Siragadikka Aasai promo: விஜயாவிடம் வசமாக சிக்கும் கிருஷ் பாட்டி.. மீனாவிடம் மகனுடன் மாட்டிய ரோகிணி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இந்த வாரம் சண்டே ஸ்பெஷல் எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் ரோகிணி தன்னுடைய மகனுடன் மீனாவிடம் வசமாக சிக்குவதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே கிரிஷ் பாட்டி காணாமல் போய் இருக்கிறார் என்று அனைவரும் தேடிக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது விஜயா கண்ணில் கிரிஷ் பாட்டியும் மாட்டுகிறார்.
சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த சம்பவம் தான் இந்த வாரம் நடக்கப்போகிறது. ஏற்கனவே ரோகிணி பற்றிய உண்மைகள் எப்போது குடும்பத்திற்கு தெரியவரும் என்று எதிர்பார்ப்போடு இருந்த ரசிகர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஞாயிற்றுக்கிழமை எபிசோட்டில் தான் ரோகிணி பற்றிய உண்மைகள் குடும்பத்திற்கு தெரிய வந்தது. அதேபோல இப்போது இந்த வாரமும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் பெரிய சம்பவம் இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

ரோகிணி பற்றிய உண்மை
ரோகிணி பணக்கார வீட்டு பொண்ணு கிடையாது என்று உண்மை மட்டும் இப்போது குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கிறது. ஆனால் அவருக்கு ஏற்கனவே கல்யாணம் முடிந்து ஒரு குழந்தை இருக்கும் உண்மை குடும்பத்திற்கு தெரியாமலேயே ரோகிணி மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தன்னுடைய மகனை வித்யா வீட்டில் மறைத்து வைத்து அம்மாவை கண்டுபிடிக்க வேண்டும் என்று ரோகினி போட்ட பிளான் இப்போது அவருக்கே ஆப்பாக மாறுகிறது.
விஜயா பார்த்த காட்சி
அதாவது விஜயா தான் இனி டான்ஸ் கிளாஸ் தொடங்கப் போவதில்லை என்பதால் புதியதாக என்ன செய்யலாம் என்று சிந்தாமணி மற்றும் பார்வதியுடன் பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் மார்டன் டிரஸ்ஸில் விஜயா ஒரு ஆட்டோவில் சிந்தாமணி மற்றும் பார்வதியுடன் ஏறப்போகிறார். அப்போது அந்த பக்கமாக ரோட்டில் ரோகிணியின் அம்மா நடந்து வந்து கொண்டிருக்கிறார். அதை விஜயா பார்த்து விடுகிறார்.
மீனா என்ட்ரி
அதுபோல மறுபக்கத்தில் ரோகிணி வித்யா வீட்டில் ஒரு வாரத்திற்கு தன்னுடைய மகன் கிரிஷை மறைத்து வைக்க சொல்கிறார். அப்போது அந்தப் பக்கமாக வந்த மீனா வித்யா வீட்டிற்கு வருகிறார். வித்யா மீனாவை பார்த்ததும் ரோகிணி மற்றும் கிரிஷை ஒரு ரூமிற்குள் மறைத்து இருக்க சொல்லி இருக்கிறார். அந்த நேரத்தில் வீட்டிற்குள் வந்த மீனா தன்னுடைய பைக் ரிப்பேர் ஆகி விட்டதாகவும் ஸ்டார்ட் பண்ணினால் ஆகவில்லை என்று உங்களுக்கு தெரிந்த மெக்கானிக் யாராவது இருக்காங்களா என்று விசாரிக்கிறார்.
மாட்டிய ரோகிணி
பிறகு மீனா வீட்டை விட்டு வெளியே போகும் போது கிரிஷ் உடைய செருப்பை பார்த்து விடுகிறார். இது கிரிஷ் உடையது தானே என்று கேட்டதும் வித்யா முழித்துக் கொண்டிருக்கிறார். இதனால் தன் மீது எந்த தப்பும் வந்து விடக்கூடாது என்று ரோகிணி பற்றிய உண்மைகளை சொல்லப் போகிறாரா? அல்லது வழக்கம்போல ஏமாற்றப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications