சத்யாவால் பைனான்ஸ்காரர்களிடம் மாட்டும் விஜயா.. அங்கு வரும் மீனா.. வெளிவரும் வீடு அடமான பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் இருபதாம் தேதியிலிருந்து 23ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
அதில் விஜயா வட்டி கட்ட வைத்திருந்த பணத்தை மீனாவின் தம்பி திருடி விட்டதால் பைனான்ஸ் காரர்களிடம் விஜயா மாட்டிக் கொள்கிறார்.

அது தெரியாமல் அந்த இடத்திற்கு மீனாவும் வட்டி பணம் கொடுக்க வருகிறார். இந்த நிலையில் விஜயா வீடு அடகு வைத்திருப்பது குடும்பத்திற்கு தெரிய வருமா என்று எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சீரியலில் கலகலப்பு, காதல், சண்டை எல்லாம் கலந்து எபிசோடு இருந்து வருவதால் அதிகமான ரசிகர்கள் இதை தொடர்ச்சியாக பார்த்து வருகின்றனர். இதனால் இந்த சீரியல் டிஆர்பி யிலும் முன்னேறி வருகிறது. தொடர்ச்சியாக சில வாரங்களாகவே விஜய் டிவியில் டிஆர்பி யில் முதலிடத்தில் இந்த சீரியல் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த வார எபிசோட் இரண்டு பேர் வந்து என்கிட்ட பைனான்ஸ் வாங்கி இருக்கீங்க. வட்டி கட்டலனா வேற மாதிரி பிரச்சனை ஆகிவிடும் பார்த்துக்கோங்க என்று மிரட்டுகின்றனர். அதனால் அதிர்ச்சி அடைந்த விஜயா நீங்க போங்க பின்னாடியே நான் வரேன் என்று சொல்லிவிட்டு அலமாரியை திறந்து பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே போகிறார்.

அப்போது மீனாவின் தம்பி சத்யா அவருடைய நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய நண்பர் விஜயாவை பார்த்ததும் நீ பணத்தை திருடாமலே உன் மேல பழி போட்டாங்க. அதுக்கு பதில் கேட்க வேண்டாமா? என்று சொல்ல சத்யாவும் அவருடைய நண்பரும் முகத்தை மறைத்துக் கொண்டு பைக்கில் ஏறி விஜயாவை பின் தொடர்ந்து வந்து அவர் கையில் இருந்த பணப்பையை பிடுங்கி இழுத்து பணத்தை எடுத்துக்கொண்டு போய்விட விஜயா என் பணம்.. என் பணம்.. என்று கத்திக்கொண்டு பின்னாலே ஓடுகிறார்.
அத்தோடு பணத்தை எடுத்துக் கொண்டு பையை மட்டும் சத்யாவும் அவருடைய நண்பரும் தூக்கி வீசி விட்டு சென்று விடுகின்றனர். பணம் இல்லாமல் பையை மட்டும் எடுத்துக் கொண்டு பைனான்ஸ் கம்பெனிக்கு சென்று விஜயா மேனேஜரை பார்க்க போகிறார். அவரிடம் மொத்த பணத்தையும் வை என்று மேனேஜர் சொல்ல மொத்த பணமும் திருடு போயிட்டு என்று விஜயா பயந்தபடியே சொல்கிறார்.

அப்போது கோபமான மேனேஜர் விஜயாவை கூண்டில் அடைக்குமாறு சொல்கிறார். அதற்கு விஜயா தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சி கூத்தாடுகிறார். ஆனாலும் விஜயாவை அங்கிருக்கும் ஒரு பெண் கூண்டுக்குள் அடைத்து விடுகிறார்.
அதைத்தொடர்ந்து அங்கு மீனாவும் வருகிறார். மீனாவை பார்த்ததும் விஜயா அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக பிரமோ முடிவடைந்து இருக்கிறது. அதே நேரத்தில் விஜயா வீட்டை அடமானம் வைத்திருப்பது அம்பலமாகிவிடுமா? என்று ப்ரோமோவில் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே வட்டி கட்ட வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாயை மனோஜ் திருடியிருந்தார். இந்த நிலையில் இந்த பணமும் பரி போய் இருப்பதால் இனி அடுத்து பெரிய பிரச்சனை வர இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications