சிறகடிக்க ஆசை: விஜயாவை கூண்டுக்குள் அடைக்கும் வட்டிக்காரர்.. வீட்டை விட்டு கிளம்பும் முத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 21ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் வட்டி கட்ட போன இடத்தில் விஜயாவிற்க்கு மீனாவின் தம்பியால் பிரச்சனை ஆகிறது.

siragadikka aasai serial September 21th episode full update

அதே நேரத்தில் தனக்கு வரும் மிரட்டல்கள் குறித்து ரோகினி பயந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் விஜயா, ரோகினிக்கு போன் போட்டு மலேசியாவில் இருந்து உன்னுடைய தாய்மாமா போன் பண்ணாங்க. உங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லையாம். உன்னை பாக்கணும்னு ஆசைப்படுறாராம். அதனால அநேகமா நம்ம எல்லாரும் மலேசியா போக வேண்டி இருக்கும் என்று சந்தோஷமாக சொல்ல அதைக் கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.

siragadikka aasai serial September 21th episode full update

அடுத்ததாக ரோகிணி இது பற்றி யோசித்து யாரோ புதுசா கேம் விளையாடுறாங்க என்று நினைத்துக் கொண்டு அந்த நம்பரை எனக்கு கொடுங்க என்று கேட்கிறார். ஆனால் விஜயா என்னமா உனக்கு உன் தாய்மாமா நம்பர் கூட தெரியாதா? அது கூட நீ வச்சிருக்க மாட்டியா? எனக்கு அவர் பிரைவேட் நம்பரில் இருந்து தான் போன் பண்ணாரு. உனக்கு போன் பண்றதா சொல்லி இருக்காரு, நல்ல விதமா பேசு என்று சொல்லி போனேன் வைத்து விடுகிறார்.

அதைத் தொடர்ந்து சிறிது நேரத்திற்குள் வீட்டிற்கு இரண்டு பேர் வந்து நிற்க அதை பார்த்ததும் விஜயா மலேசியாவில் இருந்து தான் ரோகிணியின் சொந்தக்காரங்க வந்திருப்பதாக நினைத்து பேச அவர்கள் நாங்க பைனான்ஸில் இருந்து வந்திருக்கும் நீங்க வட்டி கட்டல என்று திட்ட, விஜயா நீங்கள் போங்க உங்க பின்னாடி நான் வந்துருவேன் என்று அவர்களை சமாளித்து அனுப்பி வைக்க, அந்த நேரத்தில் அண்ணாமலையும் அங்கு வர அண்ணாமலையிடம் ஏமாற்றிவிட்டு நான் பார்வதியை பார்த்து விட்டு வருகிறேன் என்று சொல்லி அண்ணாமலைக்கு தெரியாமலே பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பி போகிறார்.

அந்த நேரத்தில் முத்து வட்டிக்காரருக்கு பணம் கட்ட வேண்டும் என்று கிளம்ப அப்போது மீனா நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன் என்னை அங்க கூட்டிட்டு போங்க, என்று சொல்ல சரி என்று முத்து மீனாவை கூட்டிவிட்டு கிளம்புகிறார். அதே நேரத்தில் சத்தியா அவருடைய நண்பன் சிட்டியுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது வீட்டில் நடந்த விஷயங்களை பற்றி சொல்ல உன் மீது வீண்பழி போட்டதுக்கு அவங்களுக்கு பதிலடி கொடுக்கணும் அதுக்கு என்கிட்ட ஒரு திட்டம் இருக்கு என்று சொல்லி விஜயா பணத்தை திருட பிளான் போடுகிறார்.

siragadikka aasai serial September 21th episode full update

முதலில் அதற்கு சத்யா பயப்பட பிறகு சிட்டியின் பேச்சைக் கேட்டு மனம் மாறுகிறார். அந்த நேரத்தில் விஜயா பணத்தோடு அந்த வழியாக வர விஜயா கையில் இருந்த பேக்கை பிடுங்கி விட்டு சத்யாவும் அவருடைய நண்பரும் பைக்கில் போகின்றனர். அப்போது விஜயா என் பணம் என் பணம் என்று கத்த பேக்கில் இருந்த பணத்தை மட்டும் எடுத்துவிட்டு பேக்கை கீழே வீசிவிட்டு சத்யாவும் அவருடைய நண்பரும் போய்விடுகின்றனர்,

அப்போது அங்கு இருப்பவர்கள் போலீசுக்கு கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று சொல்ல, அதற்கு விஜயா வேண்டாம் என்று சொல்லிவிட்டு எனக்கு இன்னொரு வேலை முக்கியமா இருக்கு என்று சொல்லி பைனான்ஸ்காரரை பார்க்கப் போகிறார். அவரிடம் நடந்த நிகழ்வுகள் பற்றி சொல்ல அவர் அதை நம்பாமல் விஜயாவை அங்கிருக்கும் கூண்டுக்குள் அடைத்து போட சொல்கிறார்.

அங்கிருக்கும் ஒரு பெண் விஜயாவை தரதரவென்று இழுத்து குடோனுக்குள் அடைக்கிறார். விஜயா உள்ளே இருந்து கத்திக்கொண்டே இருக்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது. அதைத் தொடர்ந்து நாளைக்கான எபிசோடில் அந்த இடத்திற்கு மீனாவும் வருகிறார். இந்த நிலையில் விஜயாவின் ஏமாற்று வேலை குடும்பத்திற்கு தெரிய வருமா? என்பது நாளைக்கு தெரியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+