சிறகடிக்க ஆசை: ஒரே வார்த்தையில் ரோகிணிக்கு ஆப்பு வைத்த விஜயா.. ரசிகர்கள் நினைத்தது நடந்தது
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி விஜயாவிடம் வசமாக சிக்கி இருக்கிறார். மலேசியாவிற்கு போக வேண்டும் என்று விஜயா சொன்னதை கேட்டு ரோகிணி அதிர்ச்சியாக இருக்கிறார். சிறகடிக்க ஆசை சீரியலில் ஆரம்பத்தில் இருந்து ரோகிணி மட்டும் எந்த பிரச்சனையிலும் சிக்காமல் தப்பித்துக் கொண்டே இருக்கிறார். அவருக்கு ஒவ்வொரு வாரம் ஒரு பிரச்சனை வந்தாலும் அதை அப்படியே விஜயா பக்கமும் மனோஜ் பக்கமும் திருப்பி விட்டு விடுகிறார்.
அதிகமான நேரங்களில் முத்து மற்றும் மீனாவிற்கு தான் பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. முத்து மீனாவும் இந்த சீரியலின் கதாநாயகனா அல்லது அவர்கள் தான் இந்த சீரியலில் காமெடி பீசா என்று தெரியவில்லை. மீனா அநியாயத்திற்கும் மாமியார் புராணம் பாடிக்கொண்டிருக்கிறார்.

எந்த பிரச்சனை தனக்கு வந்தாலும் ஐயோ இந்தப் பிரச்சனை வீட்டிற்கு தெரிந்தால் மாமா என்ன செய்வார்? மாமாவுக்கு எதுவும் ஆகிவிடும், அத்தை வீட்டை விட்டு போய்விடுவார் என்று மீனா சொன்ன வார்த்தையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார். இன்றைய எபிசோடில் கூட மீனா மீது விஜயா திருட்டுபழி போட்டு இருக்கிறார்.
ஆனால் விஜயா சத்யாவின் கேசை வாபஸ் வாங்குவதற்காக பணம் வாங்கிய விஷயத்தை முத்து கண்டுபிடித்திருக்கிறார். இந்த உண்மையை மொத்த குடும்பத்தின் முன்பு முத்து சொல்லும் போது கூட மீனா அத்தை இந்த உண்மை எனக்கு தெரிஞ்சிருந்தா நான் இதை வீட்டில் வந்து சொல்லி இருக்கவே மாட்டேன் என்று வீர வசனம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இது பார்க்கும் ரசிகர்களை இவங்களுக்கு வேற வேலையே இல்லையா என்று புலம்ப வைக்கிறது. அதோடு இந்த மீனா எப்போதான் திருந்துவார் என்பது பலருடைய கேள்வியாகவும் இருக்கிறது. அதுபோல ரெண்டு லட்சம் பணத்தை திருடியது ரோகிணித்தான். வழக்கம் போல இந்த முறையும் ரோகிணி தப்பித்துவிட்டார்.
இது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோ ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அதாவது அந்த ப்ரோமோவில் மீனா மற்றும் முத்துவிற்கு விஜயாவால் 5 லட்சம் கடன் வந்துவிட்டது என்பதற்காக அந்த அஞ்சு லட்சத்தையும் விஜயா தான் கொடுக்க வேண்டும் என்று அண்ணாமலை சொல்கிறார்.

இல்லை என்றால் மீனாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். இதனால் வேறு வழி இல்லாமல் விஜயா பணம் கொடுக்கிறேன் என்று சொல்லி விடுகிறார். அப்போது மனோஜ் விஜயாவிடம் நீங்க ஏன் அம்மா பணம் கொடுக்கிறேன் என்று சம்மதிச்சீங்க? இந்த முத்துவும் அப்பாவும் இப்படித்தான் சொல்லுவாங்க பிறகு அப்படியே விட்டுவிடுவார்கள் என்று சொல்கிறார்.

அதற்கு விஜயா நான் அந்த பூக்காரி கிட்ட கடன்காரியா இருக்க விரும்பல. அதனால நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு மனோஜ் என்ன முடிவு என்று கேட்டதும், நீ உடனே மலேசியாவுக்கு டிக்கெட் போடு நாம அங்க போகணும் என்று சொல்கிறார். இதைக் கேட்டு ரோகிணி என்னது மலேசியாவிற்கா என்று அதிர்ச்சியாகிறார். வழக்கம் போல இந்த முறையும் ரோகிணி தப்பித்து விடுவாரா? அல்லது இந்த முறை சிக்க போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications