சிறகடிக்க ஆசை சீரியல் நாளைய அப்டேட்: ரோகிணி போட்ட நாடகத்தால் தெருவுக்கு வரும் மனோஜ்.. உடையும் குடும்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் நாளைக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மனோஜ்க்கு அமெரிக்க பெண்ணுடன் எங்கேஜ்மென்ட் நடந்த விஷயம் ரோகிணிக்கு தெரிய வந்திருக்கிறது. இதை வைத்து இப்போது ரோகிணி புது ஆட்டத்தை தொடங்கி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ
சிறகடிக்க ஆசை சீரியலில் சில வாரங்களாகவே கதை பெரிதாக சுவாரசியம் இல்லாமல் ஒரே இடத்தில் சுற்றி சுற்றி வந்தது. இப்போது புதிய பிரச்சனைகள் வர தொடங்கி இருக்கிறது. அதாவது ஒரு பக்கம் சிந்தாமணியின் மகளைத்தான் சத்தியா காதலிக்கிறார் என்ற உண்மை முத்து மீனாவிற்கு தெரிய வந்திருக்கிறது. அதேபோல இந்த காதல் பிரச்சனை சிந்தாமணிக்கும் தெரிந்திருக்கிறது.

சிந்தாமணியின் ஆட்டம்
சிந்தாமணி இதுவரைக்கும் தன்னுடைய கணவருடன் பிரிந்து இருந்தாலும் இப்போது இந்த பிரச்சனையை பற்றி தன்னுடைய கணவரிடம் போட்டுக் கொடுத்திருக்கிறார். அதிலும் சத்யா ஆரம்பத்தில் செய்த திருட்டு வேலைகள் எல்லாவற்றையும் இப்போது சொல்லிக் கொடுத்திருக்கிறார். இதனால் சிந்தாமணியின் கணவர் சத்யாவை வேலையை விட்டு துரத்துவாரா? அல்லது தன்னுடைய மகளை கல்யாணம் செய்து கொடுப்பாரா? என்று கேள்விகள் ஒரு பக்கம் இருக்கிறது.

சத்யாவின் காதல் பிரச்சனை
இன்னொரு பக்கத்தில் மனோஜிக்கு விவாகரத்து நடப்பதற்கு முன்பே அமெரிக்கா பெண்ணுடன் என்கேஜ்மென்ட் நடந்திருக்கிறது. விவாகரத்து இன்னும் ஆறு மாதத்திற்கு தள்ளி வைத்திருக்கும் விஷயத்தை விஜயாவும் மனோஜும் வீட்டில் சொல்லாமல் மறைத்து வைத்திருக்கின்றனர். இதற்கு இடையில் இன்றைய எபிசோடில் மனோஜ்க்கு எங்கேஜ்மென்ட் செய்த ஹரிணி ரோட்டில் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கும்போது அவருக்கு உதவி செய்வது போல பேசிய ரோகிணியை அவர் உண்மையாக நம்பிவிடுகிறார்.

ரோகிணியின் நாடகம்
மேலும் ரோகிணி தன்னுடைய பார்லர் அட்ரஸை கொடுத்திருக்கிறார். இப்படியான நிலையில் நாளைக்கான ப்ரோமோவில் ரோகிணியின் பார்லருக்கு ஹரிணி போய் இருக்கிறார். ஹரிணியை பார்த்ததும் அவருக்கு மேக்கப் செய்ய வேண்டும் என்பதற்காக தன்னுடைய ஃபோனை காட்டி இதில் பத்து முப்பதாகிறது இன்னும் ஒரு மணி நேரத்தில் உங்களுக்கு எல்லாம் ஓகே ஆகிவிடும் என்று சொல்கிறார்.
அந்த நேரத்தில் ரோகிணியுடன் மனோஜ் சேர்ந்து எடுத்த போட்டோவை டிபியில் வைத்து அதை ஹரிணியிடம் ரோகிணி காட்ட, அதை பார்த்து ஹரிணி அதிர்ச்சி அடைந்து இவங்க உங்களுக்கு தெரியுமா என்று கேட்க, அதற்கு ரோகிணி இவர்தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு என்னுடைய ஹஸ்பண்ட் என்று சொல்கிறார்.

அடுத்து என்ன நடக்கும்
இதை கேட்டு ஹரிணி அதிர்ச்சியாகி இவருடன் தான் எனக்கு எங்கேஜ்மென்ட் முடிந்து இருக்கிறது என்று சொல்கிறார். இதை கேட்டதும் ரோகிணி கதறி அழுவது போல நாடகம் போடுகிறார். இதனால் இது உண்மை என்று நம்பும் ஹரிணி மனோஜை அசிங்கப்படுத்திவிட்டு போகப் போகிறாரா? அல்லது இதையும் மீறி இவர்களுக்கு கல்யாணம் நடக்கப் போகிறதா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications