சபதத்தில் ஜெயித்து பணத்தை கொடுத்த ரோகினி.. பிரச்சனையில் மாட்டி விட்ட விஜயா..முத்துவின் அதிரடி முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் செப்டம்பர் 25ஆம் தேதிக்கான எபிசோட் வெளியாகி இருக்கிறது.
அதில் அனைவரிடமும் ரோகினி 4 நாளுக்குள் பணத்தை தத்து விடுவார் என்று விஜயா சபதம் போட்டதால் ரோகினி தன்னுடைய பியூட்டி பார்லரை வேறு ஒருவரின் பிராண்டுக்கு மாற்றி விட்டார்.

அதே நேரத்தில் ரோகினிக்கு பழைய பிஏவாலும் பண பிரச்சனை வருகிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் முத்துவும் மீனாவும் ரூமில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மீனா முத்துவிடம் அத்தை ரொம்ப பாவம். அவங்க ரொம்ப அழுது புலம்பிட்டு இருந்தாங்க என்று சொல்ல, முத்து அவங்களா பாவம்? எவ்வளவு பெரிய வேலை பார்த்து இருக்காங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் விஜயா ஏதோ ஒரு தைரியத்துல சவால் விட்டுட்டு இப்ப பணத்துக்கு என்ன பண்றதுன்னு தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மீனா முத்துவிடம் அத்தை எப்படி பணத்தை தருவாங்க ஒருவேளை ரோகிணி அப்பாகிட்ட கேட்பாங்களோ என்று பேசிக் கொண்டிருக்க, அதை வெளியில் இருந்து கேட்ட விஜயாவிற்கு இது நல்ல ஐடியாவாக படுகிறது.
உடனே ரோகிணியிடம் சென்று உன்னுடைய அப்பா கிட்ட பேசு அவர் இப்போ உன்கிட்ட பேசணும்னு சொல்லி இருக்காரு. எப்படியாவது அப்பா கிட்ட கேட்டு பணத்தைக் கேட்டு நம்முடைய மானத்தை காப்பாத்திரு இதை விட்டா வேற வழி கிடையாது என்று சொல்ல, ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். முதலில் முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்த ரோகினி பிறகு வேறு வழி இல்லாமல் நான் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

பியூட்டி பார்லர் வந்த ரோகினி தன்னுடைய தோழியிடம் பணத்துக்கு என்ன பண்றதுன்னு தெரியல என்று புலம்பிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் பிஏ போன் செய்து ரோகிணிக்கு நான் தான் தாய்மாமன் வசீகரன் பேசுகிறேன் என்று சொல்ல ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். பிறகு நான் உன் வீட்டில் உண்மையை சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் எனக்கு ஐம்பதாயிரம் பணம் தரணும் உன்னால தான் எனக்கு வேலையும் போயிடுச்சு. என் குடும்பமும் என்கிட்ட இல்லாம போயிடுச்சு. இப்ப ஹாஸ்பிடல் பீஸ் கட்டணும் எனக்கு 50000 வேணும் என்று மிரட்டுகிறார்.
அதைத் தொடர்ந்து ரோகிணி தன்னுடைய தோழியிடம் தான் பியூட்டி பார்லரை வேறு ஒருவர் பிராண்டுக்கு மாற்ற போவதாக சொல்கிறார். அதற்கு அவர் வேண்டாம் என்று தடுக்க எனக்கு இப்போதைக்கு வேற வழி தெரியல. பியூட்டி பார்லர் கனவை விட இந்த வாழ்க்கையை காப்பாற்றுகிறது தான் முக்கியம் என்று பியூட்டி பார்லரை இன்னொருவரின் பிராண்டுக்கு மாற்ற முடிவு செய்கிறார்.

அவர்கள் ரோகினிக்கு 12 லட்சம் ரூபாய் தருவதாக சொல்ல ரோகிணியும் சம்மதம் சொல்கிறார். பிறகு தன்னுடைய தோழியிடம் காரணம் அந்த மீனாதான். ஆனா அவளை சும்மா விடமாட்டேன் ஏதாவது விஷயத்தில் என்கிட்ட மாட்டுவா, அதுக்கு பிறகு இருக்கு என்று கோபப்படுகிறார். அதைத் தொடர்ந்து பணத்தை வீட்டில் கொண்டு வந்து முத்துவிடம் கொடுக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைந்தது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications