Siragadikka Aasai: விஜயா சூழ்ச்சியால் வீட்டை விட்டு வெளியேறும் மீனா! ஸ்ருதி கண்டுபிடித்த உண்மை.. முத்து முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial Promo) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 பிப்ரவரி 23ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரைக்கும் ஆன ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சிந்தாமணி சொல்லிக் கொடுத்த பிளான்படி மீனாவை வீட்டை விட்டு வெளியேற்ற விஜயா நாடகம் போட்டு இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ
சிறகடிக்க ஆசை சீரியலில் ( Siragadikka Aasai serial latest promo) அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. ஏற்கனவே ரோகிணி பற்றிய உண்மைகள் பல வருடங்களுக்கு பிறகு இப்போது மொத்த குடும்பத்திற்கும் தெரிய வந்திருக்கிறது. அதனால் ரோகிணியை விஜயா வீட்டை விட்டு அடித்து துரத்தி இருக்கிறார். அதோடு மனோஜ் வாழ்க்கையில் இருந்தும் அவரை வெளியேற்றி விடுவதற்காக விவாகரத்துக்கு அப்பேல் செய்து கேஸ் நடந்து கொண்டிருக்கிறது.
அடுத்த சிக்கல்
இதற்கிடையில் மனோஜ்க்கு நீத்துவை திருமணம் செய்து வைப்பதற்காக விஜயா பிளான் போட்டு இருக்கிறார். ஆனால் நீத்து தனக்கும் ரவிக்கும் தான் கல்யாணம் நடக்கும் போகிறது என்ற சந்தோசத்தில் இருக்கிறார். ஏற்கனவே நீத்துவால் தான் ரவி மற்றும் ஸ்ருதி இருவருக்கும் பிரச்சனை நடக்கிறது என்று தெரிந்தும் விஜயா பணத்திற்கு ஆசைப்பட்டு நீத்துவை தன்னுடைய மருமகளாக வேண்டும் என்று பிளான் போடுகிறார்.
விஜயாவின் பிளான்
இதற்கிடையில் இந்த குடும்பத்தை எப்படியாவது பிரிக்க வேண்டும் என்று சிந்தாமணியும் விஜயாவுடன் சேர்ந்து கூட்டு பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். சிந்தாமணி சொன்னதை கேட்டு முத்து மீனாவை வெளியேற்ற விஜயா நாடகம் போட்டு இருக்கிறார். தனக்கு ஒவ்வொரு பிரச்சனையிலும் துணையாக இருந்து தன்னை காப்பாற்றியது முத்துவும் மீனாவும் தான் என்ற நன்றியை மறந்து விஜயா செய்யும் சூழ்ச்சி இனி அவருக்கு தான் வினையாக போகிறது.

சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோடு
அதாவது நேற்றைய எபிசோடில் ஸ்ருதி மீனாவிடம் ஆன்ட்டி எனக்கு போன் பண்ணி நம்ம வீட்டில் ஒரு பூஜை நடக்கிறது அதில் நீ கண்டிப்பா கலந்து கொள்ளணும் என்று சொன்னாங்க, ஆனா அவங்க இப்படி செய்றாங்கன்னா இதுல ஏதோ ஒரு பிளான் இருக்குன்னு எனக்கு தோணுது என்று சந்தேகப்பட்டிருந்தார். அதுதான் இப்போது நடந்திருக்கிறது.
அடுத்த வார ப்ரோமோ
அடுத்த வாரத்திற்கான ப்ரோமோவில், ஒரு லேடி சாமியாரை வீட்டிற்கு வர வைத்திருக்கும் விஜயா அதற்கான பூஜை ஏற்பாடுகளை செய்கிறார். பிறகு அந்த சாமியாரிடம் கண்ணை காட்ட அவர் இந்த வீட்டு தலைவரின் உயிருக்கே இந்த பொன்னால தான் பிரச்சனை வரப்போகுது... இந்த வீடு நல்லா இருக்கணும்னா உன் வீட்டு ரெண்டாவது மருமகள் இந்த வீட்டை விட்டு வெளியே போகணும் என்று சொல்கிறார்.

சிறகடிக்க ஆசையில் இனி வருவது
இதனால் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். விஜயா மட்டும் லேசாக சிரித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய மாமனார் உயிருக்கு பிரச்சினை என்றதும் தியாகி மீனா வீட்டை விட்டு வெளியேறுவார். அதற்குப் பிறகு சிந்தாமணி மொத்த குடும்பத்தையும் அடிச்சு வெளியே துரத்துவார், அதற்கு பிறகு அவர்களுக்கு முத்து மீனாவும் தான் அடைக்கலம் கொடுப்பார்கள். அப்போது மீனா கர்ப்பமாக இருப்பார். ஆனாலும் தன்னுடைய குடும்பத்திற்காக இவர் ஓடி ஓடி வேலை செய்யப் போகிறார், அதை பார்த்து விஜயா மனம் மாற வாய்ப்பிருக்கிறது.
சிறகடிக்க ஆசை: செல்வத்துக்காக பிரச்சனையில் சிக்கிய முத்து.. மீனா கொடுத்த ஐடியா! மனோஜின் பரிதாப நிலை!
இது ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வந்த கதை தான். அதுதான் இனி இங்கேயும் நடக்கப் போகிறது என்று தெரிகிறது. அதே நேரத்தில் வீட்டை விட்டு போன பிறகு தான் முத்து சிந்தாமணி பற்றிய உண்மைகளை கண்டுபிடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. எது எப்படியோ அடுத்த வாரம் அழுகாட்சி காட்சிக்கு தான் பஞ்சம் இருக்காது.


Click it and Unblock the Notifications
