண்டு அப்போதே கெட்ட பெயர் வாங்கி இருக்கிறார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் மக்களே. இந்த பிளாஷ்பேக் காட்சி பார்க்க நீங்க ஆவலோடு இருக்கீங்களா? அல்லது வழக்கம் போல இதுவும் பெரிய அளவில் அழுத்தம் இல்லாமல் பிட்அப் காட்சிகள் உடன் ஏமாற்றி விடுவார்கள் என்று நினைக்கிறீர்களா?












Click it and Unblock the Notifications