சிறகடிக்க ஆசை: முத்துவிடம் நறுக்குன்னு மீனா கேட்ட கேள்வி.. ரோகிணிக்கு இடியென வந்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 17ஆம் தேதிக்கான எபிசோடில் செல்வத்திற்கு பணம் கொடுத்தும் அவருடைய அம்மா அப்பாவின் திருமண நாளில் முத்துவும் மீனாவும் அசிங்கப்படுகின்றனர். குடித்துவிட்டு அங்கு நடந்த பிரச்சனையை வைத்து மீனா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் முத்து தலை குனிகிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்துவை செல்வத்தின் சொந்தக்காரர்கள் சட்டையை பிடித்து வெளியே தள்ளி விடுகின்றனர். முத்து கீழே விழுந்து அதிர்ச்சியாக அங்கு நடப்பதை பார்க்கிறார். பிறகு அவர்களை அடிக்க பாய்ந்து எழுகிறார். அப்போது செல்வத்தின் மனைவி வந்து மன்னிப்பு கேட்டு சாப்பிடக்கூட முத்துவும் மீனாவும் வேண்டாம் என்று கிளம்பி வருகின்றனர்.

பிறகு வீட்டிற்கு வந்ததும் அண்ணாமலை பங்க்ஷன் எப்படி போச்சு என்று கேட்க, மீனா இவருக்கு ரொம்ப மரியாதை கொடுத்தாங்க மாமா. சொந்தக்காரங்க எல்லாம் வந்து கட்டி புடிச்சு அணைச்சு நல்ல பாசமா பார்த்துக்கிட்டாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று சொல்ல, முன்னாடி எல்லாம் இவன் எந்த இடத்துக்கு போனாலும் இவனை திட்டுவாங்க. ஆனா இப்போ இவனை பாராட்டும் அளவுக்கு இவன் மாறி இருக்கான் என்று அண்ணாமலை பாராட்டுகிறார்.
அதற்கு மீனா, இப்போ இவர் எந்த விஷயத்தையும் யோசித்து என்கிட்ட கேட்டு தான் முடிவு எடுப்பாரு என்று மீனா முத்துவைப் பற்றி பெருமையாக பேசுவது போல சமாளிக்கிறார். பிறகு அண்ணாமலை கிளம்பியதும் முத்து அப்பா கிட்ட அங்க செல்வம் வீட்டில் நடந்ததை சொல்லாததுக்கு தேங்க்ஸ் என்று சொல்ல, நான் எப்படி சொல்வேன் நீங்க அசிங்கப்படுறது எனக்கும் அசிங்கம் தான். உங்களை குத்தி காமிச்சு பேசுறத நினைக்காதீங்க எனக்குள்ள இருக்குற ஆதங்கத்தை தான் நான் பேசினேன் என்று சொல்கிறார்.

அதோடு இந்த மாதிரி குடிச்சிட்டு ஃபங்ஷன் வைக்க வேண்டாம் என்று தான் நான் முதல்ல இருந்தே சொல்லிட்டு இருந்தேன். மத்தவங்கள பாத்துட்டு நாமளும் பெருசா பண்ணனும்னு நினைச்சா இப்படித்தான் ஆகும். செல்வம் அண்ணன் பொண்டாட்டி பொண்ணோட டியூஷனுக்கு பீஸ் கட்ட காசு இல்லன்னு சொல்லி இருக்காங்க. ஆனா குடிக்க இவ்வளவு செலவு பண்ணி இருக்காரு. அந்த பொண்ணோட படிப்புக்கு கொடுத்திருந்தால் கூட புண்ணியம்மா போயிருக்கும் என்று மீனா சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
மறுபக்கத்தில் ரோகிணியின் பழைய பிஏ தினேஷ் கிரிஷ் கிரிக்கெட் விளையாடும் இடத்திற்கு வந்து க்ரிஷிடன் நன்றாக பேசி ஃபோட்டோ எடுத்துக் கொள்கிறார். மறுபக்கத்தில் மனோஜ் தன்னுடைய பாடிகார்ட் சாப்பிடுவதை பார்த்து அதிர்ச்சியாகி நிற்கிறார். மனோஜை பார்த்த ரோகிணி என்ன ஆச்சு என்று கேட்க, முட்டை மட்டும் தான் இப்போதைக்கு போயிட்டு இருக்கு இன்னும் சிக்கன் மட்டன் எல்லாம் on the wayல இருக்கு என்று சொல்ல ரோகிணி இதெல்லாம் தெரிஞ்சு தானே சம்பாதிச்சோம் விடு என்று சொல்கிறார்.
அதற்கு மனோஜ் நான் கூட இவ்வளவு சாப்பாட்டுக்கு இவ்வளவு செலவழிக்க மாட்டேன் ஆனால் இவனுக்காக இவ்வளவு செய்ய வேண்டியது இருக்கு பேசாம இதையெல்லாம் நான் சாப்பிட்டு என் உடம்பை தேத்திடவா என்று கேட்க, நீ என்ன செக்யூரிட்டி வேலைக்கு போக போறியா? என்று ரோகிணி கேட்கிறார். அந்த நேரத்தில் தினேஷ் ரோகிணிக்கு போன் போட்டு ஒரு போட்டோவை அனுப்ப அதை பார்த்து ரோகிணி அதிர்ச்சியாக இருக்கிறார்.

பிறகு தினேஷ் ரோகிணியிடம் கல்யாணி உன் பையன் உன்னை மாதிரியே இருக்கான் என்று சொல்ல, பையனா எதாவது பண்ணுனா அவ்வளவு தான் என்று ரோகிணி கோபப்படுகிறார். அதற்கு தினேஷ் உன் புருஷனுக்கு 2 லெட்டர் வந்திருக்குமே அதை நான் தான் பண்ணினேன் என்று சொல்கிறார். உனக்கு என்ன வேணும் என்று ரோகிணி கேட்க, இப்பதான் கரெக்ட்டா பேசி இருக்கே.. நான் சொல்ற லொகேஷனுக்கு வா என்று தினேஷ் ஃபோனை வைக்கிறார்.
மறுபக்கத்தில் முத்து தன்னுடைய நண்பர்களிடம் செல்வம் வீட்டில் நடந்தது பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு செல்வம் வருகிறார். முத்துவிடம் என் மேல தான் தப்பு மீனா சிஸ்டர் சொன்னது போல நூற்றுக்கு நூறு உண்மை. இப்படி பண்ணிருக்கக் கூடாது மத்தவங்க மாதிரி பெருசா பண்ணனும் நினைச்சது என்னோட தப்பு தான் என்று சொல்லி அழுகிறார். பிறகு காரில் இருந்து ஒரு கவரை எடுத்து விட்டு கொடுக்க, இது என்ன என்று முத்து கேட்கிறார்.
அதற்கு செல்வம் பங்க்ஷன்ல வந்த மொய்க்கவர். நான் இதை பிரிச்சி இன்னும் எவ்வளவு இருக்குன்னு பாக்கல. மீதியை உனக்கு தரனும் என்றால் சொல்லு தந்துடுறேன் என்று மன்னிப்பு கேட்க முதலில் முத்து அதை வாங்க மறுத்து பிறகு வாங்கிக் கொள்கிறார். பணத்துடன் வீட்டிற்கு வந்த மீனாவிடம் செல்வம் சொன்னது போல எனக்கு பணத்தை திருப்பி கொடுத்துட்டான் என்று கோபப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications