சிறகடிக்க ஆசை: ரோகிணிக்கு அதிர்ச்சி செய்தி சொன்ன முத்து.. விஜயாவுக்கு பெரிய ஏமாற்றம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளைக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சத்யாவின் மீது கொடுத்த கேஸை வாபஸ் வாங்குவதற்கு விஜயா சம்மதித்து விட்டார் என்று சொன்னதைக் கேட்டு ரோகிணி அதிர்ச்சியில் இருக்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ஒரு வழியாக மக்கள் எதிர்பார்த்தபடியே கதை பயணிக்க தொடங்கி இருக்கிறது. இதுவரைக்கும் இந்த சீரியலில் ரோகிணிக்கு மட்டும் எந்த பிரச்சனையும் பெரியதாக வராமல் அவர் தப்பித்துக் கொண்டே இருந்தார். இதனால் இது ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் செய்யப்பட்டு வந்தது.

ஒவ்வொரு முறையும் முத்து மற்றும் மீனாவிற்கு தான் பிரச்சனை வந்து கொண்டே இருந்தது. சமீபத்தில் கூட சத்யா திருடிய வீடியோவை முத்து செல்போனில் சேவ் பண்ணி வைத்திருந்த நிலையில் அதை ரோகிணியின் உதவியோடு சிட்டி லீக் செய்து இருக்கிறார். இதனால் மீனாவின் குடும்பத்தினர் பிரச்சனையில் இருக்கிறார்கள்.
சத்யா பற்றிய உண்மைகள் தெரிய வந்ததும் சத்யா மீது விஜயா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறார். முத்துவும் மீனாவும் அந்த கம்ப்ளைன்ட்டை வாபஸ் வாங்குவதற்காக எவ்வளவோ கெஞ்சி பார்க்கின்றனர். ஆனால் விஜயா சம்மதிக்காமல் இருக்கிறார். இந்த நிலையில் வக்கீல் நீங்கள் அஞ்சு லட்சம் கொடுத்தால் நாங்கள் இந்த கேஸை முடிச்சு தருகிறோம் என்று பேசி இருக்கிறார்கள்.

முத்து இன்று பல இடங்களில் கஷ்டப்பட்டு பணத்தை வக்கீலிடம் கொடுத்திருக்கிறார். அதை வைத்து வக்கீல் விஜயாவிடம் டீல் பேசுகின்றனர். இறுதியாக விஜயா 2 லட்சம் ரூபாய் தரோம் என்று சொன்னதும் கேஸை வாபஸ் வாங்க சம்மதம் சொல்லி விடுகிறார். இந்த நிலையில் நாளைக்கு என்று வெளியான ப்ரோமோவில் முத்து வீட்டிற்கு வந்து சந்தோஷமாக அப்பா, அம்மா கேஸை வாபஸ் வாங்க சம்மதம் சொல்லிட்டாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அப்போது மனோஜும் ரோகிணியும் ரூமிற்குள் இருந்து வந்து எதற்காக இப்படி கத்திக்கிட்டு இருக்கிற.. நாங்க அம்மா வீட்டுக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்களே என்று கோபமா இருக்கிறோம். நீ என்னன்னா இவ்வளவு சந்தோஷமாக இருக்கிற என்று சொன்னது நானும் அம்மா விஷயத்தை வச்சு தான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று முத்து சொல்கிறார்.

என்ன சொல்ற என்று மனோஜ் கேட்டதும், அம்மா சத்யா மீது கொடுத்த கேஸை வாபஸ் வாங்க சம்மதம் சொல்லிட்டாங்க என்று சொன்னதும் ரோகிணி அதிர்ச்சியில் இருக்கிறார். விஜயா இனி கேஸை வாபஸ் வாங்கினால் சத்யா மீது பிரச்சனை இல்லாமல் போய்விடும் இதை வைத்து சிட்டி மீண்டும் ரோகிணியை மிரட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
ஏற்கனவே சிட்டி 2 லட்சம் பணம் வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அதோடு சிட்டி மற்றும் பிஏவிடம் சிக்கிக் கொண்டு ரோகிணி திணற போகிறார். ரசிகர்கள் எதிர்பார்த்ததுபோல இப்போது ரோகிணிக்கும் பிரச்சனை வர தொடங்கி விட்டது.
பழைய பிஏவுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று தான் சிட்டியிடம் பல லட்சம் வட்டிக்கு வாங்கி இருக்கிறார். ரோகிணி இப்போது சிட்டி 2 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதால் விஜயா கேஸை வாபஸ் வாங்குவதற்காக 2 லட்சம் பணம் வாங்கியதை எடுத்து கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் விஜயாவுக்கும் ரோகிணிக்கும் அடுத்த பிரச்சனை வெடிக்கும். என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications