சிறகடிக்க ஆசை: முத்து கேட்ட கேள்வி.. கிருஷ் விஷயத்தில் ரோகிணிக்கு அதிர்ச்சி கொடுத்த அம்மா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 6ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணியின் அம்மாவை சந்தித்த முத்துவும் மீனாவும் கிரிஷை தத்தெடுப்பது பற்றி பேச அதற்கு ரோகிணியின் அம்மா ரோகிணியிடம் முக்கிய முடிவு ஒன்றை சொல்கிறார்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ரோகிணி அம்மாவிற்கு ஃபோன் போட்டு நலம் விசாரிக்கிறார். பிறகு முத்துவும் மீனாவும் அங்கு வரும் விஷயத்தை சொல்லி க்ரிஷை அவங்க கண்ணுல காட்டாத என்று சொல்கிறார். அதை எப்படி முடியும் என்று அம்மா கேட்ட, பக்கத்து தெருவுல இருக்கிற நம்ம சொந்தக்காரங்க வீட்டுல கொண்டு விட்டுவிடு. முடிஞ்சா அவங்களை இன்னொரு முறை இந்த வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொல்லி அனுப்பிவிடு என்று ரோகிணி மிரட்டுகிறார்.

siragadikka aasai serial vijay tv

மறுபக்கத்தில் ரவி கடலை மிட்டாய் செய்து கொண்டிருக்க மீனாவும் ஸ்ருதியும் டேஸ்ட் பார்த்து செமையா இருக்கு என்று பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் ரவி நீங்க கிருஷ் பார்க்கப் போறோம்ன்னு சொன்னீங்க இதுவும் கொஞ்சம் எடுத்துட்டு போங்க என்று சொல்லிக் கொண்டிருக்க விஜயா கிச்சனுக்குள் வந்ததும் ஸ்ருதி மீனாவிடம் சண்டை போடுவது போல பேச அதை பார்த்த சந்தோஷப்படும் விஜயா இப்பதான் கரெக்டா பேசுற என்று சொல்கிறார்.

பிறகு ரவி கடலைமிட்டாய் செஞ்சு இருக்கேன் டெஸ்ட் பண்ணி பாருங்க என்று சொல்ல விஜயா சாப்பிட்டு பார்த்துவிட்டு சூப்பரா இருக்கு நானும் பார்வதி வீட்டுக்கு தான் போறேன் கொஞ்சம் கொடு என்று சொல்ல ரவி பாக்ஸில் போட்டு கொடுக்கிறார். அடுத்த கட்டத்தில் முத்துவும் மீனாவும் க்ரிஷ் வீட்டிற்கு வர ரோகிணியின் அம்மா அவர்கள் க்ரிஷை காணவில்லை என்று கேட்க,

siragadikka aasai serial vijay tv

அவனுக்கு உடம்பு சரியில்ல. அதனால பக்கத்து தெருவில் இருக்கிற சொந்தக்காரங்க வீட்டில் விட்டு இருக்கிறேன் என்று சொல்கிறார். இப்போ கூட உங்க பொண்ணு வராதா என்று முத்து கோபப்படுகிறார். பிறகு தாங்கள் தத்தெடுக்க ஆசைபடும் விஷயம் பற்றி கிரிஷ் பாட்டி இடம் சொல்கின்றனர். எங்களுக்கு குழந்தை பிறந்தாலும் க்ரிஷ் தான் எங்களுடைய முதல் குழந்தை என்று சொல்ல, அதற்கு கிருஷ் பாட்டி எதுவும் பேசாமல் அமைதியாக யோசித்துக் கொண்டிருக்கிறார்.

அதற்கு முத்து ஏன் யோசிக்கிறீங்க உங்க முடிவை உடனே சொல்லுங்க என்று கேட்க, அதற்கு மீனா அப்படியெல்லாம் அவங்க உடனே சொல்ல முடியாது பொறுமையா யோசித்து சொல்லட்டும் விடுங்க என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகின்றனர். பிறகு ரோகிணிக்கு அவருடைய அம்மா போன் போட்டு அவங்க க்ரிஷை தத்தெடுப்பது பற்றி பேசுனாங்க என்று சொல்ல அதற்கு ரோகிணி கோபப்படுகிறார்.

siragadikka aasai serial vijay tv

அதற்கு அம்மா அவங்க கரெக்டா தான் பேசுறாங்க அவங்க குழந்தை மேல ரொம்ப அக்கறையா இருக்காங்க என்று சொல்ல, அதற்கு ரோகிணி நான் அப்போ குழந்தை மேல பாசமா இல்லையா? என்று கேட்க, உனக்கு கிரிஷ் மது அக்கறையே கிடையாது. நான்தான் அவனை வளர்த்துட்டு இருக்கிறேன். நீ அவன் மீது பாசம் காட்டுவது கிடையாது. உனக்கு உன்னுடைய வாழ்க்கை தான் முக்கியம் என்று கோபப்படுகிறார்.

siragadikka aasai serial vijay tv

அதற்கு ரோகிணி உன்னால் தான் என் வாழ்க்கையே இப்படி ஆயிடுச்சு என்று சொல்ல இன்னும் எத்தனை வருஷத்துக்கு இப்படியே சொல்லிட்டு இருப்ப, நீ க்ரிஷ் விஷயத்தில் முக்கிய முடிவு எடுப்பே என்று நானும் பார்க்கிறேன். ஆனால் எடுக்கிற மாதிரி தெரியல. அவங்களாவது அவனை நல்லபடியா பார்த்துக் கொள்ளட்டும் என்று சொல்ல, அவன் இந்த வீட்டுக்கு வந்தா ஏதாவது ஒரு சூழ்நிலையில் என்னை அம்மான்னு கூப்பிட்டா என்னுடைய வாழ்க்கை அவ்வளவுதான் என்று பயப்பட, எப்பவும் உனக்கு உன் வாழ்க்கையை பற்றி மட்டும் தான் கவலை என்று ரோகிணியின் அம்மாவும் கோபப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+