சிறகடிக்க ஆசை: விஜயா செய்த திருட்டுத்தனத்தை அம்பலப்படுத்திய மீனா.. முத்து கோபத்தில் எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 22ஆம் தேதி எபிசோடு வெளியாகியிருக்கிறது.
அதில் விஜயா வீட்டிற்கு தெரியாமல் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்தது மீனா மூலமாக குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கிறது.

இதனால் முத்துவும், அண்ணாமலையும் கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மீனா மற்றும் முத்து இருவரும் காரில் வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது முத்து என்னுடைய அம்மா கடைசி நேரத்தில் அந்த மனோஜ் பையனை காப்பாத்திட்டாங்க. அவன் தான் ஏதோ திருட்டு வேலை பண்ணி இருக்கான் என்று சொல்லிக் கொண்டு வருகிறார்.

அப்போது மீனா வீட்டிற்கு போகும்போது கொஞ்சம் பழம் வாங்கிட்டு போ என்று முத்து சொல்ல, சரி என்று காரை விட்டு இறங்குகின்றனர். அந்த நேரத்தில் முத்துவிற்கு ஒரு சவாரி வந்துவிட நான் பைனான்ஸ் வேற கட்டவில்லை நேரத்துக்கு போகலனா அந்த ஆளு திட்டுவாரு. நீ இதை போய் கொடுத்துவிடுவாயா என்று மீனாவிடம் முத்து கேட்க, அதற்கு சரி என்று மீனா அந்த பணத்தை வாங்கிக் கொண்டு பைனான்ஸ் ஆபீஸ்க்கு போகிறார்.
அங்கு பணத்தை கட்டிக் கொண்டிருக்கும் போது ஒரு பெண் கத்தி அழுவது போன்று குரல் கேட்கிறது. அது பற்றி விசாரிக்க அங்கிருந்த பெண் அந்த அம்மா வீட்டுக்கு தெரியாம பத்திரத்தை வைத்து 17 லட்சம் ரூபாய் பணம் வாங்கி இருக்கு. வட்டியும் கட்டல. அதனாலதான் புடிச்சு அடைச்சு வச்சிருக்கோம் என்று சொல்கிறார். பிறகு மீனா கீழே இறங்கி வெளியே கிளம்பும்போது அந்த நேரத்தில் அந்த கத்துற குரல் விஜயா போன்று இருக்க சந்தேகப்பட்டு மீனா அங்கு போய் பார்க்கிறார்.

அப்போது மீனாவை பார்த்ததும் விஜயா ஐயோ இவா எங்க இங்க வந்தா என்று ஒளிந்து கொள்ள, பிறகு மீனா அத்தை அத்தை ஏற்று கூப்பிட்டதும் உள்ளிருந்து வெளியே வருகிறார். உடனே மீனா முத்துவுக்கும் அண்ணாமலைக்கும் போன் பண்ணி தகவலை சொல்ல அங்கு எல்லோரும் வந்து விடுகின்றனர். பிறகு பைனான்சியரிடம் விசாரிக்கும் போது விஜயா பத்திரத்தை வைத்து 17 லட்சம் ரூபாய் வாங்கிய விஷயம் தெரிய வருகிறது. இதனால் அண்ணாமலை விஜயாவை சத்தம் போட, முத்து இவங்க அவனை விட பெரிய பிராடாக இருப்பாங்க போல என்று திட்டுகிறார்.
அதை பார்த்த பைனான்சியர் உங்க சண்டை எல்லாம் வீட்டில போய் வச்சுக்கோங்க. இது தொழில் நடக்கிற இடம் இங்க சண்டை போடக்கூடாது நான் ஏற்கனவே இந்த அம்மாகிட்ட வீட்டில் இருக்கவங்க எல்லாரையும் கூட்டிட்டு வந்து கையெழுத்து போடணும்னு சொல்லி இருக்கேன். இப்போ எல்லாரும் கையெழுத்து போடுங்க என்று சொல்ல, நான் எதுக்கு கையெழுத்து போடணும்? நான் போட முடியாது என்று முத்து சத்தம் போட, அண்ணாமலை என்ன பண்ணி தொலைக்குறது என் பொண்டாட்டியா போயிட்டா அப்படியே விட்டுட்டு போகவும் முடியாது. கையெழுத்து போட்டு தொலைகிறேன் என்று கையெழுத்து போடுகிறார்.

அடுத்ததாக முத்து ரவிக்கு போன் போட்டு அவசரமாக வரச் சொல்லி விஷயத்தை சொல்ல ரவியும் வந்து சேர்ந்துவிட ரவியும் கையெழுத்து போடுகிறார். எல்லோரும் கையெழுத்து போட்டுக் கொடுத்ததும் விஜயாவை பைனான்சியர் வெளியே விடுகிறார். பிறகு வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விஜயாவை ஹாலில் நடுவில் உட்கார சொல்லி முத்து மிரட்டுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications