சிறகடிக்க ஆசை: ரவி திருமணத்தை பற்றி பேசிய மீனா.. அடுத்ததாக அவமானப்பட்ட விஜயா..ரோகினிக்கு வரும் ஆப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் ரவியின் திருமண பேச்சு வார்த்தையை வீட்டில் தொடங்கி இருக்கின்றனர்.

siragadikka aasai serial September 28th to 30th promo and Episode Highlights

அதே நேரத்தில் ரவி திருமண விஷயத்திலும் விஜயாவிற்க்கு அவமானம் கிடைக்கிறது. அதை பற்றி முத்து கலாய்த்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த சீரியல் கதைக்களம் வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் தற்போது இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

siragadikka aasai serial September 28th to 30th promo and Episode Highlights

ஏற்கனவே சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா தன்னுடைய மகன் ரவிக்கு பணக்கார வீட்டில் திருமணம் செய்து வைக்க வேண்டும், ஏற்கனவே வீட்டில் முத்து அடிக்கடி என்னை குறை சொல்லிக் கொண்டே இருக்கிறான். ரவியின் மனைவியும் பணக்கார வீட்டு பெண்ணாக இருந்தால் எனக்கு கூடுதல் பலமாக இருக்கும். ஏற்கனவே ரோகிணி பணக்கார வீட்டு பெண் என்று தன்னுடைய தோழி பார்வதியிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் ரவியும் ஸ்ருதியும் காதலித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த விஷயம் ஸ்ருதியின் வீட்டிற்கு தெரிந்திருக்கும் நிலையில் ஸ்ருதியின் அப்பா சுருதிக்கு வேற திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ஸ்ருதியோடு பழகக் கூடாது அப்படி பழகினால் நானே உன்னுடைய கைகளை உடைத்து விடுவேன் என்று ஏற்கனவே முத்துவும் ரவியை மிரட்டி இருந்தார். இந்த நிலையில் ரவி ஸ்ருதியின் திருமணம் நடைபெறுமா? இல்லையா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

siragadikka aasai serial September 28th to 30th promo and Episode Highlights

இந்த நிலையில் இப்போது வெளியான ப்ரோமோவில் ரவி வீட்டிற்கு வருகிறார். அப்போது மீனா ரவியிடம் வீட்டில் உங்களுக்கு கல்யாணம் பேச்சு எடுத்தாச்சு. பொண்ணும் பாத்தாச்சு என்று சந்தோஷப்பட்டு, யாருன்னு தெரியுமா? நம்ம பரசு அங்கிள் இருக்காங்கல்ல அவரோட பொண்ணு தான் என்று சொல்கிறார். அதை கேட்டு ரவி அதிர்ச்சியடைந்து நிற்கிறார்.

அதைத்தொடர்ந்து விஜயா ரவியிடம் உங்க அப்பா உனக்கு எந்த மாதிரி இடத்துல எல்லாம் பொண்ணு பார்த்து இருக்காரு பாரு என்று நக்கல் செய்கிறார். அந்த நேரத்தில் முத்து வீட்டிற்குள் வேகமாக வருகிறார். அப்போது அண்ணாமலை முத்துவை வாப்பா முத்து பரசு என்ன சொன்னான் என்று கேட்க, அதற்கு முத்து நான் அங்கு நடந்தது அப்படியே சொல்றேன் என்று அங்கு நடந்ததை அப்படியே நடித்துக் காட்டுகிறார்.

siragadikka aasai serial September 28th to 30th promo and Episode Highlights

அப்போது அண்ணாமலை வீட்டுக்கு என் பொண்ண மருமகளா அனுப்பி வைக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷம் தான். நான் கொடுத்து வச்சிருக்கணும். ஆனா உன் அம்மாவை நினைச்சா எனக்கு பயமா இருக்கு என்று பரசு சொன்னதாக முத்து நடித்துக் காட்டுகிறார். அதை பார்த்து விஜயா கடும் கோபத்தில் முறைத்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக பிரமோ கலகலப்பாக முடிவடைந்து இருக்கிறது. ஆனால் எபிசொட்டில் இனிதான் பரபரப்பு ஏற்பட இருக்கிறது.

ஏற்கனவே ரவி ஸ்ருதியை காதலித்து வருவதால் ரவி அவர் ஆசைப்பட்ட ஸ்ருதியை திருமணம் செய்தால், ரோகினிக்கு அடுத்த பிரச்சனை ஸ்ருதியால் தான் வரும். அதே நேரத்தில் விஜயா ரோகினி தான் பணக்கார வீட்டு பெண் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் உண்மையில் ரோகிணியின் நிலைமை தெரியும் போது விஜயா ஸ்ருதியின் பக்கம் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்போதும் ரோகிணிக்கு தான் பிரச்சனை வர இருக்கிறது. ஆனால் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+