சிறகடிக்க ஆசை: பணத்தை திருடிய மனோஜ்..ரவியால் குடும்பத்திற்கு வரும் பிரச்சனை..விஜயா கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 14ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
இதில் விஜயா வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து யாருக்கும் தெரியாமல் மனோஜ் அந்தமானுக்கு டிக்கெட் போட்டு இருக்கிறார்.

அதே நேரத்தில் ரவி தன்னுடைய காதலை ஸ்ருதியிடம் சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மனோஜ் வேலை கிடைக்காதது பற்றி விஜயாவிடம் விரக்தியோடு பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு நான் பார்வதி வீட்டுக்கு போயிட்டு வருகிறேன் என்று விஜயா சொல்லிவிட்டு கிளம்ப, மனோஜ் இனி பணத்திற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு அண்ணாமலை விஜயாவிடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்த விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது.

உடனே விஜயா ரூமுக்கு சென்று அங்கு விஜயா வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு மனோஜ் வெளியே கிளம்பி விடுகிறார். மறுபக்கம் மீனா மற்றும் ரவி இருவரும் ஸ்ருதியை பார்க்க ஸ்டுடியோவிற்கு வந்திருக்கின்றனர். அப்போது ரவி ஸ்ருதியிடம் பேசாமல் இருக்க, மீனாவை டப்பிங் பேச ஸ்ருதி அனுப்பி வைத்துவிட்டு ரவியை கூப்பிட்டு உனக்கு என்னை பிடிக்குமா? பிடிக்காதா? நான் என்னை லவ் பண்ணு என்று உன்னை கம்பல் பண்ணல. நீ பதில் சொல்லிட்டு போயிட்டே இரு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு கோபப்பட்ட ரவி உன்னை பிடிக்கும் என்று சொல்ல ஸ்ருதி சந்தோஷப்படுகிறார். அதைத்தொடர்ந்து வீட்டிற்கு வந்த ரோகினி தனக்கு தலை வலிக்குது என்று சொல்ல, மனோஜ் தலையை பிடித்து விட்டுக் கொண்டிருக்கிறார்.அப்போது அந்தமான் போவதற்கு டிக்கெட் புக் பண்ணியாச்சு என்று சொல்லி, அந்த ஒரு லட்சம் ரூபாயில் டிக்கெட் எடுத்தது போக மீதம் இருந்த பணத்தை இது தன்னுடைய சம்பளம் என்று ரோகிணி இடம் கொடுக்க ரோகினி ரொம்பவே சந்தோஷப்பட்டு மனோஜ்க்கு முத்தம் கொடுக்கிறார்.
அதைத்தொடர்ந்து விஜயா வட்டி கட்ட பணத்தை தேட அங்கு பணம் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். உடனே மனோஜிடம் பணம் பற்றி கேட்க அவர் அதுவா என விஷயத்தை சொல்ல வரும்போது அந்த நேரத்தில் ரோகினி அங்கு வந்து விடுவதால் உண்மையை சொல்லாமல் எனக்கு எப்படி தெரியும் என்று ஏமாற்றி விடுகிறார்.

விஜயா வீட்டில் உள்ள எல்லாரிடமும் பணத்தை பற்றி கேட்க யாருக்கும் தெரியாது என்று சொல்ல மனோஜ் திரு திருவென முழிக்கிறார். அப்போது பணம் காணாமல் போச்சுன்னா மனோஜ் கிட்ட தான் கேட்கணும் என்று முத்து கிண்டல் செய்கிறார். கடைசியா விஜயா எடுத்தது யார் என்று எனக்கு தெரிஞ்சு போச்சு. இவளோட தம்பி தான் திருடி இருக்கணும். அந்த திருட்டு பையன் பதுங்கி பதுங்கி வீட்டுக்குள்ள வரும்போது எனக்கு சந்தேகம் இருந்துச்சு என்று சொல்ல, அதற்கு மீனா என் தம்பி மேல பழி போடாதீங்க அவன் படிக்கிற பையன் என்று பதில் கொடுக்கிறார்.
அதற்கு மனோஜூம் அவன்தான் எடுத்திருக்க வேண்டும். பணம் எப்படி கை கால் முளைத்து வெளியே போயிருக்குமா? என்று பழி தூக்கி போட்டு எஸ்கேப்பாக முயற்சி செய்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைந்தது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications